முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கதை-கவிதை

முதல் ஆலயம் நீ!
முதல்வனின் ஆலயம் நீ!
கஅபாவே - உன்னைக்காண
கண்ணுக்குள்  ஓர் ஆவல்
கனன்றுகொண்டேயிருக்கிறது.


அருள் நிரம்பிய உன்
அழைப்புக்குச் செவியேற்போர்
அதிருஷ்ட சாலிகள்
ஆன்ம தேகத்தில் திரண்ட
பாவ அழுக்குகளை
'ஜம் ஜம் நீரால் கழுவி
மூமின் என்று முத்திரை பெறுகிறார்கள்

கழுவப்பட்ட அழுக்குகளுக்கு
கதிரொளியே பகரமாகிறது!

ஹஜ்ஜுக்கடமையே....!
இறக்கிவைக்க, இறக்கி வைக்க
எல்லாச் சுமைகளையும்  நீ
ஏற்றுக்கொள்வதால் தானோ
இந்த மனிதர்கள்
உலகின் எல்லா இடங்களிலும்
பாவங்களைப் பொறுக்குகிறார்கள்?

கருவறை தொடங்கி
கல்லறை வரை
காலடித் தொடரும் ஷைத்தான்
உன்னிடத்தில் வரும்போது
கற்தூணாகி விடுகின்றான்
ஆனாலும் தப்ப முடியாமல்
கல்லெறிந்து கொல்லப்படுகிறான்.

ஏ! மனிதா..!
இறை அளித்த வாழ்வுநெறியை
வெட்டியும் தைத்தும் உடுத்துவதால்
நீதான் கிழிந்துபோகிறாய்.
வெட்டாமல் தைக்காமல்
அப்படியே அணிந்துக்கொள்.
இஹ்ராம் போலோர் இலக்கணம்
இதமாய் உணர்த்துகின்றாய்.


அரசர்களாய் வந்தவர்கள்
அதிகாரிகளாய் வந்தவர்கள்
'தான்' கரைந்து தெரிந்துகொள்கிறார்கள்
விரிந்த பிரபஞ்சத்தின் அதிபதியைப்
புரிந்துகொள்கிறார்கள்
அதனால்

பாலகனாகித் திரும்புகிறார்கள்
'அர்ப்பணிப்புகள் யாவும் அல்லாஹ்வுக்கே'
 
இறைத்தோழர் இபுறாஹிம்
உணர்த்திய வழியில்
இறுதியில் ஒரு குர்பானீ !
மனோஇச்சையை அறுத்து.

'வந்து விட்டேன்..... இதோ வந்துவிட்டேன்...!


---

தியாகத் திருநாளின் இனிய நல்வாழ்த்துகள்

- H.FAKHRUDEEN (இப்னு ஹம்துன்)
www.ezuthovian.blogspot.com
www.mypno.com

Comments   
sabeer ahmed
+1 #1 sabeer ahmed 2013-10-14 23:44
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

//இறுதியில் ஒரு குர்பானீ !
மனோஇச்சையை அறுத்து.//

கொன்றுபோட்டீர்கள் மனோ இச்சையை
வென்றுவிட்டீர்கள் மனத்தாசியை!

குல்லுஆம் வஅன்த்தும் பி க்ஹைர்!
Quote | Report to administrator
நூருத்தீன்.
+1 #2 நூருத்தீன். 2013-10-15 02:53
அழகிய கவிதை.
கவிஞருக்கும் சத்தியமார்க்கம் தளத்தினருக்கும் வாசகர்களுக்கும் அனைவருக்கும் தியாகத் திருநாளின் இனிய நல்வாழ்த்துகள்.
-நூருத்தீன்
Quote | Report to administrator
முகம்மது அலி ஜின்னா
+1 #3 முகம்மது அலி ஜின்னா 2013-10-15 09:25
மனதை தொடும் கவிதை .
விளக்கம் விவரமாக தந்து கவிதையில் யாத்த இப்னு ஹம்துன் அவர்களுக்கும் அதனை வெளியிட்ட தங்களுக்கும் அன்புகலந்த வாழ்த்துகள்
தியாகத் திருநாள் வாழ்த்துகள்
Quote | Report to administrator
அபுல்கலாம்
0 #4 அபுல்கலாம் 2013-10-16 04:06
//கருவறை தொடங்கி
கல்லறை வரை
காலடித் தொடரும் ஷைத்தான்
உன்னிடத்தில் வரும்போது
கற்தூணாகி விடுகின்றான்
ஆனாலும் தப்ப முடியாமல்
கல்லெறிந்து கொல்லப்படுகிறான்.\\

கல்பில் சித்திரமாய்ப் பதிந்த வரிகள்!
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


சமீப கருத்துக்கள்