முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

இந்தியா

ரலாறு அபாயகரமானது. பிசாசாக உருமாறி மக்களை ஆட்கொண்டு ஆட்டிப்படைப்பது. நம் நாட்டின் வரலாறு என்னும் பெயரில் எழுதப்பட்டிருப்பது, பரப்பப்படுவது பெரும்பாலும் கடந்த காலத்தின் உண்மையான சித்தரிப்பு அல்ல. எழுதுபவர்களின் கண்ணோட்டத்திற்கு ஏற்ப, அவர்களது குறுகிய சாதி, சமய, அரசியல் தேவைகளுக்கு ஏற்றவண்ணம் திரித்து, மறைத்து, கூட்டிக்கழித்து எழுதப்பட்டிருப்பது. சமுதாயப் பொறுப்புணர்வு இல்லாமல், தங்கள் துவேஷங்களையே வண்ணக் கலவையாக்கி வரலாற்றைத் தீட்டியிருக்கிறார்கள் பல மேதாவிகள்.
‘நம் நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் இருவேறுபட்ட இனங்கள், வேறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்கள்… அவர்களிடையே பாலமிட முடியாத பிளவுகள் காலங்காலமாக இருந்திருக்கின்றன…’ என்பவை போன்ற மதவாதக் கருத்துகள் இத்தகைய வக்கரித்த வரலாற்றின் வார்ப்புகள்தாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நம் நாட்டின் வரலாறு சொல்லொணாச் சிதைவுக்கு உள்ளாயிற்று. தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட மக்களைப் பிரித்தாளும் ராஜதந்திரத்தின் அற்புதக் கருவியாக வரலாற்றை ஆங்கிலேயர் பயன்படுத்தினர். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை வலியுறுத்த, அதற்கு முன்னர் முஸ்லிம்கள் ஆண்ட காலத்தை இருண்டகாலமாகச் சித்தரித்தனர். முஸ்லிம் மன்னர்களைக் கொடுங்கோலர்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும் மதவெறியர்கள் என்றும் இந்தியக் கலாச்சாரத்தைச் சீரழித்தவர்களென்றும் காட்டி, அவர்களது கொடிய ஆதிக்கத்திலிருந்து இந்துக்களை மீட்கவந்த ரட்சகர்களாகவும் கருணா மூர்த்திகளாகவும் தங்களைச் சித்தரித்துத் தங்கள் ஆதிக்கத்தை நியாயப் படுத்தினர். திட்டமிட்டு, நாசூக்காக வரலாற்றில் விஷத்தைக் கலந்தனர்.

இப்படி விஷமத்தில் பிறந்த வரலாறு, நம் நாட்டின் சில தலைவர்களுக்கும் மதவாதப் பிரச்சாரகர்களுக்கும் மிகச்சிறந்த கருவியாகப் பயன்பட்டது. இன்று நம் நாட்டில் தலை விரித்தாடிக்கொண்டிருக்கும் மதத் துவேஷமும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் குடித்துள்ள மதக் கலவரங்களும் இத்தகைய வரலாற்றுத் தத்துவம் மக்களிடையே பரப்பப்பட்டதன்விபரீத விளைவுகள்தாம்.

இந்து-முஸ்லிம் மன்னர்கள்

  • பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் இப்பகுதியில் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார்.

  • ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில் பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான்  காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார்.

  • இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!

  • இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும்.

முஸ்லிம் மன்னர்கள் மதவெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்களை இடித்தார்கள் என்பது இன்று அனைத்து மக்களாலும் நம்பப்படும் ‘உண்மை’யாகிவிட்டது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள வேண்டும். பல முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களைக் கட்டியும் உள்ளனர். மகதராஷ்டிரத்தின் மராத்துவாடா இந்து, முஸ்லிம் கலாச்சாரங்கள் பெருமளவு ஒன்றாகக் கலந்த பகுதி. இப்பகுதியில் மிகப் பெரிய மதவெறியராகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஓளரங்கசீப் எண்பதுக்கும் மேற்பட்ட இந்துக் கோயில்களைக் கட்டியுள்ளார். அவர் இப்பகுதியில் கட்டிய மசூதிகளைவிடக் கோயில்கள் தான் அதிகம்.

