முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கவிதை

வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

'தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்'

மெய்யை உணர்த்தும் ரமளானே!

உணவே இருந்தும் உண்ணவில்லை
   ..உண்மை அன்றி உரைக்கவில்லை
நினைவில் கொண்டோம் இறையவனை
   ..நேரம் வீணில் போக்கவில்லை
உணர்வில் இலங்கும் வாய்மையிலே
   ..உலகம் உய்யும் எண்ணமதே
மணக்கும் வணக்க வழிபாடு
   ..மகிழ்வாய்ப் பூத்த ரமளானே..!

நாவை அடக்கும் பயிற்சியிலே
   ..நன்மை விளையக் கண்டிருந்தோம்
நோவு கண்ட உள்ளமுமே
   ..நலமே காண வாய்த்ததுவே!
மேவும் இறைமை உணர்வுடனே
.. மேலும் மேலும் செல்வதற்கே
ஆவல் கூட்டும் வெற்றியினை
..  அழகாய் ஈந்த ரமளானே!

ஆன்மா வெல்லும் வழியிங்கே
...ஆன்ற மறையை ஏற்பதுவே
நோன்பு செல்லும் இச்செய்தி
...நெஞ்சில் வைத்தோம் நோக்கமென.
தான்மை தொலைத்த இறையடியார்
...தன்மை அறிந்த இறைவலிமை.
மேன்மை எல்லாம் பணிவதிலே
...மெய்யை உணர்த்தும் ரமளானே!

கண்ணின் மணியாய் நோன்பளித்த
...கருத்துப் பாடம் உளத்தூய்மை
மின்னி மறைந்து போகாமல்
...மீத காலமும் இறைவழியில்
எண்ணி எண்ணி வாழ்ந்துவர
...எல்லாம் நலமே ஈருலகில்
வண்ண வாழ்வும் மறுமையிலே
...உறுதி செய்வோம் பெருநாளில்.

கவிதை:  இப்னு ஹம்துன்

Comments   
mohamed ali jinnah
+1 #1 mohamed ali jinnah 2016-07-06 18:04
ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துக்கள ்!
Quote | Report to administrator
M muhammed
0 #2 M muhammed 2016-07-06 19:35
அஸ்ஸலாமு அலைக்கும்

தகப்பலல்லாஹு மின்னா வ மின்கும்.

இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ் நம் அனைவருக்கும் இப்பெருநாளிலும் ... என்றென்றும்... இம்மையிலும்... மறுமையிலும் வெற்றி பெற்றிட ...நல்லருள் புரிவானாக..

அன்புடன்
முஷ்தாக் ஹனீப்
Quote | Report to administrator
sharaf
0 #3 sharaf 2016-07-11 23:58
ma sha Allah kavithai arumai ikkavithai solvathu pol naam nam nonbai aakkikkondoma enbathuthaan kelvi.......
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்