முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

''எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் மக்கள் புயல்ல பாதிக்கப் பட்டு இருக்காங்கன்னு அப்பா சொன்னதும் மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு. அதான் நான் சேர்த்துவெச்ச காசை அவங்களுக்குக் கொடுக்கலாம்னு வந்தேன்!'' என்று சொல்லி இரண்டு உண்டியல்களுடன் விகடன் அலுவலகத்துக்கு வந்து நின்றாள் அசினா பர்வீன்.

 

அதில் சைக்கிள் வாங்குவதற்காக அவள் சேர்த்துவைத்திருந்த ரூ.3,052 சில்லறைகளாகச் சிரித்தன. விகடனின் 'தானே’ துயர் துடைப்புப் பணிகளுக்கு அந்தத் தொகையைக் கொடுத்துச் சென்றாள் அச்சிறுமி. (இதுபற்றிய செய்தி 26.2.2012 தேதியிட்ட ஜூ.வி. இதழில் வெளியாகி இருந்தது!)

 

'தானே' துயர் துடைக்க.. நீளட்டும் நம் கரங்கள்!

'சைக்கிள் வாங்க வைத்திருந்தேன்!''


நம்முடைய அலுவலகத்துக்கு இரண்டு உண்டியல்களுடன் வந்திருந்தார் அஸினா பர்வீன் என்ற சிறுமி. அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இவர் அந்த உண்டியல்களை நம்மிடம் கொடுத்து, 'கடலூர் பகுதி மக்களுக்காக என்னுடைய உதவி இது. எனக்கு சைக்கிள் வாங்கணும்னு ரொம்ப ஆசை. அதுக்காக சேர்த்து வெச்சிருந்தேன். ஆனா, கடலூர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் உடனே அவங்களுக்குக் கொடுக்கத் தோணுச்சு'' என்று கொடுத்தார். எண்ணிப் பார்த்தால் மொத்தம் 3,052 ரூபாய் இருந்தது. அஸினாவின் கருணைக்கு விலை ஏது!

ஜூனியர் விகடன், 26.02.2012

அந்தப் பிஞ்சு மனதின் தியாகம் ஏகமான வாசகர்களை நெகிழ வைத்து இருந்தது. இந்த நிலையில் தனது கனவைக் கலைத்து 'தானே’ நிவாரணத்துக்கு நிதி அளித்த அசினாவின் கனவை நிறைவேற்றி இருக்கிறது டி.ஐ.சைக்கிள்ஸ் ஆஃப் இண்டியா’ (பி.எஸ்.ஏ. ஹெர்குலிஸ்) நிறுவனம்!

அசினாவின் நன்கொடைச் செய்தியைப் படித்து விட்டு நம்மைத் தொடர்புகொண்ட அந்த நிறுவனத்தின் இணை விற்பனை மேலாளர் கனகராஜ், ''அசினா எங்கள் ஷோரூமுக்கு வந்து தனக்குப் பிடித்த மாடல் சைக்கிளைத் தேர்ந்தெடுக்கட்டும். அதை அவளுக்கு இலவசமா வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இது அசினாவின் பரந்த மனசுக்கு எங்களுடைய சின்ன பரிசு!'' என்றார்.


பாடி பி.எஸ்.ஏ. சைக்கிள் ஷோரூமில் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு இருந்த மிதிவண்டிகளை ரசித்துக்கொண்டே வந்தவள், பிங்க் நிற 'லேடி பேர்டு’ சைக்கிள் மீது கை வைத்து நின்றாள். கண்களில் ஆர்வமும் தயக்கமும் ஒருசேர மின்னின.


