முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

டந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள், முஸ்லிம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அதுபோல் முஸ்லிம் சமூகத்தின் மீதான தாக்குதலை மூடி மறைக்கும் ஊடகத் துறையின் நயவஞ்சகத்தனமும் புரிந்து கொள்ள முடியாத ஒன்றல்ல. எனினும் தற்போது முஸ்லிம் ஊடகங்கள் உள்ளிட்ட மெயின் ஸ்டீரிம் மீடியா என்றழைக்கப்படும் பொது மீடியாவின் பலத்த மெளனம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மறுக்க முடியாத ஒன்று.


மியான்மரில் தொடர்ந்து நடைபெற்றுவரும் முஸ்லிம்களின் மீதான வன்முறைகள் குறித்துப் பொது ஊடகங்களில் தேடினாலும் இணையவெளியில் தேடினாலும் ஒருசில ஈரானிய ஊடகங்கள், தனி நபர்களின் ப்ளாக்குகள், ப்ரஸ் டிவி போன்ற மிகச் சிலவற்றைத் தவிர மற்றவற்றில் முழுமையாய் இருட்டடிப்பு செய்துள்ளனர். "ஒபாமாவின் நாய்குட்டிக்கு உடம்பு சரியில்லை" போன்ற அரிய சமூக பயனுள்ள (!) செய்திகளை வெளியிடும் ராய்ட்டர்ஸ், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் உலகெங்கும் உள்ள சர்வதேச ஊடகங்களும் பர்மிய முஸ்லிம்களின் அவலம் குறித்துக் கிஞ்சிற்றும் வாய் திறக்கவில்லை. எங்கு குண்டு வெடித்தாலும் உடனே முஸ்லிம்களை சம்பந்தப்படுத்தி செய்தி போடும் தினமலம் உள்ளிட்ட இந்திய வகையறா பத்திரிகைகளும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்பதோடு ஒன்றிரண்டைத் தவிர முஸ்லிம் ஊடகங்களும் மெளனமே காத்தன என்பது வேதனைக்குரியது!

மியான்மர் (பர்மா) ராணுவத்தாலும் புத்த மதத் தீவிரவாதிகளாலும் வேட்டையாடப்படும் ரோஹிங்க்யாஸ் என்று சொல்லப்படும் பர்மிய முஸ்லிம்களின் துயரம் இரண்டாம் உலகப் போரிலிருந்தே தொடங்குகிறது. பெரும்பாலும் புத்தர்களும் அதற்கடுத்து இந்துக்களும் வாழும் பர்மாவில் ரோஹிங்க்யாஸ் முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 8 இலட்சமே. உலகின் மிக மோசமாக நடத்தப்படும் சிறுபான்மையினராக ஐக்கிய நாடுகள் சபையாலே கணிக்கப்படும் பர்மிய முஸ்லிம்களில் சுமார் 3 இலட்சம் பேர் பல்வேறு ஆண்டுகளாய் நடக்கும் வன்முறையால் ஏற்கனவே பங்களாதேஷுக்கு அகதிகளாய் குடியேறி உள்ளனர். சுமார் 30,000 மக்கள் மலேஷியாவிலும் குடியேறி உள்ளனர்.

இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷாரின் காலனியாக இருந்த பர்மா ஜப்பானிய படைகளால் வெற்றி கொள்ளப்பட்டதிலிருந்தே முஸ்லிம்களின் மீதான வன்முறைத் தாக்குதலின் வரலாறு ஆரம்பித்தது எனலாம். 1942 மார்ச் 28 அன்று 5,000 முஸ்லிம்கள் ராகினே தேசியவாதிகளால் மின்ம்யா மற்றும் ம்ரோஹாங்க் நகரில் கொலை செய்யப்பட்டனர். இன்றளவும் முஸ்லிம்களுக்கு அந்நாட்டின் குடிமக்கள் அந்தஸ்தை வழங்க பர்மிய அரசு மறுத்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் வேட்டையாடப்படும் விலங்குகள்போல் பர்மிய முஸ்லிம்கள் வாழ்ந்துவருகின்றனர். தாய்லாந்து – மியான்மர் எல்லைப் பகுதியில் மட்டும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

குடிமகன் அந்தஸ்து இல்லாத காரணத்தால் பர்மிய முஸ்லிம்கள் திருமணம் செய்வதற்குக்கூட அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளதோடு இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. நவீன கால அடிமை முறையின் நீட்சியாகக் குறைவான சம்பளத்திற்கு வலுக்கட்டாயப்படுத்தப்பட்டு பர்மிய முஸ்லிம்கள் கசக்கி பிழியப்படுகிறார்கள். குடிமகன்களாய் இல்லாத காரணத்தால் முஸ்லிம்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு வீடற்ற அகதி்களாய்த் திரிவதோடு ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு அனுமதியின்றிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது நவீன அடிமைத்துவமே என உறுதிபடச் சொல்லலாம்.