ஓளரங்கசீப் சதாராவிலிருந்த இந்துக் கோயிலை இடித்தார் என்பது உண்மை. அதற்குக் காரணம் மதவெறியல்ல. அக்கோயிலில்பெருமளவு நிலைபெற்றிருந்த தேவதாசி முறைதான்  காரணம் என டாக்டர். பி.வி. ரானடே என்னும் வரலாற்று அறிஞர் குறிப்பிடுகிறார். ஜெய்னா என்னும் ஊரில் உள்ள கணபதி கோயிலுக்கு ஓளரங்கசீப் தானப் பத்திரம் எழுதி அளித்தார். புனே மாவட்டத்தில் சின்சுவாட் என்னும் இடத்தில் உள்ள கணபதி கோயிலை 16ஆம் நூற்றாண்டில் கட்டியவர் பிஜாப்பூர் சுல்தான் இப்ராஹிம் ஆதில்ஷா. தௌலதாபாத்தில் உள்ள சரஸ்வதி பௌதி என்னும் புண்ணியக் கிணற்றை கி.பி.1335ஆம் ஆண்டு கட்டுவித்தவர் முகமது பின் துக்ளக். இதில் விடுவதற்கான தண்ணீரை  துக்ளக் பிரயாகையிலுள்ள திரிவேணி சங்கமத்திலிருந்து வருவித்தார். டெல்லி சுல்தானிய அரசை நிறுவிய முகமது கோரி வெளியிட்ட ஒரு நாணயத்தில் லக்ஷ்மி உருவமும் மற்றொன்றில் சிவனின் ரிஷப வாகனமும் பொறிக்கப்பட்டிருந்தன.

முஸ்லிம் மன்னர்கள் பலர் இந்துப் பெண்களை – குறிப்பாக ராஜபுதனத்து அரச குடும்பத்துப் பெண்களை – மணந்து கொண்டனர் என்பது நமது பள்ளிகளில் கூடக் கற்பிக்கும் வரலாற்றுப் பாடம். ஆகவே முஸ்லிம் மன்னர் பரம்பரையிலேயே இந்து ரத்தம் கலந்திருந்தது.

இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்.

சிவாஜியின் பேரன் சத்ரபதி ஷாஹூ குல்தாபாத்தில் இருக்கும் ஔரங்கசீபின் சமாதிக்குப் பெருமளவு தானம் அளித்தார் என்பதைப் பத்திரங்களின் ஆதாரத்துடன் ரானடே கூட்டிக்காட்டுகிறார்.

நாம் நினைவில்கொள்ள வேண்டியது இன்னொன்று.

கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல. ஆக்கிரமிக்க முற்படும் மன்னர்கள், தங்கள் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் எதிரியை அவமானப்படுத்தவும் எதிரிநாட்டின் முக்கிய ஸ்தலங்களை நாசப்படுத்துவதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்கள். மன்னர்களின் ஆளுமையை நிலைநாட்டும் முக்கியச் சின்னங்களாகக் கோயில்கள் திகழ்ந்தன. ஆகவே தான் தங்கள் பெருமையைப் பறைசாற்ற அரசர்கள் கோயில்கள் கட்டினர். இதன் காரணமாகவே கோயில்கள் அந்நியத் தாக்குதல்களுக்கு முக்கிய இலக்குகளாயின. கோயில்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் இதன் நோக்கம். இந்துக் கோயில்களை இடித்துத் தகர்த்த இந்து மன்னர்களும் உண்டு! எதிரி நாட்டு மசூதிகளை இடித்த முஸ்லிம் மன்னர்களும் உண்டு!

