முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

லைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார்! இந்தியா தயாரா? இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக் காரணம் என்ன?

ஊடகங்கள் திட்டமிட்டு மறைக்கும் அந்த உண்மையைத் தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அலுவலகம் (CAG) வீதிக்குக் கொண்டுவந்து இருக்கிறது.

லஞ்சம், ஊழல் மற்றும் விதிமீறல் காரணங்களால் 2009 - 2011 இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ. 17 ஆயிரம் கோடி குஜராத் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று சொல்கிறது தலைமைத் தணிக்கைக் கணக்காயரின் அறிக்கை. அரசின் இந்த இழப்புகளைப் பெரும் பகுதி ஏப்பம் விட்டு செரித்திருப்பவை பெருநிறுவனங்கள். குஜராத் மாநில பெட்ரோநெட் நிறுவனத்துக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும் இடையேயான எரிவாயு உடன்படிக்கையில் செய்யப்பட்ட விதிமீறல்களால் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 52.27 கோடி பலன் அடைந்துள்ளது. இதேபோல, மாநில அரசின் குஜராத் யுர்ஜா விகாஸ் நிகாம் நிறுவனம், அதானி பவர் நிறுவனத்துடன் செய்துகொண்ட மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட திமீறல்களால், அதானி நிறுவனம் ரூ.160.26 கோடி பலன் அடைந்துள்ளது. சூரத்தில் எஸ்ஸார் உருக்கு நிறுவனம் ஆக்கிரமித்திருந்த 7.24 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை சதுர மீட்டர் ரூ. 700 என்கிற மட்டி விலைக்கு எஸ்ஸார் நிறுவனத்துக்கே உரித்தாக்கி இருக்கிறது மோடி அரசு. இதேபோல், ஃபோர்டு இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனங்களுக்கு அரசு நிலத்தைக் கொடுத்ததிலும் விதிமீறல்கள் நடந்திருக்கின்றன என்கிறது அந்த அறிக்கை.

ஒரு மாநில அரசு மீது ரூ. 17 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு குற்றஞ்சாட்டப்படுவது பெரிய செய்தி. அதுவும் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்றும் தலைசிறந்த நிர்வாகி என்றும் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் ஒருவர் மீதான நாட்டின் உயர்ந்த தணிக்கை அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டு பெரிய அளவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேசிய ஊடகங்கள் இந்தச் செய்தியை இரு பத்திகளுக்குள் அடக்கம் செய்தன.

மோடி அரசு மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல. அதானி குழுமத்துடன் மோடி அரசுக்குள்ள தொடர்புகள் தொடர்ந்து விவாதத்தில் இருக்கின்றன. கடந்த ஆண்டு இறுதியில் அரவிந்த் கேஜ்ரிவால் அம்பலப்படுத்திய குஜராத் மாநில பெட்ரோலிய நிறுவனம் - ஜியோ குளோபல் நிறுவனம் இடையேயான ஒப்பந்தம் கிட்டத்தட்ட இரண்டாம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஞாபகப்படுத்தக் கூடியவை (ஒப்பந்தத்தின்போது வெறும் 64 டாலர் - அன்றைய மதிப்பில் ரூ. 3200 சொத்து மதிப்பைக் கொண்ட ஜியோ குளோபல் நிறுவனம் பின்னர் 10 ஆயிரம் கோடி நிறுவனமானதை அம்பலப்படுத்தினார் கேஜ்ரிவால்). ஆனால், ராபர்ட் வதேராவின் முறைகேடுகளைப் புரட்டி எடுத்த ஊடகங்கள் மோடியின் செய்தியை அன்றோடு அடக்கம் செய்தன.