பர்மிய முஸ்லிம்களுக்குக் கல்வி பயில்வது என்பதெல்லாம் இத்தகைய சூழலில் சாத்தியமே இல்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏழு வயதான பச்சிளம் பாலகர்கள்கூட பலவந்தமாகப் பணி புரிய நிர்ப்பந்திக்கப்படுவது, அடிமைத் தொழிலாளச் சிறுவர்கள் குறித்துக் கூக்குரலிடும் மேற்குலகின் காதுகளில் இதுவரை விழாத மர்மம் புலப்படவில்லை. பணி செய்ய மறுக்கும் சிறுவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்படுவதோடு கொலை மிரட்டலும் அதிகார வர்க்கத்தால் விடுக்கப்படுவது உண்டு.

அங்குப் பெரும்பான்மையாக வாழும் ராகினே பவுத்தப் பெண் ஒருத்தியை ரோஹிங்யா முஸ்லிம் வாலிபன் ஒருவன் வன்புணர்வு செய்யப்பட்டதாக வெளியான உறுதி செய்யப்படாத செய்தியைத் தொடர்ந்து, அவ்வாலிபனுக்கு அரசு தூக்குத் தண்டனை விதித்தது. அப்படியிருந்தும் தங்கள் வெறியாட்டத்தை ஆரம்பித்த பவுத்தத் தீவிரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களைக் கொன்று குவித்துள்ளதாகத் தெரிகிறது. முஸ்லிம் யுவதிகள் வன்புணர்வு செய்யப்பட்டதாலும், அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டுக் கலவரம் ஊதி பெருக்கப்பட்டதால் ஒரு இலட்சம் முஸ்லிம்கள் பர்மாவை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸுல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.

முஸ்லிம்களுக்கு எதிரா கொடூரங்களைக் குறித்து ஆயிஷா ஸுல்ஹி, அல்-வதனுல் மிஸ்ரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியது:

"பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ள முஸ்லிம்களுக்கு 'மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம் - இவற்றுள் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள்?' என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

மியான்மரில் முஸ்லிம்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டும், கேட்டும் நான் நரக வேதனையை அனுபவிக்கிறேன். எனது நாட்டைச் சார்ந்தவர்கள் கூட்டாக கொலை செய்யப்படும்பொழுது எவ்வாறு நாம் மெளனமாக இருக்கமுடியும்?

மியான்மர் முஸ்லிம்கள் இரத்த சாட்சிகளைக் கொடையாக வழங்குகின்றார்கள் என்பதுதான் அபிமானத்திற்குரிய செய்தியாகும்.

பல தினங்களாக நான் எனது குடும்பத்தினரைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ள முயல்கிறேன். ஆனால், பெளத்தர்களின் தாக்குதலில் அவர்களுடைய வீடுகள் தகர்க்கப்பட்டு பங்களாதேசுக்கு அகதிகளாக அவர்கள் சென்றுள்ளனர். எனது சில உறவினர்களும், நண்பர்களும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமை இழைக்கப்படுகின்றனர்"

இவ்வாறு ஆயிஷா ஸுல்ஹி கூறியுள்ளார்.

*இச்சம்பவம் பற்றி எந்த வந்தேறி ஊடங்கங்களும் எழுதவில்லை.