நம் நாட்டில் வரலாற்றுக்கான இலக்கணத்துடன் எழுதப்பட்ட முதல் வரலாற்று நூல் என்று கருதப்படுவது கல்ஹனா எழுதிய ராஜதரங்கிணி என்னும்  காஷ்மீரத்தின் வரலாறு.அதில் ஹர்ஷர் என்ற இந்து மன்னர் காஷ்மீரத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் இருந்த எல்லாத் தெய்வச்சிலைகளையும் நொறுக்கி நாசம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மன்னரின் அமைச்சரவையில் சிலைகளை உடைப்பதற்காகவும் அவற்றை உருக்கி, விலையுயர்ந்த ஊலோகத்தைச் சேகரிப்பதற்காகவும் தனிப்பொறுப்பு வகித்த இந்து அமைச்சர் ‘தேவோத்பாதநாயகா’ (தெய்வத்திற்குத் துன்பம் விளைவிக்கும் அதிகாரி) எனப் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார் என்று புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் கோசாம்பி குறிப்பிடுகிறார்.

மற்றொரு வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா இன்னொரு உண்மையைச் சுட்டிக்காட்டுகிறார். கஜினி முகமது, கோரி முகமது, தைமூர் ஆகிய முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டின் மீது படையெடுத்து வந்து, அக்கிரமங்கள் புரிந்ததைப் பற்றிச் சொல்லும்போது, இதே முஸ்லிம் மன்னர்கள் மத்திய ஆசியாவிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களின் மேல் படையெடுத்துச் சென்று, அங்கிருந்த மசூதிகளை நாசம் செய்ததையும் அந்நாடுகளின் முஸ்லிம் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைவித்ததையும் மறந்துவிடக் கூடாது எனக் கூறுகிறார். இதே போன்று, இந்து மன்னர்களால் அழிக்கப்பட்ட இந்துக் கோயில்கள், புத்த, ஜைனக் கோயில்கள், குறிப்பாகத் தமிழ் நாட்டிலும் கர்நாடகாவிலும் பல உண்டு. இவர்கள் எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறியல்ல. அதிகார, ஆக்கிரமிப்பு வெறியேயாகும். அரசியல் வரலாற்றின் இத்தகைய வேட்டைகளுக்கும் கொடுமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் மதச் சாயம் பூச முயல்வது மக்களைப் பிரித்தாளும் சில்லறைத்தனமாகும்.

நமது கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வரலாறு இகழ்ந்து ஒதுக்கப்பட்ட பாடமாகிவிட்டது. ஆனால் வரலாறு இன்றி எந்தச் சமுதாயமும் வாழ இயலாது. கல்வி நிறுவனங்கள் விஞ்ஞானரீதியான வரலாற்றைப் புறக்கணித்ததன் விளைவு மதவாதிகள் இன்று அதை ‘ஹைஜாக்’ செய்யும் நிலை உருவாகிவிட்டது.

- முனைவர் வசந்திதேவி, 'சக்தி பிறக்கும் கல்வி' என்ற நூல், பக்-111

நன்றி : சமூகநீதி முரசு

Comments   

அபு நிஹான்
+1 #1 அபு நிஹான் 2011-02-26 09:22
அன்பு சத்தியமார்க்க நிர்வாகத்தினருக்கு,

மீண்டும் ஒரு வரலாற்று உண்மையை உலகுக்கு உணர்த்தியதற்காக சகோதரி முனைவர் வசந்தி தேவி அவர்களுக்கும், அதை வெளியிட்ட சமூகநீதி அரசுக்கும், அதை இணையத்தில் வெளியிட்ட சத்தியமார்க்கம் தளத்தினருக்கும் நன்றி
Quote | Report to administrator
Muthalif
0 #2 Muthalif 2011-03-01 15:37
அன்பு நெஞ்சங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

"வரலாறு படிக்காதவன் வரலாறு படைக்கமாட்டான்" என்னும் சொல்லுக்கேற்ப முஸ்லிம்களாகிய நாம் நம் முன்னோர்கள் படைத்த வரலாற்றை இன்னும் அதகமதிகம் படிப்பதன் மூலம் அதனை அறிந்து நாமும் பல வரலாறு படைப்போம். இன்ஷா அல்லாஹ்.