நான் வளர்ச்சியின் பிரதிநிதி என்கிறார் மோடி. ஆனால், எது வளர்ச்சி என்பதற்கு நம்மிடம் சரியான வரையறைகள் இல்லை. குஜராத் அரசு சமூகத் துறைகளில் ஒழுங்காகச் செயல்படவில்லை என்பது தொடர்ந்து அவ்வப்போது வெவ்வேறு புள்ளிவிவரங்கள் வாயிலாக வெளிவந்துகொண்டிருக்கும் ஓர் உண்மை. 2011-ல் வெளியான மத்தியத் திட்டக் குழு அறிக்கை குஜராத் மாநிலத்தில் நிலவும் வறுமையை வெளிக்கொண்டுவந்தது - மாநிலத்தில் 44.6 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள். 2012-ல் வெளியான தலைமைத் தணிக்கைக் கணக்காயர் அறிக்கை தண்ணீர் விஷயத்தில் அரசு காட்டும் அலட்சியத்தைப் பட்டியலிட்டது. “குடிநீர்க் கொள்கை சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம், எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆற்றுநீர் மாசுபடுவது சம்பந்தமாக அரசு அக்கறை காட்டவில்லை. சபர்மதி ஆற்று நீரைத் தூய்மைப்படுத்தும் திட்டமும் முறையாகக் கண்காணிக்கப்படவில்லை” என்று கடந்த ஆண்டு அறிக்கை சொன்னது. குஜராத்தில் நிலத்தடி நீர்மட்டம் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 6 மீட்டர் கீழே செல்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன் 30 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்த இடங்களில், இப்போது தண்ணீருக்கு 152 மீட்டருக்கும் கீழே செல்ல வேண்டியிருக்கிறது. அரசு இந்தப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் சூழலியலாளர்கள். முந்தைய அரசுகளைப் போலவே இந்தப் பிரச்சினையை மோடி அரசும் அலட்சியப்படுத்துகிறது.

குஜராத் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் வகிக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட கடந்த தேர்தலில் மோடி நிறுத்தவில்லை என்பது இந்தக் கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயமாக இருக்கலாம். ஆனால், நகர்ப்புற முஸ்லிம்கள் ஏழைகளாக உலவும் 4 மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என்பது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது. மோடி தன்னுடைய வளர்ச்சியின் அடையாளமாகக் கொண்டாடிய சனாந்த் தொகுதியில் (டாடா நானோ ஆலை அமைக்கப்பட்ட இடம்) பாஜக தோற்றது இந்தக் கட்டுரையோடு தொடர்புடையது.

குஜராத்தை வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பேசும் பலரும் தட்டாமல் குறிப்பிடுவது குஜராத்தின் எரிசக்தித் துறை வளர்ச்சி. உண்மையில், மோடி அரசின் பல முறைகேடுகள் குடிகொண்டிருக்கும் துறை இது. மின்சார உற்பத்தியில் குஜராத் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்று குரல் கொடுப்போர் பலர் பேசாத ஒரு விஷயம், குஜராத்தின் மொத்த மின் உற்பத்தித் திறனான 16,945 மெகா வாட்டில் தனியார் பங்களிப்பு மட்டும் 6,864 மெகாவாட் என்பது. அதாவது, கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு தனியாருடையது. தவிர, நாட்டிலேயே மின்சாரத்தை அதிக விலைக்கு விற்கும் மாநிலங்களில் ஒன்று குஜராத். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கான குறைந்தபட்ச தேவை 50 யூனிட். குஜராத்தில் வறுமைக்கோட்டுக் கீழ் வாழும் ஒரு குடும்பமே இந்த மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ. 2.95 கொடுக்க வேண்டும். தமிழகத்துடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்கு இது (தமிழகத்தில் ஒரு யூனிட் ரூ. 1.10) . நாட்டிலேயே சூரிய மின் சக்தியை முன்னெடுப்பதிலும் குஜராத் முன்னணியில் இருக்கிறது. ஆனால், வால்மார்ட்டும் மான்சாண்டோவும் அந்தச் சூரிய மின் சக்தி உபகரணங்களின் பின்னணியில் இருக்கின்றன; சூழலுக்குப் பெரும் நஞ்சான கேட்மியம் டெலுராய்டைக் காற்றிலும் நிலத்திலும் நீரிலும் எதிர் காலத்தில் குஜராத் சுமக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்கிறார் மின்சாரம் தொடர்பாகத் தொடர்ந்து பேசி வரும் சமூகச் செயல்பாட்டாளர் காந்தி. குஜராத் தொடர்பாக ஊதப்படும் ஒவ்வொரு துறையின் வளர்ச்சியின் பின்னணியிலும் இப்படி சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டு. எப்படி ஏனைய இந்திய மாநிலங்களின் வளர்ச்சிக் கதைகளுக்குப் பின்னணியிலும் சங்கடப்படுத்தும் உண்மைகள் உண்டோ அப்படி. ஆனால், குஜராத்தில் மட்டும் இந்தச் சங்கதிகள் ஒரு நாள் செய்தியோடு அடக்கமாகிவிடுகின்றன. ஏன்?