நன்றி : புதியதூது

முஸ்லிம்கள் ஆளும் நாடுகளில் ஒரு சில வன்முறைகள் நடந்தாலே ஊதிப் பெரிதாக்கும் யூத, பார்ப்பனிய ஊடகங்கள் மிகச் சிறிய இயல்பு நிகழ்வுகளையும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளத் தவறுவதில்லை. அண்மையில் பாகிஸ்தானில் ஒரு ஹிந்துச் சிறுவன் இஸ்லாத்தைத் தழுவியதை அங்குள்ள ஹிந்துக்களுக்கு மிகப் பெரும் ஆபத்தாக சித்தரித்தன. அதுபோல் உலகச் சந்தையின் சிறு ஏற்ற, இறக்கங்களை ஐரோப்பாவின் பொருளாதாரக் குழப்படியையும் பிரத்யேகமாக ஒளிபரப்பும் மேற்குலக ஊடகங்களுக்கு முஸ்லிம்களின் அவலங்களை ஒளிபரப்ப மனமில்லை. அரபு ஊடகங்களுக்கோ தங்கள் பகுதியில் நடக்கும் சிரியா கலவரம் குறித்து கவலைப்படவே நேரமில்லை எனும்போது பர்மிய முஸ்லிம்களாவது, உலகளாவிய சகோதரத்துவமாவது.

ஆசியாவின் தாதாவாகத் தன்னைக் காட்டி கொள்ளும் சீனாவும் உலகின் மிகப் பெரும் ஜனநாயக நாடாகப் பறைசாற்றிக் கொள்ளும் என்னருமை தேசமும் இதுவரை ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடாமல் மெளனமாக இருக்கின்றன.

ஆங் சூ கியின் விடுதலைக்குப் பிறகு சர்வதேச அரசியலில் பர்மா நெருக்கமாகியுள்ள நிலையில், அந்நாட்டில் இன்னும் வெளியே கொண்டு வரப்படாத இயற்கை வளங்களையும் மலிவான மனித வளத்தையும் கருத்தில் கொண்டே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகு வழக்கம்போல் எழுப்பும் ஜனநாயகக் கோஷங்களை எழுப்பாமல் அமைதி காக்கிறது. ஒருசில அமைப்புகளைத் தவிர நமதூர் முஸ்லிம் அமைப்புகளும் இங்குள்ள அஸ்ஸாமுக்கும் தூரத்திலுள்ள பலஸ்தீனத்திற்கும் கொடுத்த குரலைக்கூட பர்மிய முஸ்லிம்களுக்கு கொடுக்காதது வேதனையே. காங்கிரஸ் உள்ளிட்ட ஒட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளைக் குறித்து சொல்லவே வேண்டியதில்லை.

பர்மாவில் சர்வதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடியதற்காக நோபல் பரிசு பெற்று, தற்போது உலகைச் சுற்றிவரும் 'புரட்சிப் பெண்' ஆங் சான் சூ கீயும் தம் நாட்டில் முஸ்லிகள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது குறித்தும் கொத்துக் கொத்தாகக் கொல்லப்படுவது குறித்தும் மெளமாக இருப்பது, முஸ்லிம்கள் விஷயத்தில் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையோ என்று எண்ண தோன்றுகிறது.  திபெத்திய மக்களின்மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்காகக் குரல் கொடுப்பவரும் நோபல் பரிசு பெற்றவருமான தலாய் லாமாவும் மியான்மர் முஸ்லிம்கள் விஷயத்தில் மெளனமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், ஆதாயம் இல்லையென்றால் முஸ்லிம்கள்மீது நடக்கும் தாக்குதலை வெளிப்படுத்தக்கூட மனம் இல்லா அளவுக்கே இஸ்லாத்தின் எதிரிகள் நடந்துகொள்வர் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலகும், ரஷ்யா, சீனா உள்ளிட்ட பொதுவுடமை நாடுகளானாலும் முஸ்லிம்கள் விஷயத்தில் இறைவன் தன் அருள்மறையில் சொல்வதுபோல் "அவர்களின் கொள்கையை ஏற்கும்வரை உங்களைப் பற்றித் திருப்தியடையமாட்டார்கள்" என்று சொல்வதை உண்மைப் படுத்துவதுபோலவே அவர்களின் நடத்தை உள்ளது. அல்லாஹ்வையும் அஞ்சி, கூடவே அதிகாரத்தில் அமெரிக்காவையும் அஞ்சி வாழும் முஸ்லிம் பெயர் தாங்கி அரசுகளும் இவ்விஷயத்தில் மெளனமாகவே உள்ளன.

