முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி பள்ளிவாசலின் முன்பு சித்திரை முதல் நாள் அன்று எக்கச்சக்கக் கூட்டம். தமிழ்ப் புத்தாண்டுக்காகச் சிறப்புத் தொழுகை நடந்தது ஒரு பக்கம் என்றால், பாவாஜான் சாகிப் தாத்தா தன்னுடைய 101-வது பிறந்த நாளைக் கொண்டாடியது இன்னொரு காரணம். '101 வயதா?’ என்று புருவம் உயர்த்திப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அனைவரும்.

 

''பாவாஜான் வெறுமனே கேக் மட்டும் வெட்ட மாட்டாருங்க. அவரு இன்னமும்  திடகாத்திரமா இருக்காரு. அதனால கின்னஸ் சாதனை முயற்சிக்காக ஜீப்பை இழுக்கப் போறார்!’ என்று அறிவிக்கிறது பள்ளி வாசல் ஸ்பீக்கர். ஆச்சர்யத்தோடு பைக், சைக்கிளில் போய்க்கொண்டு இருந்தவர்கள் ஸ்டாண்ட் போட்டுவிட்டு ஆர்வமாகக் திரள ஆரம்பித்தார்கள். செய்தி வேகமாகப் பரவ... வழியில் வருகிறவர்கள், போகிறவர்கள், ஆட்டோ டிரைவர்கள், பஸ் டெப்போ ஊழியர்கள், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தவர்கள் என நண்டுசிண்டில் இருந்து பெருசுகள் வரை பள்ளிவாசலைச் சுற்றிக் கூட ஆரம்பித்தார்கள்.

மதியம் தொழுகை முடிந்ததும் சாகிப் தாத்தா வெளியே வந்து அனைவரையும் பார்த்து சலாம் செய்தார். ஜீப்பைக் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து ஏதோ முணுமுணுத்தார்.

101 வயது ஆச்சரியம்!
"தினமும் எங்க வீட்டுல இருந்து மூணு மைல் நடந்து பள்ளி வாசலுக்கு வருவேன். அஞ்சு வேளை தொழுறேன்.

பின் முழுத் தெம்பையும் கூட்டி கயிற்றைத் தோள் பட்டையில் வைத்து இழுக்க, ஜீப் நகர ஆரம்பித்தது. கூடியிருந்த மக்கள் ஆரவாரத்தோடு கைதட்ட, பள்ளி மாணவர்கள் 'கமான் தாத்தா... கமான்!’ என்று அலறினார்கள். 300 மீட்டர் தூரம் வரை அநாயாசமாக இழுத்தவர், ஐந்து நிமிடங்கள் ரெஸ்ட் எடுத்தார். குளுகோஸ் தண்ணீர் குடித்தவர், ஒரே தம்மில் 200 மீட்டர் வரை ஜீப்பை இழுத்து ஆச்சர்யப்படுத்தினார். இளைஞர்கள் சிலர் கைகொடுக்க, ஒரு சிறுவன் தாத்தாவிடம் ஆட்டோகிராஃப் வாங்கினான். பாராட்டு மழையில் நனைந்துகொண்டு இருந்த தாத்தாவை ஓரம்கட்டிப் பேசினேன்.

''எனக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம். சின்ன வயசுல இருந்தே கபடி, ஓட்டம், தாண்டுறதுனு நல்லா விளையாடுவேன். பள்ளிக்கூடம் படிக்கும்போது நான் போகாத போட்டிகளே கிடையாது. தூத்துக்குடிக்கு வந்து 15 வருஷம் ஆகுது. வயசுதான் ஆகுது. உடம்பு நல்லா இருக்கு. இப்பவும் நல்லா நடப்பேன். வாய் குழறாமப் பேசுவேன். கண்ணாடி போடாம பேப்பர் படிப்பேன். தினமும் எங்க வீட்டுல இருந்து மூணு மைல் நடந்து பள்ளி வாசலுக்கு வருவேன். அஞ்சு வேளை தொழுறேன். பயறு வகைகள், நிறைய காய்கறிகளை உணவில் சேர்த்துக்குவேன். இந்தக் காலத்துல முப்பது வயது தாண்டினாலே ஷுகர், பிரஷர்னு நிறைய வியாதிகள் வருது. எல்லாமே முறையா சாப்பிடறது இல்லை. உடற்பயிற்சி செய்றது இல்லை. சின்ன வயசுல நான் சாப்பிட்ட கம்மங்கஞ்சியும், கேப்பங்கூழும், விளையாடின விளையாட்டுகளும்தான் என் தெம்புக்குக் காரணம். ஒரு மனுஷனுக்கு 60 வயசுதான் சராசரி ஆயுள். அதுக்கு மேல வாழ்ந்தோம்னா மற்றவங்க உதவியை எதிர்பார்க்கக் கூடாது. மற்றவங்க உதவியை எதிர்பார்த்தா நமக்கும் பிரச்னை. அவங்களுக்கும் பிரச்னை. உடம்பு திடகாத்திரமா இருக்க தினமும் ஒரு மணி நேரம் யோகா, கராத்தேனு ஏதாவது பயிற்சி செஞ்சாலே போதும். இன்னும் 20 வருஷம் வரைக்கும் இதே தெம்போட என்னால வாழ முடியும். அதுக்கான உடல் திடகாத்திரத்தை அல்லா எனக்குக் கொடுப்பார்'' முதுமையின் அழகு ததும்பச் சிரிக்கிறார் பாவாஜான் சாகிப் தாத்தா!

