முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

கவிதை

க்க ஒரு தெய்வம்
அழிக்க ஒரு தேவன்
காக்க ஒரு கடவுள்
கண்காணிக்க ஒன்று

படைக்க ஒரு பரம்பொருள்
பரிபாலிக்க பரமன் என
பகிர்ந்தெடுத்துப் பணிசெய்ய
பலகீனனல்லன் இறைவன்

வானங்களைப் படைத்தவன்
வணக்கத்திற்குரியவன்
அவன் என்று சொல் - அவன்
ஒருவன் என்று கொள்

உடற் தேவை உளத் தேவை
உள்ளிழுத்து வெளியேற்றும்
உயிர் சுவாசத் தேவை - இன்னும்
அகத் தேவை புறத் தேவை
அளவற்ற பொருட் தேவை
எனும் எத் தேவையும்
இல்லாதவன் அவன்

தாயொரு தெய்வம்
தந்தையொரு கடவுள்
மகனொரு கடவுள் - அவர்தம்
அண்ணனும் ஆண்டவன் என்று
குடும்ப உறுப்பினர்
பட்டியல் போலன்றி

ஈகையை எடுத்தியம்பும்
ஈடிணையற்ற இறைவன்
எவரையும்
ஈன்றெடுத்ததில்லை
யாராலும்
ஈன்றெடுக்கப் படவுமில்லை

அவனியைக் காக்கும்
அவனுக் கிணையோ
அகிலமும் படைத்த
அவனுக்கு நிகரோ
அவ் வொருவனைத் தவிர
யாரு மிலர்!

oOo

(இறைமறையின் அத்தியாயம் 112 - இக்லாஸின் கரு)

ஆக்கம் : சபீர்

Comments   
Zafar Rahmani
0 #1 Zafar Rahmani 2016-10-31 10:17
ஆழ்ந்த பல கருத்துக்கள். இக்லாஸ் அத்தியாயத்தின் முழுகருத்தும் இன்றைய பல தெய்வ கொள்கைகளை முன்னிருத்தி விளக்கம் அளிக்கப்பட்டது பிடித்திருக்கிற து.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்