''இந்த சைக்கிள் பிடிச்சிருக்கா?'' என்று கேட்டதும் சின்னப் புன்னகையால் ஆமோதித்தாள். சைக்கிளில் ஏறி அமர்ந்ததும் சிட்டாகப் பறக்கத் தொடங்கி விட்டாள் அசினா. குறுகலான வீதிகளுக்குள் சர்..சர் என சைக்கிள் விட்டுக் கொண்டு இருந்த மகளைப் பூரிப்பாக பார்த்துக் கொண்டே பேசினார் அசினாவின் தாய் பாத்திமுத்து.


''முன்னாடியே இவ 750 ரூவா வரை உண்டியல்ல சேர்த்துவெச்சிருந்தா. குடும்பக் கஷ்டத்துல அந்த உண்டியலை உடைச்சுதான் சமாளிச்சோம். இவங்க அப்பா விகடன் வாசகர். விகடன் 'தானே’ துயர் துடைப்புப் பணிக்காக இவர் ஒவ்வொருத்தர் கிட்டயும் கையேந்துனார். அப்போ இவகிட்ட சும்மா விளையாட்டா கேட்டார். 'எதுக்கு’ன்னு விசாரிச்சா. விஷயத்தைச் சொன்னதும் உடனே இவ உண்டியலை எடுத்துக் கொடுத்துட்டா. இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு நல்ல குணத்தை அல்லா இவளுக்குக் கொடுத்திருக்காரேன்னு சந்தோஷமா இருக்கு!''


நன்றி: ஆனந்த விகடன் 07 மார்ச் 2012

Comments   

Rifath
0 #1 Rifath 2012-03-03 07:44
Asina Parveen, May Allah provide you more health, Knowledge and wealth... Ameen
Quote | Report to administrator
J.AMEERALI
0 #2 J.AMEERALI 2012-03-03 10:43
dear brothers, we have to note down one important thing in this matter. How to bring up our children and train them in good habits and thinking? Yes, my thanks to sister Asina Parveen and her parents. J.Ameer Ali, KSA.
Quote | Report to administrator
Aashiq Ahamed A
0 #3 Aashiq Ahamed A 2012-03-03 12:11
அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த சிறுமிக்கு மேலும் மேலும் கல்வி ஞானத்தை இறைவன் கொடுக்க வேண்டும். நாம் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தால் இறைவன் நமக்கு இன்னும் அதிகமதிகமாக தருவான். இன்ஷா அல்லாஹ்,

சகோதரர் கனராஜ் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி...

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
Quote | Report to administrator
nasar
0 #4 nasar 2012-03-03 12:39
இந்த பிஞ்சுவின் ஈகை குணத்தால் நான் வெட்கப்படுகிறேன ் .....
தானே புயல் நிவாரண நிதிக்கு கொடுக்கவில்லையே
என்று என்னும் போது ....
Quote | Report to administrator
முஹம்மத் ஆஷிக் - citizen of world
0 #5 முஹம்மத் ஆஷிக் - citizen of world 2012-03-03 19:34
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"இவங்க அப்பா விகடனின் 'தானே’ துயர் துடைப்புப் பணிக்காக ஒவ்வொருத்தர் கிட்டயும் கையேந்துனார். அப்போ இவகிட்ட சும்மா விளையாட்டா கேட்டார். 'எதுக்கு’ன்னு விசாரிச்சா. விஷயத்தைச் சொன்னதும் உடனே இவ உண்டியலை எடுத்துக் கொடுத்துட்டா. (ஆசை ஆசையா சைக்கிள் வாங்க சேமிச்ச பணம் 3,052 ரூபாய்) இந்தச் சின்ன வயசுல இப்படி ஒரு நல்ல குணத்தை அல்லாஹ் இவளுக்குக் கொடுத்திருக்கார ேன்னு சந்தோஷமா இருக்கு!''----- -ஹசீனாவின் தாய்...ஃபாத்திமுத்து...!
----------------ஜசாக்கல்லாஹு க்ஹைர் பேரன்ட்ஸ்.... என்ன வித்தைத்தீர்களோ அதுதான் விளைந்து இருக்கிறது...!
Quote | Report to administrator
முஹம்மத் ஆஷிக் - citizen of world
0 #6 முஹம்மத் ஆஷிக் - citizen of world 2012-03-03 19:36
நல்ல பழக்க வழக்கங்கள் பெற்றோர் மூலமாக தான் குழந்தைக்கும் வரும்..! வெட்டு, குத்து, கொலை, வன்முறை, ஆபாச சினிமா பார்க்கவிட்டு.. . தனி ரூம் தந்து இன்டர்நெட் வசதி செய்து கொடுத்து... கண்டிக்காமல்... இஷ்டத்துக்கு குழந்தையை 'வளர வைத்தால்...' அது டீச்சரை கத்தியாலே குத்தி கொலை பண்ணும்.... அப்படி ஒரு புள்ளையை... போன மாசம் செய்தியில் பார்த்தோம்...!