அடுத்து வரும் தலைமுறைக்கு நம்முடைய வரலாறு என்னவாக இருக்கிறது என்பதினையும் ஆராய கடமைப்பட்டுள்ளோ ம் சகோதரர்களே?

வரலாற்றை படிப்போம்.. பரப்புவோம்.. படைப்போம்... இன்ஷா அல்லாஹ்.
Quote | Report to administrator
M. Farooq
0 #3 M. Farooq 2011-03-10 10:08
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!

தங்களுடைய பணி சிறக்க வாழ்த்துகள்!

இந்த கட்டுரையில் எனக்கு முரண்பாடாக தெரிந்த ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,

"இதே போன்று இந்து மன்னர்களும் மசூதிகளை ஆதரித்தனர்."
என்று கூறிவிட்டு சமாதியை ஆதாரம் காட்டப்பட்டுள்ள து. இஸ்லாத்தை முழுமையாக அறியாதவர்கள் மசூதியும், சமாதியும் ஒன்றுதான் என்று தவறாக விளங்கும் வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் இப்படி எழுதி இருந்தால்
Quote | Report to administrator
MOHAMED THAMEEM
0 #4 MOHAMED THAMEEM 2011-03-18 07:36
YES, THESE CONTAMINATED INFORMATION OF OUR PAST SHOULD BE BROUGHT TO ATTENTION OF SECULAR GOVERNMENTS AND SOCIALLY JUSTFUL ORGANIZATIONS AND MEDIA LIKE TEHELKA AND POLITICALY COMMUNIST PARTIES AND MUSLIM LEAQUES MIGHT SUMMON THIS TO PENAL LEVEL TO VOUCH THESE INFORMATION AS TRASH.
Quote | Report to administrator
MOHAMED THAMEEM
0 #5 MOHAMED THAMEEM 2011-03-18 07:39
I THANK THAT SISTER SHANTHI DEVI FOR HER EFFORT TO BRING THE TRUTH TO LIGHT 'HATS OFF MADAM'
Quote | Report to administrator
gani
0 #6 gani 2012-07-04 13:26
isha allah ., mikavum arumaiyana katdurai ithu .,.musilimkalin perumaiyai parai satrum .,.,.,.,.
Quote | Report to administrator
சிவலிங்கம்
0 #7 சிவலிங்கம் 2014-12-03 08:33
### கோயில்கள் இடிக்கப்பட்டதன் காரணம் மதவெறியல்ல ###

முகமது நபிக்கு முன்பு, காபா ஒரு ஹிந்து கோயிலாக இருந்தது. அதிலே 360 சிலைகளை வைத்து அரபிகள் வழிபட்டு வந்தனர்.

இஸ்லாம் ஹிந்துக்களுக்கு எதிரானதல்ல என்றால், உங்கள் நபி அந்த 360 சிலைகளை ஏன் உடைத்தெறிந்து "இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவு செய்து விட்டேன்" என அறிவித்தார்?
Quote | Report to administrator
அப்பாஸ
0 #8 அப்பாஸ 2014-12-03 12:21
ஆதியில் இருந்து மனிதன் இவற்றுக்கெல்லாம ் பயன்தானோ அவற்றையெல்லாம் அறியாமையின் காரணமாய் வழிபட ஆரம்பித்தான். அவை அனைத்தையும் இந்து மதம் என்பதாக எவரேனும் கூறினால் உலகில் அறியாமையின் காரணமாக கல், மண், மலை, நெருப்பு போன்ற விசயங்களை பயத்தின் காரணமாக வணங்கிய எல்லா மனிதர்களையும் இந்து மத நம்பிக்கையாளர்க ள் என்று கருத வேண்டியது வரும்.
Quote | Report to administrator
ABDUL AZEEZ
0 #9 ABDUL AZEEZ 2014-12-03 15:27
சிவலிங்கம் அவர்களே.ஹிந்து மதம் என்பது ஒரு குரிப்பிட்ட வரைபட தேசத்திற்குள் அடங்கிய சமயம். அது உலக அளவில் பறந்து வியாபித்த மதமல்ல.சிலை என்றாலே ஹிந்து மதத்திற்க்கு மட்டும் உரித்தானது அல்ல.பிர மதமும் சிலையை வழி படுகிறார்கள்.பு னித கஃபா முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களால் உருவாக்கப் பட்டது.பின்னோர் கள் மறைந்த பெரியோர்களின் சிலையை மரியாதை நிமித்தம் கஃபாவில் வைத்து வழி படழானார்கள்.இந் த மரியாதை நிமித்தம் மனிதர்களை வழிபடும் எந்த செயலுக்கும்.புன ிதம் கிடையாது போலியான வழிபாட்டுக்கு இறைவன் தடை விதித்ததால் தான் முஹம்மது நபி (ஸல்) கற்சிலையை அகற்றினார்கள்.
மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
சிவலிங்கம்
-1 #10 சிவலிங்கம் 2014-12-03 18:21
### போலியான வழிபாட்டுக்கு இறைவன் தடை விதித்ததால்தான் முஹம்மது நபி (ஸல்) கற்சிலையை அகற்றினார்கள் ###

