முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கதை-கவிதை

'தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்'

வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் குழுமம் தன் நெஞ்சார்ந்த இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

காட்சியிலே படுவதெல்லாம் கடவுள் என்பார்
    கடவுளவன் இலக்கணத்தைக் காண மாட்டார்
மாட்சியுள்ள ஓரிறையோன் மார்க்கம் தந்தான்
    மண்ணுலகில் நன்னெறியின் வேதம் ஈந்தான்.
மீட்சியுறும் மனிதர்தம் மனதின் நன்றி
    மேதினியில் சமத்துவத்தை மலரச் செய்யும்
சாட்சியினைச் சொல்கின்ற மூமீன் கூட்டம்
    சீருடையாய்த் தூய்மையினை அணிந்து சுற்றும்.

புராஹீம் என்கின்ற தூதர் இங்கே
    எழுப்பிவைத்த ஆலயத்தில் இனிய ஹஜ்ஜு
நபிமார்கள் பல்லோரும் அவரின் வம்சம்
    நன்மார்க்கப் ஒளியளித்த ஞானத் தீபம்
சபையோர்கள் சிந்திக்கக் கேள்வி கேட்டார்
    சாகாமல் நிலைப்பதுவே இறைமை என்றார்
அபயங்கள் இறையிடமே! - ஆழ்ந்து சொன்னார்
    அதனாலே நம்ரூத்-தின் நெருப்பை வென்றார்.

சிறப்பான வெற்றிகளைக் காண வேண்டின்
    சிந்தையிலே நேர்மையினைப் பற்ற வேண்டும்
குறுக்கீடாய் சாத்தானும் கூட வந்தால்
    கொள்கையதன் உறுதியுடன் போக்க வேன்டும்
பிறப்பாலும் இறப்பாலும் பேத மில்லை
    பின்பற்றும் வழியாலே மாற லாமோ?
அறமில்லா சுயநலத்தை அறுத்தால் போதும்
    அதுதானே இறைத்தோழர் அளித்த செய்தி.

ர்ப்பணங்கள் இறைவனுக்காய் இருக்க வேண்டும்
     அவனிடமே நம்பிக்கை அமைய வேண்டும்
கற்பனைகள் சத்தியத்தில் கலத்தல் கூடா
     கண்டபடி வாழுதற்கா பிறந்து வந்தோம்?
பொற்பனைய வாணாளின் பொழுதை என்றும்
     பயனாகக் கழிப்பதிலே பெரிய வெற்றி
நற்கருணை இறையோனும் நலமே செய்வான்
     நம்பிக்கை வைப்பதுவே முதலாம் தேவை.

அனைவருக்கும் இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துகள்!

- கவிஞர். பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

Comments   
முஹம்மத் அலி ஜின்னா
0 #1 முஹம்மத் அலி ஜின்னா 2016-09-13 01:57
தியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது?

தியாகப் பெருநாளின் முக்கியத்துவம் பற்றி பேசும்பொழுது “ஒரு பக்தனின் பக்தியை சோதிக்க அவனுடைய பிஞ்சுக்குழந்தை யை பலியிடுமாறு உங்களுடைய அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமான அல்லாஹ் கட்டளையிடுகிறான ே…. இவ்வளவு ஈவு இரக்கமற்ற நரபலி கேட்கும் கடவுள் தேவையா?.

“அல்லாஹ்வின் பெயரால் ஆட்டை அறுத்து சாப்பிட்டுவிட்ட ால் பெரிய தியாகமாகி விடுமா?. தியாகம் செய்தது ஆடு. ஆனால் அதை சாப்பிட்ட பாய் தியாகியா?. நால்லாருக்கு பாய் ஒங்க நியாயம்” என எனது பிராமின் நண்பர் நக்கலடிக்கிறார்..
——————————————

தெளிவு:

இணை தெய்வங்களுக்கு நரபலி கொடுப்பது எல்லாக் காலத்திலும் நிகழ்ந்திருக்கி ன்றன. இன்றும் நரபலி பற்றிய நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்தேறி வருவதாக ஊடகத் செய்திகளில் வாசிக்கிறோம். இறுதி வேதம் குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்திலும் நரபலிகள் கொடுக்கப்பட்டன. நரபலியைக் கண்டித்து அருளப்பட்ட வசனம்:

“இவ்வாறே இணைவைப்போரில் அதிகமானோருக்கு , தமது குழந்தைகளைக் கொலை செய்வதை (நன்மை போல்) அவர்களது இணை தெய்வங்கள் அலங்கரித்துக் காட்டின. இது அவர்களை அழிவுக்குட்படுத ்துவதற்கும் அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்குக் குழப்புவதற்குமே யாகும்…” (அல்குர்ஆன் 006:137).