ஆனால், இந்த புள்ளை அப்படியல்ல... அல்ஹம்துலில்லாஹ ்... இஸ்லாம் சொல்லிக்கொடுத்த முறையில்... ஜகாத்-சதகா போன்ற தர்ம சிந்தையுடன் "வளர்க்கப்பட்டு ..." பெற்றோர் சொல் பேணி நல்ல படி வளர்ந்து... நல்ல சிந்தனையை செயல்டுத்தி காட்டிய ஹசீனா ஃபர்வீன்க்கு பெரிய்ய்ய்ய்ய congrats....!!! அந்த பெற்றோருக்கும் அதைவிட பெரிய congrats...! மாஷாஅல்லாஹ்...!

முஸ்லிம் பெற்றோருக்கு ஒரு பாடமாக இருக்கின்றன... இந்த இரு சம்பவங்களும்.

செய்தி பகிவுக்கு மிக்க நன்றி சத்த்யமார்க்கம் சகோஸ்..!
Quote | Report to administrator
Rajaram
0 #7 Rajaram 2012-03-03 20:52
God Bless you my child.
Quote | Report to administrator
Suresh Kumar
0 #8 Suresh Kumar 2012-03-03 20:52
அந்த பிஞ்சு மனதின் ஆசயை நிறைவேட்றிய திரு.கனஹராஜ்...

Hats off to you!
Quote | Report to administrator
Usha
0 #9 Usha 2012-03-03 20:53
இந்த குழந்தைக்கு சேமிப்பை கற்று கொடுத்த பெற்றோருக்கு பாராட்டுக்கள்,எ ல்லா நலங்களும் பெற்று அசினா வாழ்க வளமுடன்...
Quote | Report to administrator
fariha
0 #10 fariha 2012-03-03 21:58
subahaanallah! அந்த சிறுமிக்கு மென்மேலும் அல்லாஹ் அருள்புரிவானாக! அந்த வழியில் அவளை வளர்த்த பெற்றோருக்கும். ...
Quote | Report to administrator
AHMAD NOOHU
0 #11 AHMAD NOOHU 2012-03-04 04:53
BISMILLAH...ASS ALAMUALAIKUM WRWB."MAY ALMIGHTY ALLAH BLESS HER IN BOTH WORLDS"
Quote | Report to administrator
iqbalden.a
0 #12 iqbalden.a 2012-03-04 10:09
அஸ்ஸலாமு அலைக்கும்,

மாஷா அல்லாஹ். கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்த சிறுமிக்கு மேலும் மேலும் கல்வி ஞானத்தை இறைவன் கொடுக்க வேண்டும். நாம் அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தால் இறைவன் நமக்கு இன்னும் அதிகமதிகமாக தருவான். இன்ஷா அல்லாஹ், zashak allahul hayer asina barvin

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,

iqbalden.A
Quote | Report to administrator
abdus samadh
0 #13 abdus samadh 2012-03-04 11:07
அல்ஹம்துலில்லாஹ ், நெகிழ வைக்கும் செயல், வாழ்த்துக்கள் ஹசினா, வல்ல இறைவன் என்றென்றும் உன்னை நேர்வழியில் வைத்திருக்கட்டும்......