அதைத்தான் நானும் சொல்கிறேன். "உங்களுக்கு போலி, எங்களுக்கு புனிதம். உங்களுக்கு புனிதம், எங்களுக்கு போலி".

உங்களை அடக்கி வைத்ததால் சமரசம் பேசுகிறீர்கள். நாளை எங்களூடைய கற்சிலைகளையும் கோயில்களையும் உங்களுடைய அல்லாஹ்வின் கட்டளைப்படி அகற்ற மாட்டீர் என்பதற்கு என்ன உத்திரவாதம்?.

குறைந்த பட்சம் காபிர் எனும் வார்த்தையை இந்தியாவிலுள்ள குரான்களில் தடை செய்வீர்களா?. இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், பாக்கிஸ்தான் வெற்றிக்காக பெரும்பாலான முசல்மான்கள் அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள் . எப்படி உங்களையெல்லாம் நம்புவது?.
Quote | Report to administrator
சுல்தான் பாபர்
0 #11 சுல்தான் பாபர் 2014-12-03 21:42
திரு.சிவலிங்கத் தின் வாதம் என்னை ஒரு நிமிடம் உலுக்கிவிட்டது. உண்மைதான், இஸ்லாம் வந்ததே சிலைவணக்கத்தை ஒழிக்கத்தான் என்பதை எந்த முஸ்லிமாலும் மறுக்கமுடியாது.

எம்மதமும் சம்மதம் எனும் செக்யூலரிசம் இஸ்லாத்துக்கு எதிரானது. 1400 வருடங்களுக்கு முன்பு, அண்ணல் நபியிடம் அபு ஜஹல் ஒரு அருமையான செக்யூலரிச கருத்தை எடுத்து வைத்தான்: "6 மாதங்களுக்கு காபாவில் நீங்கள் அல்லாஹ்வை வணங்கி கொள்ளுங்கள், 6 மாதங்களுக்கு நாங்கள் எங்களூடைய சிலைகளை வணங்கிக்கொள்கிற ோம். உங்களையே இந்த நாட்டின் மன்னாராக்கி விடுகிறோம். நமக்குள் அனைத்து பிரச்னைகளும் இனி முடிந்தது" என்றான்.

"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் போகமாட்டேன்" என அண்ணல் நபி எடுத்துரைத்தார் . அப்பொழுதுதான் "குல்யா அய்யுஹல் காபிரூன்" சூராவை அல்லாஹ் இறக்கினான் என்பது குறிப்பிடத்தக்கது.

*****
ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)
109:1. (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே!
109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.
109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.
109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.
109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.
109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”
*****

திரு.சிவலிங்கம் அவர்களே, முஸ்லிம்களை பொருத்தவரை "அல்லாஹ்வுக்கு அப்புறம்தான் இந்தியா. அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாங்கள் தலைவணங்க மாட்டோம், தலையே போனாலும் சரி".

