முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

ரு சிறிய இடைவெளிக்குப் பிறகு நீண்ட காலமாக நான் வாடகை வீடுகளில்தான் வசித்து வருகிறேன். பாவம் என் மனைவி ஜெயா, கொரடாசேரியில் ஒரு பெரிய வீட்டில் வாழ்ந்து வந்தவள்.

நான் இப்போது அடையாறு வண்ணாந்துறையில் வசிக்கும் வாடகை வீடு மிகச் சிறிது. பக்கத்தில் மகள் வீடு. பேத்தியை விட்டுப் பிரிய இயலாமலும், பேத்திக்குத் துணையாய் இருப்பதற்காகவும் ஒரு மிகச் சிறிய வீட்டில் அதிக வாடகை கொடுத்து வாழ்ந்து வருகிறோம்.

என்றாலும் எனக்கு ஒரு ஊமை வேதனை. எப்போதும் எனது வீட்டில் பலரும் தங்கிப் போயுள்ளனர். தலைமறைவுத் தோழர்கள் உட்பட. இன்றும் நான் வெளி நாடுகளுக்கும், ஊர்களுக்கும் செல்லும்போது என் அன்பு நண்பர்கள் தங்களின் வீடுகளில் என்னை உபசரிக்கின்றனர். ஆனால் அவர்கள் இங்கு வரும்போது அத்தகைய அன்பை என்னால் திருப்பித் தர இயல்வதில்லை.

சற்றுப் பெரிய ஒரு வீட்டைச் சில காலமாக வீட்டுத் தரகர்கள் மூலம் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலும் திருப்திகரமாய் ஒரு வீட்டை இன்று முடிவு செய்தோம். வீட்டு ஒத்தி ஒப்பந்தம் எழுத விவரம் கேட்டார்கள். ஒரு துண்டுத் தாளில் "அ.மா s/o அந்தோனிசாமி, வயது 63, முகவரி...... " என்பதாக எழுதி அனுப்பினேன். சற்று நேரத்தில் வீட்டுத் தரகர் எனக்கு போன் பண்ணினார். "சாரி சார். அவங்க கிறிஸ்தவங்களுக்கு வீடு கொடுப்பதில்லையாம்"

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. என் வீட்டில் என் மனைவி தவிர யாரும் சர்சுக்குப் போவதில்லை. என் மகள்கள் இருவரும் இந்துக்களைத்தான் திருமணம் செய்து கொண்டனர். என் அப்பா அந்தோனிசாமி, ராமதாஸ் என்கிற பெயரிலேயே அடையாளம் காணப்பட்டு மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவனாக இருந்ததற்காகத் தலைக்கு விலை கூறப்பட்டு நாடகடத்தப்பட்டவன், வாழ்நாளில் என்றைக்கும் மாதாகோவில் வாசாலை மிதித்தறியாதவன்.... என்பதெல்லாம் அந்த வீட்டுக்காராருக்குத் தெரியுமா என்ன?

சரி. இதுவரைக்கும் பத்துப் பன்னிரண்டு வாடகை வீடுகளில் வாழ்ந்தவன் நான். இது எனக்குப் புது அனுபவம். தினந்தோறும் முஸ்லிம் என்பதற்காகவும் தலித் என்பதற்காகவும் வீடு மறுக்கப்படும் எண்ணற்ற இந் நாட்டு மக்கள் இப்படி எத்தனை துயரங்களை அனுபவித்திருப்பர்? ஷபனா ஆஸ்மி, ஷாருக் கான் ஆகியோருக்கே இந்நிலை என்றால் நான் எம்மாத்திரம்?

- அ.மார்க்ஸ்

Comments   

அன்பு
+3 #1 அன்பு 2013-04-15 10:06
சாதியம் பார்த்து வீடு கொடுப்பது என்பது தமிழகத்தில் பல இடங்களில் நடக்க ஆரம்பித்து விட்டது. "வீடு வாடகைக்கு" - பிராமணர்கள் மட்டும் என்று வெளிப்படையாக பத்திரிக்கைகளில ் விளம்பரம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்..... பெரியார் வாழ்ந்த மண்ணில் " சாதி " எல்லா மட்டங்களிலும் பரவ ஆரம்பித்து விட்டது என்பது தான் வேதனை!!!
Quote | Report to administrator
Yukaanthan
0 #2 Yukaanthan 2013-04-16 00:20
ஒன்றுபட்டு நிற்க வேண்டிய மனிதர்களுக்குள் ளே எத்தனை அன்னியர்கள்... எந்த விதமாகவெல்லாம் அன்னிய மயமாக்கல்... இன்னும் எதற்கெல்லாம் இந்தவகை தீண்டாமைகள் தொடரப் போகிறதோ?

www.facebook.com/yukaanthan
Quote | Report to administrator
Someetharan
0 #3 Someetharan 2013-04-16 00:38
”சிலோன்”காரர்கள ுக்கு வீடுமறுத்த வாடகையை உயர்த்திக் கேட்கும் ஒரு வருடத்திற்க்கு மேல் ஒப்பந்தத்தை நீடிக்காத வீட்டுக்காரர்கள ை வருடாவரும் பார்த்துப் பழக்க பட்டவனாக நான் இருந்த்தாலும் முஸ்லிம்களைப் போல குற்றவாளிகள் பட்டியலில் நாங்களும் உள்ளதால் போலுமென நினைத்தேன்...ஆன ால் கிறிஸ்தவர்களுக் கும் கூடவா?

