முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கவிதை

லிகளோடு வாழப் பழகுவதே

வயோதிகத்தை

வரவேற்கும் வித்தை!

வலிகளில் - சில

மூட்டில் வருபவை - பிற

வீட்டில் தருபவை!

 

நிவாரணங்களைப் பற்றிய

உதாரணங்களின் பட்டியலில்

வயோதிகத்தின் வலிகளுக்கு

நிவர்த்தி பற்றிய குறிப்பில்லை!

 

மூட்டின் தேய்மானங்களும்

வீட்டில் அவமானங்களும்

கவனிப்பாரற்ற தருணங்களில்

கடுமையாய் வலிக்கும்!

 

களிம்பு பூசியோ

கனிந்து பேசியோ

ஆசுவாசப்படுத்தினாலும்

வலி நீங்க - நிரந்தர

வழி இல்லை!

 

எனினும்,

வலிநீக்கும் குளிகைகளிலும்

வாஞ்சையான விசாரிப்புகளிலும்

தற்காலிகமாக

விழிநீர்க்கும் வயோதிகம்!

 

தேங்காய்ப் பாலின்

மூன்றாம் பால்கஞ்சி

தெவிட்டாது முதுமைக்கு!

 

எனினும்,

காப்பகங்களில் விடுவதும்

கருங்குழியில் இடுவதும்

ஒன்றோ வேறோ?

 

நினைவு தப்புவதற்கு முன்

அன்பையும் அக்கறையையும்

நெஞ்சு நெகிழ

அனுபவிக்கத் தருவதால்

வாழ்க்கையை வென்றதாய்

திருப்தியுறும் வயோதிகம்!

 

இந்த

அன்பைவிட விலைகுறைவாய்

ஏதுமுண்டோ உலகில்

இவர்களுக்குத் தர?

 

- சபீர்

Comments   
முகம்மது அலி
0 #1 முகம்மது அலி 2015-12-23 11:11
அருமையான கவிதை


முதுமையானவர்களே இதன் அருமையை முழுமையாக அறிவர்
கவிஞருக்கு வாழ்த்துகள்
Quote | Report to administrator
abuhaamid
0 #2 abuhaamid 2015-12-23 11:19
masha allah

மூட்டின் தேய்மானங்களும்
வீட்டில் அவமானங்களும்
கவனிப்பாரற்ற தருணங்களில்
கடுமையாய் வலிக்கும்!

களிம்பு பூசியோ
கனிந்து பேசியோ
ஆசுவாசப்படுத்தினாலும்
வலி நீங்க - நிரந்தர
வழி இல்லை!

lines are very realistic!
Quote | Report to administrator
- அபூ பிலால்
0 #3 - அபூ பிலால் 2015-12-23 22:01
//நினைவு தப்புவதற்கு முன்
அன்பையும் அக்கறையையும்
நெஞ்சு நெகிழ
அனுபவிக்கத் தருவதால்
வாழ்க்கையை வென்றதாய்
திருப்தியுறும் வயோதிகம்! //

உண்மை.
இதுதான் வேண்டும்.
இதற்கான அடித்தளம்
நாமே இடவேண்டும்
அர்ப்பணிப்பினால்!

- அபூ பிலால்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்