ஒரு காரியம் செய்யுங்கள். உங்களுடைய ஹிந்துத்வா வெறியன் மோடியிடம் சொல்லி "பாரதமாதாவுக்கு தலைவணங்காதவன், இன்று முதல் இந்நாட்டின் பிரஜையல்ல. அவர்கள் வெளியேறட்டும்" என பார்லிமெண்டில் அறிவிக்க சொல்லுங்கள். இன்ஷா அல்லாஹ் 6 மாதங்களில் இன்னொரு பாக்கிஸ்தானை 40 கோடி முஸ்லிம்கள் உருவாக்கிவிடுவோ ம். முஸ்லிம் நாட்டில் முஸ்லிம்கள் வாழட்டும். ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் வாழட்டும். பிரச்னையென்ன?
Quote | Report to administrator
சிவலிங்கம்
-1 #12 சிவலிங்கம் 2014-12-04 11:01
### முஸ்லிம் நாட்டில் முஸ்லிம்கள் வாழட்டும். ஹிந்து நாட்டில் ஹிந்துக்கள் வாழட்டும். பிரச்னையென்ன? ###

பாபரி மசூதியை இடித்த பின் நிறைய பாபர்கள் பிறந்துவிட்டது போல் தெரிகிறது. வாதத்தில் வெல்ல முடியாவிட்டால் "இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கிவிடுவோ ம், அரபுநாட்டில் வேலை செய்யும் ஹிந்துக்களை சவூதி திருப்பி அனுப்பினால் இந்தியா சிதறிவிடும்" என மிரட்டுகிறார்கள ். சவூதிக்கு இவர்களே சொல்லித்தருவார் கள் போலிருக்கிறது.

40 கோடி முஸ்லிம்களை போட் தள்ளவும் முடியாது, விரட்டவும் முடியாது. இவர்கள் இந்நாட்டின் பிரஜைகளல்ல என அறிவித்தால், இதுதான் சாக்கு என்று பாக்கிஸ்தானி ஜிஹாதிக்கள், ஆப்கான் தாலிபான்கள், பங்களாதேசி உலமாக்கள், இந்தியன் முஜாஹிதீன்கள் என அனைவரும் கூட்டு சேர்ந்து இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கி விடுவார்கள். ஒன்றுமே முடியாவிட்டால், பாக்கிஸ்தான் ஆர்மி அல்லாஹு அக்பரென்று அணுகுண்டை காபிர்கள் தலையில் போட்டு விட்டு அல்லாஹ்விடம் போய்விடுவான்.

எதற்கடா வம்பென்று ஒதுங்கி போனால் "சகோதரா, கல்லையும் மண்ணையும் வணங்குகிறாயே, உனக்கு அறிவிருக்கா?. இந்தா நோன்பு கஞ்சி சாப்பிடு" என்கிறார்கள்.

இந்த முஸ்லிம்களை திருத்தவே முடியாது.
Quote | Report to administrator
ABDUL AZEEZ
+1 #13 ABDUL AZEEZ 2014-12-04 14:18
சிவலிங்கம் இன்னும் நீங்கள் விளங்காமல் தான் விவாதிக்கிரீர்க ள்.அந்த இடத்தில் அகற்றப் பட்டது ஹிந்து மத சிலையல்ல. அரபியர்கள் வனங்கிவந்த சிலைகள். பின்னோர்கள் அரியாமயின் காரணமாக அத்து மீரி உள்ளே வைத்தவை. ஆதம் (அலை) அவர்கள். அந்த இடத்தில் புனித கஃபா உருவாக்கவில்லை என்றால் இன்று வரை அவர்களுக்கு கல்லை வைக்க இடமில்லாமல் தான் இருந்துருக்கும் .கடவுள் என்பவர் தனக்கே இடமில்லாமல் அடுத்தவன் இடத்தில் ஆக்கிரமித்து கொண்டு சிலையாக இருக்கும் போது மனிதர்களுக்கு என்னத்தை கொடுத்து சாதித்திடுவார்.
சிற்பியின் உளிக்குல் வடிவமாக ஆவதர்க்கு முன் என்ன நிலையில் இருந்தார் என்பதை உணர்வாரா?

