முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கவிதை

லாச்சாரத்தில் கலப்படம்
காதலர் தினம்...
தமிழ்க் கலாச்சாரத்தின்
தற்கொலை முயற்சி!


இந்தியப் பண்பாட்டின்மீது
இறங்கிய இடி!


வெள்ளைக்கார வேடன்
விரித்து வைத்த வலை
இதன்
கண்ணியில் சிக்கினால்
கற்புதான் விலை!

இந்த
மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின்
மீதான மோகம்
சுதந்திர இந்தியனின்
அடிமைக் காலத்து
சோம்பேறிச் சுகத்தின்
மிச்சம் மீதி!

பார்த்தும் ரசித்தும்
தொடுத்தும் முகர்ந்தும்
வருடியும் சூடியும்
கொண்டாடிய ரோஜாக்களைக்
கசக்கிப் பிழிந்து
குப்பையில் வீசிடும்
காமக் கொடூர தினம்!

உறியில் தொங்கும்
கட்டுச் சோற்றுக்கு
காவல் பாவனை செய்யும்
கள்ளப் பூனையின்
கிளுகிளுப்புத் திருநாள்!

இத்தினம்
இன்ப மென் றெண்ணி
இன்னலை விலைபேசும்
இளைமையின்
அறியாமை தினம்!

களவியல் ஒழுக்கத்தை
பேசுபொருளாக்கிக்
காப்பியங்கள் படைத்தவர்
நம் முன்னோர்!

நிலவும் பனியும்
இரவும் உறவும்
தனிமையில் கிடைத்தும்
எல்லை மீறாத
இல்லறம் கண்டவன் தமிழன்!

ஒவ்வொரு நாளிலும்
உரிமையுள்ள துணையைக்
காதலிக்கக் கற்ற
நம்மவனுக்கு...

ஓராண்டுக்கு ஒருமுறை
ஒழுக்கங்கெட்டு உய்ப்பதும்
போதையும் புணர்ச்சியுமாய்
வீணாவதன்றோ
அந்நியன் கொணர்ந்த
காதலர் தினம்!

இந்தியனே!
எல்லாவற்றிற்கும்
காந்திகளை எதிர்பார்க்காதே
அடிமைப்பட்டுத் தொலையாதே!

அன்புக்கும் பாசத்திற்கும்
நட்புக்கும் நேசத்திற்கும்
நாட்களை வகைப்படுத்தும்
நாகரிகம் நமதல்ல!

அன்பையும் பாசத்தையும்
அனுதினமும் பகிர்பவர் நாம்!

இந்தக்
கள்ளத்தனமான ஊடுருவலும்
கலாச்சாரத் தீவிரவாதமும்
கிழக்கிந்தியக் கம்பெனியின்றி
மேற்கத்தியன் செய்யும் சதி!

காதலர் தினம்
குடும்பவியல் கலாச்சாரத்தில்
குண்டுவைக்கும் கலப்படம்.
சிக்கிக்கொள்ளாமல் சிந்தி!

- சபீர்


தொடர்புடைய பிற ஆக்கங்கள்:

ஊன தினம்! : http://www.satyamargam.com/1896

பிப்ரவரி 14 - ஆபாசதினம்! http://www.satyamargam.com/1159

கணவரை மகிழ்விப்பது எப்படி? : http://www.satyamargam.com/1516

மனைவியை மகிழ்விப்பது எப்படி? : http://www.satyamargam.com/1507

Comments   

B. Ahamed Ameen
0 #1 B. Ahamed Ameen 2013-02-14 02:29
Assalamu Alaikkum
Excellent lines which beat danger alarm on celebrating valentines' day.
Quote | Report to administrator
அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர்
0 #2 அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர் 2013-02-14 03:48
’வாலெண்டைன்” என்பவரே ஓர் இளம் பெண்ணுடன் கள்ள உறவு வைத்ததனால் இங்கிலாந்து அரசால் தண்டிக்கப்பட்டு - அவர் இறந்த நாளையே இக்காமுகர்கள் “காதலர் தினம்” என்று கொண்டாடுகின்றனர ். அமெரிக்கர்களின் வியாபார உத்திகளில் இப்படிப்பட்ட வினோதமான கொண்டாட்டங்களை உலகுக்கு அறிமுகம் செய்து விட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தக் காமுகர்களின் தினத்தைக் கொண்டாட முஸ்லிம்களும் கடைகளில் பரிசுப் பொருட்களும், வாழ்த்து அட்டைகளும் வாங்குவதற்குச் செல்வதும்; பணத்தை வீணடிப்பதும் தான்! இதனையே கவிவேந்தர் அழகாகத் தன் கவி வரிகளில் சொல்கின்றார்.