துஆக்கள் உடனே ஏற்று கொள்ளப்படும் ரமலானில் நம் பர்மிய சகோதரர்களுக்காகக் கையேந்துவோம். துஆ எனும் வலிமையான ஆயுதத்தை கொண்டு நம் சகோதரர்கள் துயர் நீங்க கண்ணீர் மல்கக் கையேந்துவோம்.


நன்றி : இஸ்லாமியக் கொள்கை

oOo

"... மிகைத்தவனும் புகழுக்குரியவனுமாகிய அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டார்கள் என்பதையே அவர்கள் செய்த குற்றமாகக் கருதி (எதிரிகள் அவர்களைப் பழிவாங்கி)னர் (அல்குர் ஆன் 85:8).

Comments   

M.S.K
0 #1 M.S.K 2012-07-30 23:18
WHERE ARE THE SO CALLED CHAMPIONS OF HUMANITY AND WORLD NEW ORDER & PEACE ???
WORLD SILENCE AGAINST SUCH UNHUMAN CRIME IS A SHAME ,
BEWARE OF ALMIGHTY GOD WHO WILL TAKE YOU ALL TO ACCOUNT HERE OR HERE AFTER FOR SURE.
Quote | Report to administrator
MSA
0 #2 MSA 2012-07-31 10:46
மியன்மார் முஸ்லிம்களுக்கா க தொடர்ந்தும் குரல் கொடுப்போம். எங்கள் துஆக்களை கருணை மிக்க நாயன் - அல்லாஹ் சுப்ஹானல்லாஹ் ஏற்பான். இந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும். எல்லா பர்மிய செய்திகளையும் சந்திக்குக் கொண்டு வருவோம். விடா முயற்சி பலனளிக்கும் - இன்ஷா அல்லாஹ். பர்மிய முஸ்லிம்களுக்கு விடுதலை கிடைப்பதில் பங்காளியாக மாறுவோம்.
Quote | Report to administrator
நம்பிக்கையாளன்
0 #3 நம்பிக்கையாளன் 2012-07-31 23:00
நிராயுதபானிகளாக நிற்கும் பர்மிய முஸ்லிம்களை நினைக்கும்போது என்ன சொல்வது என்றே புரியவில்லை பாசிச பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள ் செய்தி தர மறுக்கலாம நம் இஸ்லாமிய சேனல்கள், பத்திரிக்கைகள் எங்கே சென்றன? இந்த உம்மத் ஒரு உடலைப்போன்றது என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்க ள் சொன்னார்கள் அந்த உணர்வு நமக்கு வரவேண்டும். அல்லாஹ் அந்த மக்களுக்க அவர்கள் அறியாத புறத்திலிருந்து ம் உதவியை வழங்குவானாக. நான் எனது இணையதளத்தில் அந்த சகோதரியின் செய்தியை முன்பே வெளியிட்டு இருந்தேன்.http: //niduri.com/?p aged=2 (இது எனக்கு வந்த மெயில் செய்திதான்.) நாம நம்மால முடிந்த வரை மக்களுக்கு செய்தியை கொண்டு சேர்ப்போம். மக்கள் பிரார்த்தனையாவத ு செய்யட்டும். அல்லாஹ் அந்த மக்களுக்கு பாதுகாப்பை வழங்குவானாக. சகோதரர்கள் நமது இணையதளத்திற்கு வருகை தரவும தங்களின் மேலான கருத்தை பதிவு செய்யவும். www.niduri.com
Quote | Report to administrator
Siddique
0 #4 Siddique 2012-08-01 01:47
JazakAllah khair for making this article! Very well said MSA. We must work hard for our brethren. I found the following petition. Please look at it and sign it and forward it to all who you know.