// குறைந்த பட்சம் காபிர் எனும் வார்த்தையை இந்தியாவிலுள்ள குரான்களில் தடை செய்வீர்களா?.//

காபிர் என்பதர்க்கு அர்த்தம் மருப்பவர்கள். அல்லது நிராகரிப்பவர்கள

இதில் உங்களுக்கு எந்த இடத்தில் நெருடலாக உல்லது

குற்றம் சொல்லும் வாக்கியமாக இல்லையே, தாழ்த்தி பேசும் சுடு சொல்லாக இல்லையே!

அதனால் திருக் குர் ஆனில் அந்த வாக்கியம் நீக்க தேவை இல்ல.

// கோயில்களையும் அலாஹ்வின் கட்டளைப்படி அகற்ற மாட்டீர் என்பதற்கு என்ன உத்திரவாதம்?. //

தனி பட்ட முரையில் முஸ்லிம்களுக்கு பிர மத வழி பாட்டுகாரர்களிட ம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அழகாக உபதேசிக்கிறது குர் ஆன்

// பாக்கிஸ்தான் கிரிக்கெட் போட்டியில், பாக்கிஸ்தான் வெற்றிக்காக பெரும்பாலான முசல்மான்கள் அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள் . எப்படி உங்களையெல்லாம் நம்புவது?.//

வெற்றி தோல்வி விதியின் அடிப்படையின் கீழ் அமைந்தது எங்கள் நம்பிக்கை திரமை உல்லவன் ஜெய்ப்பான்
உங்களின் நம்பிக்கை சான்று எங்களுக்கு எதற்க்கு.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator
சிவலிங்கம்
-1 #14 சிவலிங்கம் 2014-12-04 19:50
1. // காபிர் என்பதர்க்கு அர்த்தம் மருப்பவர்கள். அல்லது நிராகரிப்பவர்கள ... குற்றம் சொல்லும் வாக்கியமாக இல்லையே, தாழ்த்தி பேசும் சுடு சொல்லாக இல்லையே! //

ஜிஹாதி என்றால் நீதிக்காக போராடும் உத்தமர் என்கிறது உங்கள் குரான். அதாவது ஜிஹாதி என்பது, குரான் ஒரு முஸ்லிமுக்கு தரும் மிகப்பெரிய கௌரவமாகும்.

இந்த அடிப்படையில், குரான் இறங்கிய சவூதியில் போய் ஒரு சவூதி போலிஸ்காரரிடம் "நான் ஒரு ஜிஹாதி" என்று உங்களால் சொல்லமுடியுமா?. சொன்னால் என்ன நடக்குமென்பது தெரியுமா?
------------

2. // உங்களின் நம்பிக்கை சான்று எங்களுக்கு எதற்க்கு. //

நாளை இந்தியா-பாக்கிஸ ்தான் போர் மூண்டால், பெருவாரியான முஸ்லிம்கள் பாக்கிஸ்தானோடு சேர்ந்துவிடுவர் என்பது பெருவாரியான ஹிந்துக்களின் நம்பிக்கை. சுருக்கமாக சொல்லப்போனால், உங்களுடைய தேசப்பற்று எங்களுக்கு தேவையில்லை. உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.

முஸ்லிம்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே அட்வைஸ்: "எவ்வளவு முட்டிமோதினாலும ், உங்களுக்கு இனி இந்தியாவில் எந்த எதிர்காலமும் கிடையாது. தயவு செய்து எங்கேயாவது போய் விடுங்கள்".

