முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

பொதுவானவை

மும்பையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் Techno Fest 2009-ல், Annual International Science Festival என்னும் பிரிவில் நேற்று துபாய் வாழ் இளையான்குடியை சேர்ந்த கம்பது அஸ்ரப் அலி - ஆபிதா இவர்களது மகனாராகிய அர்ஸத் அவர்கள் தாக்கல் செய்த விலை குறைவான செயற்கை சுவாச இயந்திரம் (Ventilator) என்னும் தன்னுடைய புதிய கண்டுபிடிப்புக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. மொத்தம் 24 புதிய கண்டுபிடிப்பபுகள் தாக்கல் செய்யப்பட அதில் 10 தெரிவு செய்யப்பட்டு அதில் முதல் பரிசாக இவரது கண்டுபிடிப்பு பரிசு பெற்றிருக்கிறது.

 

அர்ஸத் அவர்கள் துபாயில் பிடெக் இன்ஸ்டுரூமென்டேசன் நான்காம் ஆண்டு பயின்று கொண்டிருக்கிறார் என்பது இன்னும் சிறப்பான தகவல்.

இந்த புதிய கண்டுபிடிப்புக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த இவரது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்து கூறுவதோடு நாமும் இளையான்குடியான்கள் என்ற வகையில் பெறு மகிழ்ச்சி அடைகிறோம். இந்த சாதனை (இளம்; விஞ்ஞானி) நாயகன் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை இறைஞ்சுகிறோம். மேலும் இவர் மென்மேலும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி நம் நாட்டுக்கும் நம் ஊருக்கும் பெயர் பெற்று தர வேண்டும் என்று வாழ்த்துவோம்.

தகவல்: இளையான்குடி இணையம

 

Comments   

abdul azeez
0 #1 abdul azeez -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லிம்களுக்கு ம். சகோதரர் அர்ஷத் அவர்களின் கண்டுபிடிப்பு மேலும் அதிகரிக்க வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

மா சலாம்.

அப்துல் அசீஸ்.
Quote | Report to administrator
கனி
0 #2 கனி -0001-11-30 05:21
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இளம் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை வெளியிட்ட சத்தியமார்க்க குழுவினர்களுக்க ு வாழ்த்துக்கள்.
இளையான்குடி இணையதள பொறுப்பாளர்களுக ்கு அன்பான வேண்டுகோள், தாங்கள் அவருடைய கண்டுபிடிப்பின் விவரங்களையும் இத்துடன் தமிழில் சேர்த்திருந்தால ் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். நமது இணையதள இணைப்பில் இதனுடைய விபரங்கள் முழுமையாக இருந்தாலும், அதிகமானவர்கள் செய்திகளை படித்துவிட்டு இணைப்பிற்கு செல்லமாட்டார்கள ். சிரமம் இல்லையெனில் விவரத்தையும் வெளியிட கேட்டுக்கொள்கின்றேன்.
சிரமத்திற்கு வருந்துகின்றேன்.
வஸ்ஸலாம்
கனி
Quote | Report to administrator
jayasrimahi
0 #3 jayasrimahi 2009-12-28 08:47
நல்ல கண்டுபிடிப்பு. அசத்தல்.

=========
உங்கள் பின்னூட்டம் தமிழாக்கப் பட்டுள்ளது.
நீங்களே நேரடியாகத் தமிழில் பின்னூட்ட:
www.satyamargam.com/.../
- சத்தியமார்க்கம் .காம்
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்