“அறிவில்லாமல் மடத்தனமாகத் தமது குழந்தைகளைக் கொலை செய்தவர்களும்…” (அல்குர்ஆன் 006:140)

அரபியர்களின் பல தெய்வக் கொள்கையைப் பற்றிக் குர்ஆனில் பல வசனங்கள் அறிவிக்கின்றன. இணை தெய்வங்கள் மீது அவர்கள் கொண்டிருந்த பக்தியானது, அவர்களின் ஆண் குழந்தைகளை அவற்றிற்காக நரபலி கொடுத்திடவும் அவர்களைத் தூண்டியது. அவர்களின் இந்தச் சீர்கேடுகளையும் , குழப்பங்களையும் பற்றித்தான் குர்ஆன் ஆறாவது அத்தியாயத்தின் 136-140 வசனங்களில் சுட்டிக்காட்டப் படுகின்றன. இஸ்லாம் நரபலியை ஒரு போதும் அங்கீகரிக்கவில் லை. மாறாக, நரபலியைக் கொலை என்றே உறுதிப்படுத்துகின்றது.

—- (சத்திய மார்க்கம்.காம்)
————————–

என்னுடைய கருத்து:

மடமை இருளில் வாழ்ந்த காட்டரபிகள் அல்லாஹ்வின் பெயராலும் இஷ்ட தெய்வங்களின் பெயராலும் நரபலி கொடுத்து வந்தனர். பல இறைத்தூதர்கள் மூலம் அல்லாஹ் இந்த கொடூர செயலை கண்டித்தான். ஆனால் அந்த மூடர்கள் கேட்கவில்லை. இறுதியாக நபி இப்ராஹிம் (அலை) மூலம் மனித இனத்துக்கு “நரபலி தடுக்கப்பட்டது” எனும் நீதியை ஐயமின்றி உணர்த்த அல்லாஹ் முடிவு செய்தான்.

ஆகையால் நபி இப்ராஹிமின் புதல்வர் இஸ்மாயில் அவர்களை நரபலி கொடுக்க அல்லாஹ் கட்டளையிட்டான். இந்த கட்டளையை கேட்ட நபி இப்ராஹிம் அவர்கள் “நரபலி தடுக்கப்பட்டது என உரைக்கும் அல்லாஹ் நரபலி கொடுக்க கட்டளையிடுகிறான ே” என பிரமித்து போய்விட்டார். “நிச்சயமாக அல்லாஹ் நீதிமான். அவன் அநீதி செய்ய மாட்டான். இதில் நிச்சயமாக ஏதோ ஒரு படிப்பினை மறைந்துள்ளது” எனும் அசைக்க முடியாத நம்பிக்கை நபி இப்ராஹிம் அவர்களுக்கு இருந்தது. தனக்கு வந்த கட்டளை பற்றி தனது புதல்வர் இஸ்மாயில் அவர்களிடம் நபி இப்ராஹிம் எடுத்துரைத்தார் . இஸ்மாயில் (அலை) அவர்கள் சிரித்துக் கொண்டே “அல்லாஹ்வின் கட்டளை என்றால் அதை நிறைவேற்ற என்ன தயக்கம்?. அப்படியே செய்யுங்கள்” என பதிலளித்தார்.

தனது மனதை திடப்படுத்திக்க ொண்டு கத்தியால் மகனின் கழுத்தை நபி இப்ராஹிம் அறுத்தார், ஆனால் கழுத்து அறுபடவில்லை. அல்லாஹ் தடுத்து நிறுத்தினான். இதன் மூலம் “நரபலி தடுக்கப்பட்டது” எனும் நீதியை மனித இனத்துக்கு அல்லாஹ் அறிவித்தான்.

அனைத்தையும் நன்கறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்