அண்ணா நகரில் பல குடியிருப்பாளர் அசோசியன்களில் முஸ்லிம்களுக்கு வீடு கொடுப்பதில்லை என வெளிபடையாக அறிவித்திருக்கி றார்கள்.

இப்ப 2009க்கு பிறகு நான் இருந்த வீட்டு உரிமையாளர் எனக்கு வீடு தரும்போது சொன்னார் இப்போ சிலோனில் பிரப்ளம் முடிச்சதனால பயமில்ல வீடு தர்ரேன்.. போன மாசம் என் வீட்டு உரிமையாளர் சொன்னார், நிறைய பேர் சொன்னாங்க சிலோன்காரங்களுக ்கு வீடு கொடுக்க வேணாமுன்னு ஆனால் நான் நீங்க நல்லவங்கன்னதால கொடுத்தேன் என சொல்லி 1000 வாடகையை இந்த அடுத்த்க மாதம் முதல் அதிகரித்தார்.....

Someetharan
Quote | Report to administrator
Cuddalore Jn. Ghouse
0 #4 Cuddalore Jn. Ghouse 2013-04-16 10:40
மறக்கவே இயலா மனவேதனை தரும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று.

எண்ணிலா இடைஞ்சல்களில் சிதறிய தங்களின் இதயத்தை, அருமை பேத்தியின் அன்பிற்காக... 'இதையும் தாங்கும் இதயமாய்' வடிவமைத்துக்கொள ்ளுங்கள் சகோதரரே!

- கடலூர் ஜங்க்ஷன் முஹம்மது கவுஸ்
Quote | Report to administrator
சுதீர்
0 #5 சுதீர் 2013-04-17 16:20
Quoting Someetharan:
நான் நீங்க நல்லவங்கன்னதால கொடுத்தேன் என சொல்லி 1000 வாடகையை இந்த அடுத்த்க மாதம் முதல் அதிகரித்தார்.....
Someetharan


ம்ம்.. ரொம்ம்ம்ம்ம்ம்ம ்ப நல்ல மனுசன்ன் அவர்!
Quote | Report to administrator
பந்தர்
0 #6 பந்தர் 2013-04-19 15:19
சாதீயங்களை ஓழிக்க இனியும் பெரியார் பிறக்கவேண்டும் இந்த மண்ணில்
Quote | Report to administrator
Muhammad
0 #7 Muhammad 2013-04-22 21:51
தவறாக எண்ண வேண்டாம். முஸ்லிம்களும் கிறிஸ்துவ சகோதரர்களும் வக்கத்தவர்களா?. இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால், 120 கோடி இந்தியருக்கும் வீடு கட்டி தரமுடியும். சிந்தித்து பாருங்கள். எல்லாம் நன்மைக்கே. சில சமயம் கடுமையான சோதனை மூலம் அல்லாஹ் நன்மையை செய்வான்.
Quote | Report to administrator
Muhammad
+1 #8 Muhammad 2013-04-22 22:22
சகோதரர் மார்க்ஸுக்கு ஏற்பட்ட சோதனை இனி எந்த முஸ்லிமுக்கும் கிறிஸ்தவருக்கும ் வரக்கூடாது என்று ஏன் சிந்திக்க கூடாது?. ஹிந்து சகோதரர்கள் தங்களுடைய ஜாதிக்காரர்களுக ்கு முன்னுரிமை தருவதில் தவறென்ன?. முஸ்லிம்களும் கிறிஸ்தவரும் ஒன்று சேர்ந்து கூட்டுறவு அமைப்பின் மூலம் குறைந்த விலையில் வீடுகட்ட முன்வரவேண்டும்.

இஞ்சினியரிங் கல்லூரிகளிலும், பாலிடெக்னிக்குக ளிலும் படித்துவிட்டு லட்சக்கான இஞ்சினியர்கள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்க ள். இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்க முடியும். நமக்கு மட்டுமல்ல, நமக்கு வீடு தர மறுக்கும் ஹிந்து சகோதரருக்கும் நாம் வீடு கட்டி தரலாம். நன்மையை ஏவி, தீமையை முறியடியுங்கள் என்று திருக்குரான் சொல்கிறது.
Quote | Report to administrator
Muhammad
+4 #9 Muhammad 2013-04-22 23:20
சவூதி அரேபியாவில் வேலை செய்யும் எனது ஹிந்து அன்பர், புதுமனை புகுவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார் . வீட்டின் வரவேற்பில் மிகப்பெரிய கஃபா போட்டோவை வைத்திருந்தார். அசந்து போய்விட்டேன். என்ன விஷயம் என்று கேட்டபோது "சாப்பட்டுக்கே கஷ்டப்பட்ட எங்கள் குடும்பத்துக்கு , இந்த வீடு அல்லாஹ் தந்த பரிசு. எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே" என்று கூறினார்,

ஆக, ஹிந்துக்கள் அனைவரும் முஸ்லிம் வெறுப்பாளர்கள் என்று ஒட்டுமொத்தாமாக எண்ணுவது தவறு. நரேந்திர மோதியை எதிர்த்து திக்குமுக்காட வைப்பவர்கள் பிராமின் சகோதரர்கள்தான் எனும் உண்மையை நாம் மறந்துவிடக்கூடா து
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்