நன்றி: விகடன்

Comments   

அபூ ஸாலிஹா
0 #1 அபூ ஸாலிஹா 2012-04-29 00:13
மாஷா அல்லாஹ்... இந்த வயதிலும் உடற்பயிற்சிகள், பல மைல் நடந்து சென்று தொழும் தொழுகைகள்... அல்ஹம்துலில்லாஹ ்... இளைய தலைமுறைக்கு பல்வேறு விஷயங்களில் நல்லதொரு உதாரணப் புருஷரைக் கண்ட திருப்தி!

எல்லாம் வல்ல இறைவன் பாவா சாகிப் தாத்தாவுக்கு நோய் நொடியற்ற வாழ்க்கையைத் தருவானாக!
Quote | Report to administrator
நஸ்ருல்லாஹ்
0 #2 நஸ்ருல்லாஹ் 2012-04-29 00:58
//தினமும் எங்க வீட்டுல இருந்து மூணு மைல் நடந்து பள்ளி வாசலுக்கு வருவேன். அஞ்சு வேளை தொழுறேன்./

3x2x5=60 மைல்கள்!

தினசரி 60 மைல்கள் பள்ளிவாசலுக்குச ் சென்று தொழுவதற்காகவே நடக்கும் 101 வயது பெரியவர்! மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!

ஐவேளை தொழுகைக்குப் பள்ளிவாசலுக்கே செல்லாமல், கேட்டால் காதில் பூச்சுற்றும் காரணங்கள் கூறும் "தூய தௌஹீதுவாதி"கள் நிறைந்துள்ள தமிழகத்தில், இப்படியும் ஒரு முஸ்லிமா? அல்லாஹ் நம் அனைவருக்கும் இத்தகைய மனப்பான்மை ஏற்பட கருணைபுரியட்டும ்!
Quote | Report to administrator
V.MOHAMED IBRAHIM
0 #3 V.MOHAMED IBRAHIM 2012-04-29 10:46
REALLY WE ARE GLAD ABOUT THAT OLD AND RESPECTFUL MAN. HE IS THE MAN OF RESEMBLE TO ALL ISLAMIC COMMUNITY
Quote | Report to administrator
Faiza banu
0 #4 Faiza banu 2012-04-29 11:33
நல்ல முன்மாதிரி தாத்தா.

இந்த வயதிலும் இப்படி சுறுசுருப்பாக இருக்க, இளம் வயதினர் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

இவரைத் தொடர்பு கொண்டு சொல்லுங்களேன்.
Quote | Report to administrator
daoud Tharik
0 #5 daoud Tharik 2012-04-29 13:23
பெரியவர் நீண்ட உடல் ஆரோக்கியத்துடன் வாழட்டும் இன்ஷா அல்லாஹ்.ஆனால் பிறந்த நாளுக்கு கேக் வெட்டி கொண்டாடுவது நபி வழி இல்லையே .
நஸ்ருல்லாஹ் ; தவ்ஹித்வாதிகளின ் விடயத்தில் தலையிடுவது உங்களுக்கு கேக் சாப்பிடுவது போல் இருக்கிறது .
நம்முடைய விடயத்தில் நாமே முரண் பட தேவையில்லையே.உங ்களுக்கு நல்ல மனது இருந்தால் நன்மையே ஏவி தீமையே தடுங்களேன் .நன்மையே ஏவும் கூட்டமாக மட்டும் இல்லாமல் இருக்க நம் அனைவரையும் அல்லாஹ்
பாதுகாப்பானாக .ஜசக்ஹல்லாஹ் .
Quote | Report to administrator
S.S.K.
0 #6 S.S.K. 2012-05-01 23:55
அஸ்ஸலாமு அலைக்கும்

தாத்தாவை மனமாற பாராட்ட வேண்டிய விஷயங்கள் குறிப்பாக நடந்து பள்ளி சென்று தொழுவது உடற்பயிற்சி செய்வது போன்றவை இருப்பினும், முக்கியமான சில விஷயங்களை இங்கு சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இஸ்லாமிய புத்தாண்டுக்கு என்றே சிறப்புத் தொழுகை ஏதுமில்லை எனும் போது தமிழ் புததாண்டுக்கு சிறப்பு தொழுகை,
பிறந்த நாள் கொண்டாடுவது சர்ச்சைக்குரியத ாக இருக்கும் நிலையில் கேக் வெட்டி கொண்டாடுவது போன்றவை... இஸ்லாமிய வழிக்கு மாறானதும் மேற்கத்திய கலாச்சாரம் என்பதை தாத்தாவும அனைவரும் உணர்ந்து இவற்றை தவிர்க்க வேண்டும்.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்