நம்முடைய முதலாளிகளுக்கு இன்று மோடி தேவைப்படுகிறார். மன்மோகன் சிங் அரசு பன்னாட்டு நிறுவனங்களின் கையாள் என்று நாம் குற்றஞ்சாட்டுகிறோம், ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் இந்தியப் பெருமுதலாளிகளுக்கும் மன்மோகன் சிங் போதுமானவராக இல்லை அல்லது அவருடைய தேவைக்கான காலம் முடிந்துவிட்டது. இப்போது அவர்களுடைய தேவை இன்னும் துரிதமாகவும் துணிச்சலாகவும் சுதந்திரமாகச் செயல்படும் ஒருவர்தான். முக்கியமாக, இந்தியாவில் முதலீடு செய்ய சட்டரீதியாக மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சின்னச் சின்ன நடைமுறைகளைக்கூட உடைத்து எறியவும் இந்திய வனங்களில் புகுந்து சூறையாட ஏதுவாக அங்குள்ள எதிர்ப்புகளை வேர் அறுக்கவும் ஓர் ஆள் தேவைப்படுகிறார். இந்தியாவில் செம்மையான செயல்பாட்டுக்கு கார்ப்பரேட் துறைதான் முன்னோடி என்பதை வெளிப்படையாகச் சொல்லும் மோடி அதற்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று அவர்கள் நம்புகிறார்கள். குஜராத்தில் ஒரு நிறுவனம் நினைத்தவுடன் தொழில் தொடங்குவதற்கான எல்லாச் சாத்தியங்களையும் ஓடியாடிச் செய்யும் மோடி அதற்குப் பொருத்தமானவர் என்று அவர்களும் நம்புகிறார்கள். மத்திய அரசு இப்போது முன்மொழிந்திருக்கும் தேசிய முதலீட்டு வாரியத்துக்கு முன்னோடி மோடியின் குஜராத் பாணிதான். உங்கள் ஊரில், ரூ. 1000 கோடிக்கு மேல் ஒரு தொழிலை ஆரம்பிப்பது என்று ஒரு பன்னாட்டு நிறுவனம் முடிவெடுத்துவிட்டால் போதும். உள்ளூர் மக்கள் எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு எதைப் பற்றியும் அந்நிறுவனம் கவலைப்பட வேண்டியது இல்லை. தேசிய முதலீட்டு வாரியத்தின் அனுமதி மட்டும் அதற்குப் போதும். யாரும் அந்த நிறுவனத்தைக் கேள்வி கேட்க முடியாது . . . உள்ளூர் மக்களில் தொடங்கி சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் வரை எவரும் கேள்வி கேட்க முடியாது. இப்படி ஓர் அணுகுமுறையைத்தான் அரசிடமிருந்து எல்லா விஷயங்களிலும் முதலாளிகள் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் அதைச் செய்கிறது. ஆனால், தாமதமாகச் செய்கிறது. யோசித்து இழுத்தடித்துச் செய்கிறது. முதலாளிகள் துணிச்சலான துரித சேவையை விரும்புகிறார்கள். காங்கிரஸுக்குக் காலம் கடந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கட்டுரையை எழுதும் நாளில் குஜராத்தின் கப்ரதா பகுதி கிராம மக்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்து 5 கி.மீ. தூரம் நடந்து வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள் - இரு குடங்கள் குடிநீருக்காக. “கப்ரதா பகுதியில் உள்ள முப்பது சொச்ச கிராம மக்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. எவ்வளவோ பேசிப் பார்த்தாயிற்று அரசாங்கத்திடம்; ஒன்றும் நடக்கவில்லை’’ என்கிறார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான ஜிட்டு சௌத்ரி. மக்கள் தண்ணீருக்காகக் கிடையாய்க் கிடக்கிறார்கள். அவர்கள் கிடக்கட்டும்! முதலாளிகள் முடிவெடுத்துவிட்டார்கள். மோடிக்காகக் காத்திருக்கிறது இந்தியா! 