// ஓராண்டுக்கு ஒருமுறை
ஒழுக்கங்கெட்டு உய்ப்பதும்
போதையும் புணர்ச்சியுமாய்
வீணாவதன்றோ
அந்நியன் கொணர்ந்த
காதலர் தினம்! //


காதலிக்காத மனித மனம் இல்லவே இல்லை: ஆனால் அது காதல்தானா என்பதை உணரவோர் நடுநிலையான உள்ளம் தேவைப்படுகிறது எல்லோருக்கும்; அது நான் உள்பட! பேறு பெற்ற பெண்மணிகளில் பலர் வாழ்விலும் காதல் தூய்மையானதாய் அமைந்து அக்காதலே திருமணம் என்னும் இல்லற வாழ்வில் நல்லறம் பேண வைத்திருப்பதைக் காண்கின்றோம்.

புவியதில் சுழன்றிடும் காற்றெனவே
தவித்திடும் உணர்வலை ஊற்றெடுக்கக்
குவிந்திடும் கனலென மோதிடவே
கவிந்திடும் நினைவுகள் காதலென்போம்!


பழுதறு மனம்முதிரச் சோதனையை
அழுதிடும் அவர்மனம் கூறிடவே
முழுமதி அணங்கவள் உள்ளமதால்
வழுவற உணர்ந்திடல் காதலென்போம்!


அனைத்துமே சரியெனச் சொல்பவரே;
வனிதையர், வருத்தமில் வாலிபரே!
அனுதினம் உயர்ந்தநல் வாழ்வினையே
மனிதனாய் புரிதலே காதலென்போம்!

காதலித்த பெண்ணையே மணமுடிப்போம்; மணமுடித்த பின்னர் மனைவியைக் காதலிப்போம்! காதலித்து விட்டுக் கை விடுதலும்; மணமுடித்து விட்டு மனைவியைக் காதலிக்காமல் இருப்பதும் காதலுக்கே சாதல்!
Quote | Report to administrator
அன்புடன் புகாரி
0 #3 அன்புடன் புகாரி 2013-02-14 05:22
>>>
உறியில் தொங்கும்
கட்டுச் சோற்றுக்கு
காவல் பாவனை செய்யும்
கள்ளப் பூனையின்
கிளுகிளுப்புத் திருநாள்!
Quote | Report to administrator
Ebrahim Ansari
0 #4 Ebrahim Ansari 2013-02-14 12:22
//அன்புக்கும் பாசத்திற்கும்
நட்புக்கும் நேசத்திற்கும்
நாட்களை வகைப்படுத்தும்
நாகரிகம் நமதல்ல!// வைர வரிகள்.
Quote | Report to administrator
அன்புடன் மலிக்கா
0 #5 அன்புடன் மலிக்கா 2013-02-15 18:36
அன்பின் சகோ, தங்களின் ஆக்கம் மிக மிக அருமை.

//காதலர் தினம்
குடும்பவியல் கலாச்சாரத்தில்
குண்டுவைக்கும் கலப்படம்.
சிக்கிக்கொள்ளாமல் சிந்தி!//

இல்லையோ
இதனால் நீ
நிற்பதோ சந்தி!

---------------------------------------

காமபோர்வை போத்திக்கிட்டு
கண்ணியமுன்னு பேசுது
காமமோகம் தீர்ந்த பின்னே
கலட்டிவிட்டு போகுது
niroodai.blogspot.com/.../...
Quote | Report to administrator
MAHA IBRAHMIN
0 #6 MAHA IBRAHMIN 2013-02-16 14:13
"கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான் பூச்சரங்கள் சூடித் தந்தான்" என்று கண்ணனை காதலனாகவும், "அபிஷேக நேரத்தில்
அம்பாளை தரிசிக்க
அடியேன் கொடுத்து வச்சேன்
ஜென்மம் அதுக்கே எடுத்து வச்சேன்" என்று அம்பாளை காதலியாகவும் நினைந்து காம ஆன்மீக பக்தி பரவசத்தில் திளைக்கும் மூடருக்கு வாலண்டின் தினம் என்பது நொண்டிக்குதிரைக ்கு சறுக்கியது சாக்கு போலத்தான்.
Quote | Report to administrator
B.sabeer ahmed
0 #7 B.sabeer ahmed 2013-02-22 00:38
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வாசித்துக் கருத்திட்ட அனைத்துச் சகோதரர்களுக்கும ் சகோதரிக்கும் என் மனமார்ந்த நன்றி.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்