வாழ்த்துக்கள் திரு.கனகராஜ், உங்களது பரந்த உள்ளத்திற்கும். .....
Quote | Report to administrator
Ansary
0 #14 Ansary 2012-03-04 13:39
கண் கலங்கி நிற்கிறேன்..... சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. வல்ல ரஹ்மான் இந்த குழந்தைக்கு மென்மேலும் வளர்ச்சியை தருவானாக.
Quote | Report to administrator
balkis
0 #15 balkis 2012-03-04 15:07
நல்ல பழக்க வழக்கத்தை ஃபர்வினின் பெற்றோர் சொல்லி குடுத்து இருக்காங்கன்னு சொல்ரதை விட.......... தாய் தந்தையின் பழக்க வழக்கத்தை அசினா பர்வின் பார்த்து பார்த்து வழந்து இருக்காங்க அதான் மனதில் குடுக்கும் மனபான்மை தானாக வந்து விட்ட்டது அந்த பிஞ்சு உள்ளத்திற்க்கு இறக்க உள்ள்த்திற்க்கு இரைவன் குடுத்த பரிசு கிடைத்து விட்ட்டது இரைவனுக்கும் அந்த பரிசை குடுத்து அந்த நல்ல மனிதருக்கும் மிக்க நன்றி
Quote | Report to administrator
kamal batcha
0 #16 kamal batcha 2012-03-05 05:20
நன்றி: ஆனந்த விகடன் 07 மார்ச் 2012. என்ற தேதி தப்பாக இருக்கிறது இன்று தேதி மார்ச் 5 தான்.


அந்த சிறுமிக்கு மென்மேலும் அல்லாஹ் அருள்புரிவானாக!
Quote | Report to administrator
S.S.K.
0 #17 S.S.K. 2012-03-05 10:17
Assalamu Alaikum
Amazing and inspiring gesture by a small child who came forward to donate her dream savings to the noble cause of the storm victim...
Double Salaam to you Hasina Parveen and parents ....... JAZAKUMULLAHU KHAIRAN
Also Mr kanagaraj's reciprocal gesture to fulfill the child's dream of having a cycle as a gift .........
Last but not least to Satyamargam.com for such inspiring articles...
May Allah bless and reward you all.
Quote | Report to administrator
கீதா கண்ணன்
0 #18 கீதா கண்ணன் 2012-03-05 21:48
நிசமாகவே நெகிழ வைத்து விட்டாள் அசினா...

பெற்றோருக்கு வாழ்த்துக்கள், கருணை மனம் கொண்ட இப்படி ஒரு பிள்ளையை பெற்றமைக்கு...

கமால் பாட்சா அவர்களே, ஆனந்த விகடன், ஜுனியர் விகடன் நாளைக்கு கடையில் விற்பனைக்கு வரும் அதன் தேதி 14-3-2012 என்று இருக்கும் பாருங்கள். (ஒரு வாரத்திற்கு பிந்தைய தேதி) விற்பனைக்காக இப்படி பின்பற்றுகிறார் கள்.
Quote | Report to administrator
Abu Amna
0 #19 Abu Amna 2012-03-06 08:09
அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்....