நன்றி: சமஸ்  | படம்: Reuters

தொடர்புடைய ஆக்கங்கள்:

இந்தியாவின் "NUMBER 1" மாநிலம்!

"குஜராத் கொலைகளுக்கு அனுமதியளித்தவர் மோடி" EX-DGP, Gujarat

மாநில முதல்வராக ஒரு கொலைகார வெறிநாய் - குமுதம்!

நரவேட்டை நரேந்திர மோடியைத் தூக்கில் போடுவது எப்போது?

விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : "இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்" SIT

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம்

குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1

பயங்கரங்களின் நிழலில் ...

மோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா?

அரேபியாவின் அனைத்து வாசனை திரவியங்கள்!

Comments   

வாசகன்
+2 #1 வாசகன் 2013-05-20 14:15
வர வர மோடி அவர்களுக்கு 'தற்பெருமை' அதிகம் ஆகிவிட்டது. இப்படித்தான் கொஞ்ச நாளுக்கு முன்னால, 'வாருங்க மக்களே, பாரத மாதா கடனை அடைப்போம்' அப்படின்னு சொன்னாரு.

யாருடா இது 'தமிழன்' ஹீரோ மாதிரி குஜராத்தை 'மிகை மணி' மாநிலமாக்கிட்டா ராருன்னு, குஜராத்தோட கடன பார்த்தா, 2001-2002 -ல் Rs.45,300 கோடியாய் இருந்த கடன், 2013-ல் Rs.1.76 லட்சம் கோடியாய் (300%) உயர்ந்திருக்கு.

புதுசா ஒரு குழந்தை குஜராத்-ல் பிறந்தால், அதன் தலையில் கிடத்தட்ட Rs.25,000 கடன். இந்த கடன் விவரங்களை குஜராத் அரசே சொல்லி இருக்கிறது. உடனே சிலர் கேட்பார்கள், 'காசெல்லாம் அவரு எடுத்துகிட்டு போய், வேற நாட்டுல சுரங்கம் வாங்கினாரா? இல்ல சுவிஸ் பேங்க் அக்கௌன்ட்ல போட்டிருக்காரா? அவரு மாநிலத்த தான டெவெலப் பண்ணுனாருன்னு...

'குஜராத் எல்லோரும் சொல்லுற மாதிரி 'ரெம்ப நல்லா' டெவெலப் ஆகி இருந்தால், ஏன் 31.8% மக்கள் இன்னும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழுகிறார்கள் [இது மற்ற மாநிலங்களை விட அதிகம்]???

தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகள் ஒரு 'மாயையை' உண்டு பண்ணுறாங்க. இப்படித்தான், 10-15 வருஷத்துக்கு முன்னால 'சந்திரபாபு நாயுடு' எனும் ஆந்திர முதல்வரை பத்திரிக்கைகள் தூக்கி வச்சுகிட்டு ஆடினாங்க. ஏன், பில்கேட்ஸ் இந்தியா வந்தா, முதலில் 'சந்திரபாபு நாயுடு' வீட்ல போய் 'ஹைதராபாத் பிரியாணி' சாப்பிட்டு விட்டுதான், மற்ற மீட்டிங்க்கு போவார்.

இப்போ உள்ள மோடி மாதிரியே, அந்த காலத்தில் அவரு போகாத 'conference' கிடையாது. ஆந்திரா போல மாநிலமே இல்ல அப்படினாங்க. அடுத்த பாரத பிரதமர் 'நாயுடுதான்' அப்படினாங்க. பிறகு அவரு ஏன் பிரதமராக முடியல?? 'மாயை'..அவரு எல்லாம் சாதிச்சு முடிச்ச மாதிரி ஒரு 'மாயை'. அன்று எப்படி 'நாயுடுவை' பற்றி ஒரு 'மாயை' உருவாகியிருந்தத ோ, அதேப் போல் இன்று 'மோடியை' பற்றி ஒரு 'மாயையை' உண்டு பண்ணியிருக்கிறா ர்கள்.

இந்த 'மாயை' உடைந்து 'உண்மை' விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Quote | Report to administrator
Manidhan
0 #2 Manidhan 2013-05-20 14:19
முஸ்லிம்களின் வோட்டும் காரணம் அல்ல, அவர்களுக்குள் சண்டையும் அல்ல. இது ஒரு அரசியல் நாடகம்.