ஒரு ரகசியத்தை சொல்கிறேன். நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால் எப்படி பீல் பண்ணுவேன் என சிந்தித்து பார்த்தேன். திரு.பாபர் சொல்வது போல் "இன்னொரு பாக்கிஸ்தானை உருவாகினாலென்ன? " என்றுதான் சிந்திப்பேன். வேறு வழி?
Quote | Report to administrator
ABDUL AZEEZ
+1 #15 ABDUL AZEEZ 2014-12-06 14:33
சிவலிங்கம்
// ஜிஹாதி என்றால் நீதிக்காக போராடும் உத்தமர் என்கிறது உங்கள் குரான். அதாவது ஜிஹாதி என்பது, குரான் ஒரு முஸ்லிமுக்கு தரும் மிகப்பெரிய கௌரவமாகும்.//

ஜிஹாத் என்பதர்க்கு நீண்ட பொருள் அடங்கியவை. சுருக்கமாக சொல்ல போனால் பாதையில் கிடக்கும் ஒரு கல்லை ஓரமாக தூக்கி போட்டு மக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்வது. ஜிஹாத்தின் ஆரம்ப படிதரத்தின் சிரிய பகுதி.இதிலே சொந்த தாய் நாட்டுக்கு பொருளாலும், உடமையாலும், உயிராலும் நிரையவே முஸ்லிகள் தியாகம் செய்து அர்ப்பணித்துள்ள ார்கள்.இங்கேயும ் ஜிஹாதின் அம்சம் அடங்கியுள்ளது.அ ப்படி அவர்கள் ஜிஹாத் செய்யாமல் இருந்திருந்தால் இன்றைக்கு இன்தியாவில் உள்ள பெண்கள் கற்ப்போடு இருந்திருப்பார் களா என்பது சந்தேகமேஇதர்க்க ெல்லாம் இங்கேயே இறைவன் கௌரவம் கொடுக்கவில்லை.ம ருமையிலே தான் பரிசு.அதனாலே

எவன் கிட்டயும் ஒரு உன்மையாளி நான் நல்லவன் என்று சொல்ல தேவையில்லை. அந்த பெயரை சிலர் டைடிலாக வைத்துக் கொண்டு இயக்கம் நடத்துபவர் சும்மா பணம் உண்டாக்க மட்டுமே.

// நாளை இந்தியா-பாக்கிஸ ்தான் போர் மூண்டால், பெருவாரியான முஸ்லிம்கள் பாக்கிஸ்தானோடு சேர்ந்துவிடுவர் என்பது பெருவாரியான ஹிந்துக்களின் நம்பிக்கை. சுருக்கமாக சொல்லப்போனால், உங்களுடைய தேசப்பற்று எங்களுக்கு தேவையில்லை. உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை.//

ஹிந்துக்களும், நாங்களும் அண்ணன் தம்பி, மாமன், மச்சான் போல வாழ்ந்து வருகிரோம். இடையில் எவனுக்கும் எங்களுடைய தேச பற்றை எடை போட தகுதி கிடையாது.

// முஸ்லிம்களுக்கு நான் சொல்ல விரும்பும் ஒரே அட்வைஸ்: "எவ்வளவு முட்டிமோதினாலும ், உங்களுக்கு இனி இந்தியாவில் எந்த எதிர்காலமும் கிடையாது. தயவு செய்து எங்கேயாவது போய் விடுங்கள்".//

நாங்கள் பிறந்தது இந்த மன்னில் தான் கல்லையும், மன்னையும் வணங்க சொல்கிறார்கள். பிறப்பு அடிப்படையில் வேற்றுமை கான்பிக்கிரார்க ள். நிரங்களை கொண்டு பேதம் கான்பிக்கிரார்க ள். குடிக்கக் கூடிய டீயில் தனி குவளை கொடுத்து மனிதனை மனிதனாக பார்க்காத மதத்தில் இருந்து என்ன ? இவை போன்ற தொல்லை தாங்காமல் தான் சலுகையும், நன்மையும் கொடுக்கும் தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம்.

இவ்வளவு பேசுகிறாயே உன்மையிலேயே ரோஷம் உல்லவரா இருந்தால் அரபு நாடுகளில் வாழும் உன்னை போன்ற எண்ணம் கொண்ட ஹிந்துக்களை உன் இடத்தில் வைத்துக் கொண்டு சோறு போடவேண்டியது தானே.

மா சலாம்.
அப்துல் அஜீஸ்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்