www.avaaz.org/.../?czPcccb

May Allah help the Muslims in Burma and in the rest of the world!
Quote | Report to administrator
šசஃபி
0 #5 šசஃபி 2012-08-01 11:46
வெகுசன ஊடகங்களுள் இந்நேரம்.காம் இணைய இதழ் மட்டும் மியான்மர் பற்றி செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுள் குவைத் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மட்டும் உப்புப் போட்டு உண்ணுவார் போலும் : inneram.com/.../...
Quote | Report to administrator
முஹம்மது ஹனீஃப்
0 #6 முஹம்மது ஹனீஃப் 2012-08-03 15:09
மனித உரிமையைப் பற்றி வாய்கிழிய கூப்பாடு போடும் அமைப்புகள் எங்கு சென்றுவிட்டன? பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில் கண்டதையெல்லாம் எழுதுபவர்கள், ஆபாசத்தையும்,அர ைநிர்வாணத்தையும ் மூலதனமாக்கும் பத்திரிக்கைகள் தூங்குகின்றனவா? இஸ்லாமியர்கள் ரோஷமில்லாதவர்கள ் என்று எண்ணிவிட்டார்கள ோ? இஸ்லாமிய நாட்டின் ஆட்சியாளர்கள் இதில் மவுனம் சாதிப்பது ஏன்? ஒரு வேளை உள்ளம் மரணித்த மவுனியாக இருக்கிறார்களா? இந்த அவலநிலையை ஒவ்வொருவரும் முழு உலகத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் இதனின் கூலியை அல்லாஹ் அருள்வானாக! இது போன்ற சூழ்நிலையில் முஸ்லிம்களாகிய நம்மின் பொறுப்பு என்ன? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்
Quote | Report to administrator
வளைகுடா  வழிப்போக்கன்
0 #7 வளைகுடா வழிப்போக்கன் 2012-08-04 14:00
ஒரு சமுதாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது,அதுவும ் அப்பாவிகள் நிறைந்து வாழும்.பர்மா, அசாம் , போன்ற பகுதிகளில் கலவரங்கள் தூண்டப்பட்டு அப்பாவி முஸ்லிம் சமுதாயம் துண்டாடப்பட்டு வருகிறது, ஆனால் நமது துர்அதிர்ஷ்டம் ..தமிழ் நாட்டில் பொறுத்த மட்டில் வீட்டுக்கு ஒரு அமைப்பு இருக்கிறது இருந்தும் என்ன பயன், தங்களுடைய கட்சியையும். ?கொள்கையையும் ? வளர்பதிலே முனைப்பு காட்டுகிறார்கள் . அடுத்த சகோதரனை அழித்து தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற ஆனவபோக்கு,இயக்க த்தில் இருக்கும் தனி மனிதனுக்காக வீதியில் இறங்கி போராடுகிறார்கள் . ஆனால் எங்கோ ஒரு மூலையில் அப்பாவிகள் [முஸ்லிம் சமுதாயம்] பாதிகப்படால் அதற்க்கு மருந்துக்கு கூட கண்டனமோ, போராட்டமோ செய்ய முனைவதில்லை.ஒரு சில அமைப்புகள் மட்டுமே ஒருசில சமுக விஷயத்தில் அக்கறை காட்டுகின்றது. நெல்லை அதிர்ந்தது,சென் னை திணறியது. கோவை மிரண்டது ,,இப்படி பல உண்டு ,,ஆனால் பர்மா முஸ்லிம்களுக்கா க ஒரு ஊராட்சி கூட அல்லது வீதி கூட நடுங்க வில்லை என்பது நிதர்சனம் ,,,நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது அப்பாவி சமுதாயம் எங்கோ அடிமைப்பட்டு கிடக்கிறது, என்பது மட்டும் உண்மை ., பதிக்கப்படும் எம் சமுதாயத்திற்காக இந்த புனித ரமலான் மாதத்தில் அவர்களுக்காக இறைவனிடம் கையேந்துவதை தவிர வேறு ஆயுதம் எம்மிடம் இல்லை .
Quote | Report to administrator
sefiya
0 #8 sefiya 2012-08-09 11:37
intha kodumaiyana nigalvuglai i na( U N ) sabaikku enna vali ?
Quote | Report to administrator
Mohamed Iqbal
0 #9 Mohamed Iqbal 2012-08-09 23:24
Muslimgal peyarthangihala aha vazhamal unmai muslimgalaaha, quran sunnavai muzhumaiyaha pinpatri vaalthaalthan
intha kodumaigal theerum. Allahvai thavira veru yentha thalaivanai nambiyum payan illai. Iqbal.
Quote | Report to administrator
Ahamed Mohideen
0 #10 Ahamed Mohideen 2012-08-11 12:00
Assalamu Alaikum,here I want to register my comments.Genera lly world medias & world leaders are against,Muslims & Islam,they don't raise voice against any such attrocities,eve n noble laurets for peace also keep quiet for any attrocities against Muslims,to the worst even Muslim countries & Muslim leaders are also don't say or act against such attrocities.Dea r beloved brothers plz.write your comments in Indian newspapers which is working against us.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்