முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கவிதை


ண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல்

உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும்

எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல்

இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே!

நன்னாள்கள் உன்னாள்கள் நானிலத்தின் பெருநாள்கள்

நம்பிக்கை கூட்டுகின்ற நன்மார்க்கத் திருநாள்கள்

என்னாளும் உன்பயிற்சி எமைநடத்திச் செல்வதற்கே

இறையவனை வேண்டுகின்றோம் இந்நாளில் மகிழ்வுற்றே!

 

பொய்யில்லை; புறமில்லை; பொல்லாங்குப் பேச்சில்லை

பண்பற்ற செயலில்லை; பாவமில்லை; பேதமில்லை

மெய்யொன்றின் தேட்டங்கள்; மேன்மைக்கே நாட்டங்கள்

மெய்ப்புலனில் மனநலனில் மாண்புடனே மாற்றங்கள்

உய்வுற்று வாழுதற்கே ஓரிறையின் சீர்பரிசாய்

உலகுதித்தாய்; உணர்வளித்தாய் ஒப்பற்ற ரமளானே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற வாய்ப்பதனை

வானத்தின் மீதிருந்து வழங்கிவிட்டாய் நன்றிகளே!

 

இரவினிலும் இறைவணக்கம்; இதயத்துப் பூமணக்கும்

இன்முகமே கண்டிருக்கும் இப்பாரில் நல்லிணக்கம்

இறைவனுக்கே தலைதாழும் என்கின்ற உள்ளுறுதி

யாவருமே சமமென்ற ஏற்றத்தை ஒலித்திருக்கும்

மறையதனை ஓதிவர மனத்துக்குள் தாழ்திறக்கும்

மண்ணுலகில் வாழ்வதற்கு மகத்தான வழிபிறக்கும்

பிறையுதிக்கும் நன்னாளில் பரிசளிக்கும் இறையோனின்

பேரருளில் நனைகின்ற பேராவல் பூத்திருக்கும்.

 

வாய்மையுடன் இறையச்சம் வளர்க்கின்ற பயிற்சியினை

வழங்கிடுதே ரமளானும் வல்லோனின் பெருங்கருணை

தாய்மையினும் மிகைக்கின்ற தூயோனாம் அல்லாஹ்வின்

தண்ணருளை வேண்டுவமே தகுதிகளைப் பெறுவதற்கே!

தூய்மையிலே நனைகின்றோம் துல்லியமாய் நோன்பாலே

துடைத்திட்ட பளிங்காகத் துலங்கிடுதே எம்மனங்கள்.

போய்வருக ரமளானே..புத்துணர்வை அளித்துவிட்டாய்

பல்லாண்டு உனைக்காணும் பாக்கியத்தைக் கேட்போமே!

---

நன்றி : சகோ. பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

+966 050 7891953

www.ezuthovian.blogspot.com

www.mypno.com

 

சத்தியமார்க்கம்.காம் வாசக நெஞ்சங்களுக்கும் அனைத்துச் சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

Comments   

இராஜகிரியார்
-1 #1 இராஜகிரியார் 2009-09-22 00:35
சத்தியமார்க்கம் .காம் குழுவினருக்கும் மற்றும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும ் இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்.
Quote | Report to administrator
கவியன்பன் கலாம்
0 #2 கவியன்பன் கலாம் 2009-09-23 21:55
உன்பால் இருக்கும் அன்பால்
உன்னை வாழ்த்தும் என் வெண்பா

அரபகம் சென்றும் அழகு தமிழில்
மரபு கவியாத்த மாண்புமிகு நண்பா
வியந்தேன் உனது விருத்தப்பா கண்டே
நயந்தே வழங்குமென் வாழ்த்து


-"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
Quote | Report to administrator
அபூ பௌஸீமா
0 #3 அபூ பௌஸீமா 2009-09-24 23:59
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

அன்பின் இஸ்லாமியச் சகோதரர்களே! வாழ்த்துக்களில் இஸ்லாம் காட்டித்தந்துள் ள அழகான வழிமுறை, "அஸ்ஸலாமு அலைக்கும்" அல்லது "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் " அல்லது "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு" என்பதுதான்.

"இனிய வாழ்த்துக்கள்", "ஈத் முபாரக்" இப்படியானவற்றை வாழ்த்தட்டை வடிவில் டிஜிடல் வாழ்த்துமடல் வடிவில் வாழ்த்துத் தெரிவிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் எப்படி வந்தது? நிச்சயமாக யூத கிறிஸ்தவர்களிட் மிருந்து வந்ததுதான். இஸ்லாம் எந்த விடயத்தை எடுத்தாலும் அதில் வழிகாட்டாமல் விட்டுச் செல்லாது. கண்மூடிப் பின்பற்றுவதற்கு முன் பிரித்தறிய வேண்டும். ஏனென்றால் அல்-குர் ஆனை அல்-புர்கான்(வே றுபடுத்திக் காட்டுவது, பிரித்து அறிவிப்பது) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ரம்மியமான கவிதை.