பிஜேபி மோடியின் விளம்பரத்தை பயன்படுத்தி ஜெயித்து விட்டு பின் அத்வானியை பிரதமர் ஆக்க திட்டம் இட்டிருக்கிறது. இந்த பொய் சண்டையின் மூலம் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று மக்கள் எண்ணி வோட்டு போடுவார்கள்.

தேர்தலுக்கு பிறகு வேறு ஒரு நாடகம் ஆடி அத்வானியை வுட்கார வைது விடலாம் என்பதே திட்டம்.

எங்கே மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று பிஜேபி யை அறிவிக்க சொல்லுங்கள் பாக்கலாம். இதை அறியாத பலர் பிஜேபி மற்றும் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகளுக்கு ஆதரவாக கருது சொல்கிறார்கள். பிஜேபி ஹிந்துக்களின் துரோகி. காங்கிரஸ் முஸ்லிம்களின் துரோகி.
Quote | Report to administrator
Kochadaiyan
0 #3 Kochadaiyan 2013-05-20 14:22
மோடி முதலில் குஜராத் இந்தியாவில் ஒரு மாநிலம் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா தான் குஜராத் என்ற நினைப்பை கைவிட்டு விடவேண்டும்.

தேர்தல் நேரங்களில் பிற மாநிலங்களுக்கு உள்ளே கூட செல்ல தகுதி இல்லாதவர் தான் இந்த மோடி. அப்படி மீறி உள்ளே நுழைந்து பிரச்சாரம் செய்த மாநிலங்களில் பாஜக மண்ணை கவ்வியது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

தான் தான் என்று தம்பட்டம் அடிக்கும் இந்த மோடி தில் இருந்தால் கர்நாடக உள்ளே சென்று தனது பலத்தை காட்ட வேண்டும். கர்நாடக என்பதும் குஜராத்தை போல ஒரு மாநிலம் தான் ஏன் இந்த மோடி அந்த பக்கம் தலைகாட்டாமல் தவிர்க்கிறார் ஏன் என்றால் அங்கு தன மோடிமஸ்தான் வேலைகள் எல்லாம் செல்லாது எனபது தான்....
Quote | Report to administrator
Muhammad
0 #4 Muhammad 2013-05-21 06:51
பிர் அவ்ன் பற்றி அல்லாஹ் திருக்குரானில் சொல்கிறான் --- ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”

மோடிக்கும் இதே கதிதான் வரும்.
Quote | Report to administrator
Muthu Krishnan
+1 #5 Muthu Krishnan 2013-06-16 04:21
பொதுவாக ஊடகங்களில் பேசும் பா.ஜ.க காரர்கள் அவர்களின் ஆட்சியில் எங்கும் ஊழல் நடந்ததில்லை என்பார்கள், அப்படி என்றால் இவை எல்லாம் என்ன?

BJP SCAM LIST:
- Bellary Mining and Reddy Brothers
- Operation Westend
- Phukhan Commission
- Kargil Coffin Scam
- Kargil Cess Misuse
- Telecom Scam- Pramod Mahajan
- Reliance-Arun Shourie-Bailout Package to Private Players
- UTI Scam
- Cyberspace Infosys Ltd. Scam
- Petrol Pump and Gas Agency Allotment Scam
- Judeo Scam
- Centaur Hotel Deal, Delhi Land Allotment Scam
- HUDCO Scam involving Ananth Kumar
- Landscams in Rajasthan (Raje)
- Kushabhau Thackre Trust Scam in MP
- Land Allotment in Karnataka (Yeddyurappa)
- Uttrakhand Hydel Power scam
- Land Scams in Chattisgarh mines
- Cash For Query Scam in Chattisgarh
- Pune Land Scam (Involving Mumbai BJP President)
- Nitin Gadkari-Adarsh Scam (Flat owner by proxy)
- Gas-Based Power Plant Scam in Uttrakhand
- BJP leaders involved in Fake Pilot Scam
- CWG- Sudhanshu Mittal and Vijay Kumar Malhotra & Co.
- VSNL Disinvestment Scam by Arun Shourie
- Arvind Johri-Vajpayee- IT Park Lucknow Scam
- Delhi Plot Allotment Scam
- Medical Procurement Scam - C P Thakur
- BALCO Disinvestment Scam

எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தானே :-(
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்