முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

English

கவிதை

http://www.satyamargam.com/images/stories/news2015/king_abdullah.jpgமு டியரசின் மன்னரவர்
மரணத்தைச் சந்திக்க
துடிதுடித்து மக்களெல்லாம்
துயரத்தைக் கொண்டாலும்

முடியதுவும் உதிர்வதுபோல்
மரணங்கள் இயல்பென்றே
குடிமைகளும் அறிந்ததனால்
கூப்பாடு போடவில்லை.

விடுமுறைகள் வேண்டவில்லை.
வீதியிலே கூடவில்லை
கொடுஞ்செயல்கள் வன்முறைகள்
கொலைகளவு நாடவில்லை.
படபடக்கும் கொடிகூட
பார்வைக்குத் தாழவில்லை.
அடம்பிடித்து படம்பிடித்து
ஆன்மநலம் தே(ற்)றவில்லை.

அரசநிலம் கைப்படுத்தி
அடக்கத்தைச் செய்யவில்லை.
முரசொலிக்க வானொலியில்
முழக்கங்கள் வழக்கமில்லை.
வரமிதுதான் வாழ்வென்ற
ஓருண்மை விளங்கிவிட
சிரம்பணிதல் என்றைக்கும்
சாகாத இறைவனுக்கே.!

ஒப்பாரிச் சாராயம்
ஒருவருமே அருந்தவில்லை.
துப்பாக்கி முழக்கங்கள்
துளைக்கின்ற சப்தமில்லை.
எப்போதும் போலத்தான்
இந்நாளும் செல்கிறது.
இப்பாரும் அதிசயிக்கும்
இயல்பான மாற்றமிதே.

பாமரனும் அரசனுமே
பக்கத்துப் பக்கத்தில்.
சாமரமா? சுழற்காற்றா?
செயலேட்டில் அவரெழுத்தே!
யாவருமே ஓர்நிறைதான்.
இடுகாட்டின் கணக்கீட்டில்.
'பூ'வருமா? 'தலை' விழுமா?
புதைந்ததுவும் ரகசியமே!

தேசத்தின் அரங்குகளில்
திருப்புகழ்ச்சிப் பாட்டில்லை.
காசற்றோர் காசுள்ளோர்
கணக்குகளும் காணவில்லை.
மாசற்ற தன்மையன்றி
மதிப்புகளும் வேறில்லை.
பாசத்தால் இச்செய்தி
பாடங்கொள் பாரதமே!

- கவிஞர். ஃபக்ருத்தீன் இப்னு ஹம்தூன்

 


 

Comments   
இளஞ்செழியன்
+1 #1 இளஞ்செழியன் 2015-02-01 00:37
சுட்டெரிக்கும் உண்மை, கவிதை வடிவில் அருமையாக வெளிப்பட்டிருக் கிறது.பணம் கொழுத்திருந்தால ும் சவுதியின் மன்னர் இறந்ததை ஒட்டி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாதது ஆச்சரியமான நிகழ்வே!
Quote | Report to administrator
Samshath
+1 #2 Samshath 2015-02-01 00:38
இஸ்லாத்தின் யதார்த்தத்தை சித்தரிக்கும் அருமையான கவிதை! தமிழ் ஹிந்து போன்ற நாளிதழ்களுக்கு அனுப்பினால் மாற்றார்களுக்கு ம் சென்றடையும்.
Quote | Report to administrator
முகம்மது அலி ஜின்னா
0 #3 முகம்மது அலி ஜின்னா 2015-02-01 00:39
சிறந்த கவிதையால் சிறப்பாக சிறந்த மன்னருக்கு புகழ் மாலை தந்துள்ளார் கவிஞர்********* *************** ********அரசனாய் இருந்தாய் இவ்வுலகில்ஆட்டி வைத்தாய் நாட்டின் நலன் கருதிஅதிகாரம் செய்தாய் மக்களின் உயர்வு நாடிஉயிர் உன்னை விட்டு நீங்கஉமது விருப்பப் படிஅமைதியாக அடக்கி வைத்தனர் புதை குழிக்குள்அதைத் தான் நீயும் விரும்பினாய்அதை தான் உன் மார்க்கமும் உனக்கு போதித்ததுஉம்மை அடக்கிய விதம் காண உலகமே வியந்து நிற்கஉம் மார்க்கத்தை பின் பற்றுவோர் வியக்க வில்லைஉம்மை அடக்கிய விதத்தில் மார்க்கத்தின் முறை இருப்பதால்எத்தன ையோ ராஜாக்களும் ,நாட்டை ஆள்பவர்களும் வந்திருக்கக்கூட ும்அவர்கள் வரவேண்டுமென நீங்கள் யாரும் காத்திருக்க வில்லைஆனால் எங்களில் இறந்த உடலை சிலர் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து வெளிநாட்டிலிருந ்து ஒருவர் வருகைக்காக காத்திருந்து அடக்கம் செய்ய பல மணி நேரங்கள் இறந்தவருக்காக தங்களையும் வருத்திக் கொள்வது வேதனைதான்
Quote | Report to administrator
சத்தியம் வெல்லும்
0 #4 சத்தியம் வெல்லும் 2015-02-01 00:40
அவனிடமிருந்து வந்தோம், அவனிடமே திரும்பிச் செல்வோம்.ஒரு தூசி துரும்பைக்கூட எந்த மன்னாதி மன்னராலும் எடுத்துச் செல்ல முடியாது. நாம் செய்த நற்கருமங்களே நம்மோடு வரும்.
Quote | Report to administrator
SYED
0 #5 SYED 2015-02-01 00:41
Quoting Samshath:
இஸ்லாத்தின் யதார்த்தத்தை சித்தரிக்கும் அருமையான கவிதை! தமிழ் ஹிந்து போன்ற நாளிதழ்களுக்கு அனுப்பினால் மாற்றார்களுக்கும் சென்றடையும்.
மேலே உள்ள கருத்தை நான் அதிகமாக ஆமோதிக்கிறேன்.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்