"இந்த குழந்தைக்கு அல்லாஹ் இம்மைலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக!!!"சகோதரர் முஹம்மத் ஆஷிக் - citizen of world: அவர்கள் கவனத்திற்க்கு,

""நல்ல பழக்க வழக்கங்கள் பெற்றோர் மூலமாக தான் குழந்தைக்கும் வரும்..! வெட்டு, குத்து, கொலை, வன்முறை, ஆபாச சினிமா பார்க்கவிட்டு.. . தனி ரூம் தந்து இன்டர்நெட் வசதி செய்து கொடுத்து... கண்டிக்காமல்... இஷ்டத்துக்கு குழந்தையை 'வளர வைத்தால்...' அது டீச்சரை கத்தியாலே குத்தி கொலை பண்ணும்.... அப்படி ஒரு புள்ளையை... போன மாசம் செய்தியில் பார்த்தோம்...! """


நீங்கள் குறிப்பிட்டிருக ்கின்ற இந்த செய்தி துக்கத்தில் இருக்கும் அந்த பெற்றோர்களை மேலும் பாதிக்கும் வாய்ப்புள்ளது, அந்த மாணவனுடைய பெற்றோரின் பழக்கவழக்கங்கள் , வளர்ப்பு பற்றியும் , அந்த மாணவனின் குணம் பற்றியும் முழுமையாக தெரியாத நிலையில் இவ்வாறு கருத்து சொல்வது முறயானது இல்லை என்பது என்னுடைய கருத்து. குழந்தைகள் செய்யும் அனைத்து செயல்களுக்கும் பெற்றோர்கள் காரனமாகமாட்டார் கள். அப்படி பார்த்தாள் இப்ராஹீம் நபி இஸ்லாத்தை ஏற்றிருக்க முடியாது, நூஹு நபியுடைய மகன் இஸ்லாத்தை ஏற்றிருக்க வேண்டும். இந்த கருத்து உங்கள் மனதை புண்படுத்துவதாக தெரிந்தால் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்து கொள்ளவும்.

ஜசாக்கல்லாஹ்.....
Quote | Report to administrator
sara
0 #20 sara 2012-03-06 15:28
மாஷா அல்லாஹ்.. ஹசீனா ஃபர்வீனுக்கும் அவளது பெற்றோருக்கும் வல்ல அல்லாஹ் வளமான வாழ்வை கொடிப்பானாக.. ஆமீன்.
Quote | Report to administrator
Bahrudeen
0 #21 Bahrudeen 2012-03-07 13:59
May Allah bless her...
Quote | Report to administrator
திப்பு சுல்தான் வழிப்போக்கன்
0 #22 திப்பு சுல்தான் வழிப்போக்கன் 2012-03-08 09:49
உள்ளதை ஈரமாக்கிய அந்த பிஞ்சின் பரந்த மனது உண்மையிலேயே உடல் சிலிர்த்து விட்டது
தன் ஆசைகளை உண்டியலுக்குள் வைத்திருந்தவள் ஊர் அறிய உடைத்து விட்டாள்,,
''தனக்கு பிறகுதான் தானம்'' என்ற என்னத்தை உடைதவள் இந்த பிஞ்சாகத்தான் இருக்கும்
இவளின் எதிர்காலம் நல்ல முறையில் அமைய வல்ல இறைவனை வேண்டுகிறேன்..
ஊழல் வாதிகளுக்கு இந்த பிஞ்சு உள்ளம் ஓர் படிப்பினை சொல்லிகொடுகிறது என்றால் அது மிகை ஆகாது ''நீங்கள் பிறர் மீது கருணை காட்டினால் உங்களை படைத்த இறைவன் உங்கள் மீது கருணை கட்டுவான்..
பிஞ்சின் ஆசையை நிறைவேற்றிய சகோ கனகரசுக்கு நன்றி,[புகழ் அனைத்தும் இறைவனுக்கே உரித்தாகட்டும்]
Quote | Report to administrator
Jamaludeen
0 #23 Jamaludeen 2012-03-12 00:11
May god ALLAH bless baby haseena and parrnts and accept their noble deeds. Thank you Br.Kanakaraj for your timely appreciation.
Quote | Report to administrator
M.அசாருதீன்
0 #24 M.அசாருதீன் 2012-04-10 20:06
மாஷா அல்லாஹ் இந்த செய்தி மிகவும் மனதிற்கு நிறைவாக உள்ளது.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்