வாழ்த்துக்கள் என்று மொட்டையாகத் தெரிவிப்பதை - யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவதைத் தவிர்த்து - இந்த இனிய பெரு நாளில் உங்களுக்கு எனது இதயபூர்வமான ஸலாம். "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றோ அல்லது "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் " என்றோ அல்லது "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு" என்றோ வாழ்த்துத் தெரிவிக்கப் பழகிக் கொள்வோமாக. ஸலாமைப் பரப்புவோமாக.

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
Quote | Report to administrator
M.S.K
0 #4 M.S.K 2009-09-25 08:01
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர்களே

பெருநாள் அன்று நபி ஸல் அவர்கள் "தகப்பலல்லாஹ்" அல்லாஹ் உங்கள் நற் செயல்களை ஏற்றுக் கொள்வானாக என்று அல்லது "தகப்பல் மின்னா வ மின்கும்." அல்லாஹ் நமது நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக என்றோ வாழ்த்தியதாகவும ் நாமும் இதையே வாழ்த்த வேண்டும் மற்றதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு பெருநாள் சொற்பொழிவில் கூறினார்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
Quote | Report to administrator
அபூ பௌஸீமா
+1 #5 அபூ பௌஸீமா 2009-10-02 06:02
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

சகோ. M.S.K. அவர்களுக்கு நன்றி. அப்படியான வாழ்த்துக்களுக் கான ஆதாரங்களை வைக்கக் கூடிய சகோதரர்கள் அவற்றை முன் வைத்து நற்பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
Quote | Report to administrator
சேக்கனா நிஜாம்
+1 #6 சேக்கனா நிஜாம் 2012-08-19 12:23
கவிதை அருமை !

சகோதரர்கள் அனைவருக்கும் என் ஈத் பெருநாள் நல் வாழ்த்துகள் !
Quote | Report to administrator
NIYAS
0 #7 NIYAS 2013-08-09 11:28
Assalamu Alaikum Dears.
Can we use any wishing word or thank you
please suggest

Wassalam
Quote | Report to administrator
sharaf
0 #8 sharaf 2013-08-10 21:52
இஸ்லாமிய மார்க்கத்தில்"ப ித்அத்தை"ஒழிக்க கடுமையாக பாடுபட்ட, அதற்காக சிறைவாசம் சென்று பயங்கரச் சித்ரவதைகளை அனுபவித்த இமாம்"அஹ்மத் பின் ஹம்பல்" அவர்கள் "தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்" என்ற வாழ்த்தை சொல்லக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள ். எனவே, சுன்னத்தை நிலை நாட்ட பாடுபட்ட அந்த மகத்தான இமாமின் வார்த்தைகளை நாமும் பயன்படுத்தி வாழ்த்து சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.
Quote | Report to administrator
சாணக்கியன்
0 #9 சாணக்கியன் 2013-08-11 23:23
தேவையில்லாத வாழ்த்துக்களை தவிர்ப்பது நல்லது. வாழ்த்துக்களிலே யே மோசமான வாழ்த்து ஹேப்பி பர்த்டே. பிறந்ததும் எந்த குழந்தையாவது சிரிக்கிறதா? ஏனடா இந்த உலகில் பிறந்தோம் என அழுகிறது.

ஹேப்பி பர்த்டே சொல்லா விட்டால் ஏதோ கொலைக் குற்றம் செய்து விட்டது போல் கணவன் மனைவிக்கிடையே பூசல் கிளம்புவது, குழந்தைகள் பிரச்னை செய்வது, நண்பர்களுக்கு 5 நட்சத்திர ஓட்டலில் கடன் வாங்கியாவது பார்ட்டி தருவது போன்ற தேவையில்லாத பாரங்கள் நடுத்தர குடும்பங்களை பாடாய் படுத்துகிறது.

சில வருடங்களுக்கு முன் மனதை திடப்படுத்திக் கொண்டு "தயவு செய்து எனக்கு ஹேப்பி பர்த்டே சொல்லாதீர்கள். இஸ்லாத்தில் இது தடுக்கப்பட்டது" என்று சொன்னேன். அப்பாடா, அன்றிலிருந்து பெரிய நிம்மதி. தலைவலி விட்டது.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்