முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கவிதை

தூய பாரதம்
துவங்கியது தில்லியில்!

இது
பதிலடி நேரம்

இலங்கையில்
கழுத்தில் தொங்கும்
ராஜபக்க்ஷே தலை
கயிற்றிலும் தொங்கலாம்.

மோடி அலையை
தில்லியில் அடித்த
சுனாமி
சுருட்டிக் கொண்டு போனது

மீனவர்களுக்கு
மரண தண்டனை என
இலங்கை வில்லன்
முழங்க
விட்டுவிடு என
குஜராத் கொடுங்கோலன் மிரட்ட
வழக்கே இல்லாமல் விடுவிக்கப்பட்ட
ஜனரஞ்சக நாடகத்திற்குத்
திரை.

வாய்ப்பந்தல் ஒரு கலை
இன அழிப்போ படுகொலை
பந்தல் சிதைந்து
பதவி தொலைந்து
இருவருக்கும் இது
இறங்கு நிலை

அறுதிப் பெரும்பான்மை
உறுதி குலைகிறது
ஆணவம் அழிவது
ஆவணம் ஆகிறது

கெஜ்ரிவால் துடைப்பம்
வஜ்ர வாளென
வெட்டிச் சாய்த்தது
அரசியல் ஆக்டோபஸ்களை

துடைப்பத்தை
ஈர்க்குச்சிகள் என
எள்ளி நகையாடிய
கொள்ளிவாய்ப் பிசாசுகள்
உட்கார்ந்ததும்
எஃகுக்குச்சிகள் என உணர்த்தியது
பிட்டத்தில் உண்டான புண்

தலைநகரை முற்றுகையிட்ட
நரைதலை வாதிகளுக்கு
நெற்றியில் துவங்கி
உச்சிவழியாக
பிடறிவரை சாத்தியது
பட்டை நாமம்

தாய்மதம் திருப்பும்
தொத்து வியாதி;
சமஸ்கிருத மேம்பாட்டு
சொறி சிரங்கு;
தேசத்தைத் தாக்கவிருந்த
கீதைப் புற்றுநோய்;
புது வைரஸ் வியாதியாய்
பொது சிவில் சட்டம்
என
சீக்குப் பிடிக்கவிருந்த பாரதத்திற்கு
தற்காலிகத் தடுப்பூசி தில்லி

இந்துப் பெண்ணொருவள்
நான்கு பிள்ளைகள் பெறணுமாம்

எதற்குத் தெரியுமா?

நாட்டு மக்களுக்கு
நலத்திட்டங்கள் பலவற்றை
பிரசவம் பார்ப்பதற்காம்

பாரதத் தாய்க்கு
பல முறை கருக்கலைப்பு
செய்தாயிற்று

இனி கரு தாங்குமா?
கருவே உருவாகவில்லை
பிரசவம் எப்படி நடக்கும்?

ராமருக்குக் கோயில்போல்
ராமருக்கொரு ராஜ்யம் வேண்டி
கூத்தாடி கூத்தாடி
இந்த ஆண்டிகள்
போட்டுடைந்தது தில்லித் தோண்டி

பிரதமர் அறிவித்த
பிரமாதத் திட்டம்
தூய்மை இந்தியாவை
துவக்கி விட்டது துடைப்பம்
அரசியல் அசிங்கங்களை அகற்றி

இனி
இந்த
தில்லிப் பாடசாலையில்
பாரத நாட்டினர்
பயிற்றுவிக்கப்பட
எல்லா இடங்களிலுமிருந்தும்
அப்புறப் படுத்தப்படுவர்
ஆன்மீகத்தையும்
அரசாங்கத்தையும் குழப்பிக்கொண்ட
அரைகுறை
அரசியல் கோமாளிகள்!

கவிதை:  சபீர்

Comments   
நெல்லையன்
0 #1 நெல்லையன் 2015-02-17 20:06
//இனி கரு தாங்குமா?
கருவே உருவாகவில்லை
பிரசவம் எப்படி நடக்கும்?//

மத்திய அரசு
மக்கள் நலத் திட்டங்களை
கருவுற்று பிரசவிக்க இயலாத
மலட்டு அரசு!

என்பதை கவிஞர், கவி நடையில் சொல்லி இருப்பது அருமை!
Quote | Report to administrator
கவியன்பன் கலாம்
+1 #2 கவியன்பன் கலாம் 2015-02-17 20:24
மதம் கொண்ட யானையை
“மஃபளர்” கட்டிய பூனை
வீழ்த்தியது
யானைக்கு ஒரு காலம்
பூனைக்கும் ஒரு காலம்

இந்தப் பூனையும்
நல்ல பூனையா?
கள்ளப் பூனையா?
இனிவரும் காலம்
இயம்பிடும் நண்பா!

முஸ்லிம்கள் வகுத்த
முன்னெச்செரிக்கை வியூகம்
முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு
முதல்தர இலாபம்!

வாக்குகளை அள்ளுவதற்கு
வாக்குறுதிகளைக் கொட்டிவிட்ட
நோக்கங்களும் நிறைவேறாயின்
நம்பிக்கை துரோகமாகும்!

அரசு அதிகாரியே
அரசியலில் காலூன்றி
அரசு கட்டிலிலமர்ந்து
ஆள்வதை வரவேற்போம்!

“சகாயம்” தமிழகத்தின்
சாமான்ய மக்களுக்கும்
சரியான நேரத்தில் வர
“ஆம்” சொல்லும் “ஆத்மி”!
Quote | Report to administrator
jahirhussain
0 #3 jahirhussain 2015-02-18 12:57
சொறி சிறங்குக்கு தடுப்பு ஊசி டெல்லி
Quote | Report to administrator
sharaf
0 #4 sharaf 2015-04-04 21:39
ஆணவம் அழிவது
ஆவணம் ஆகிறது

எஃகுக்குச்சிகள் என உணர்த்தியது
பிட்டத்தில் உண்டான புண்

சமஸ்கிருத மேம்பாட்டு
சொறி சிரங்கு;
தேசத்தைத் தாக்கவிருந்த
கீதைப் புற்றுநோய்;
புது வைரஸ் வியாதியாய்
பொது சிவில் சட்டம்

ஆகியவை எனக்கு பிடித்த அருமையான வரிகள்.மாஷா அல்லாஹ் கவிஞர் அவர்களால் எப்படி இப்படி சிந்திக்க முடிகிறது.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்