முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

கதை-கவிதை

சுய
சுத்திகரிப்புச் சோதனை
செய்து கொண்டாயிற்றா?

படைப்பின் இயல்பாம்
இச்சைகள் தலைதூக்க
படைத்தவன் வழிகொண்டு
அடக்கியாண்டு விட்டீரா?


சுயநலக் கிருமிகள்
தொற்றுவது இயல்பு
பொதுநல தடுப்பூசியால்
புத்துணர்வு பெற்றீரா?

கற்றைக் கற்றையாய்
காசுபணம் கிறக்கும்
ஏழைக்குப் பகிர்வதில்
எழுமின்பம் சுகித்தீரா?

நாடி நரம்புகள்
நாடுமின்பம் போதை
நரக நெருப்பெண்ணி
நீங்கிச் செல்வதுண்டா?

தீப்புண்ணை மிஞ்சிவிடும்
தீஞ்சொற்கள் சொல்லி
நல்லோரை வதைக்காமல்
நாவடக்கி நவின்றதுண்டா?

வாய்க்கு ருசியாக
வயிற்றுக்குப் பசிக்கும்
நோய்க்குப் பயந்து
நிதானமா யுண்டீரா?

நீந்தும் மேகங்களாய்
பொழுதுகள் கடக்கும்போது
நின்று பொழிந்ததெனச் சொல்ல
ஞாபகங்கள் ஏதுமுண்டா?

வாகன நிறுத்தங்களோ
வாழ்க்கையின் விருத்தங்களோ
எல்லைக் குறிக்கப்பட்டால்
மட்டுமே ஒழுங்கிருக்கும்
குறித்தாயிற்றா?

கூட்டத்தோடு கூட்டமெனில்
கூடிப்போகிறது மனிதம்
ஒற்றையாய் உமது
உண்மை நிலை என்ன?

நினைவிருக்கட்டும்!

படைத்தவன் மேல்
பயமுள்ள எவர்க்கும்
தனிமை என்றொரு
இருப்பே இல்லை!

கவிதை: சகோதரர் சபீர்

Comments   

அபுல்கலாம்
0 #1 அபுல்கலாம் 2013-04-09 01:15
//நீந்தும் மேகங்களாய்
பொழுதுகள் கடக்கும்போது
நின்று பொழிந்ததெனச் சொல்ல
ஞாபகங்கள் ஏதுமுண்டா?\\

நெஞ்சில் நீந்திய வரிகள்!
Quote | Report to administrator
Ahamed Irshad
0 #2 Ahamed Irshad 2013-04-09 01:37
இன்னதென்று பிரித்து பார்க்கமுடியாமல ் அனைத்து வரிகளும் சிறப்பானவை... இதை இதுவரை வந்தவற்றில் ஆகச்சிறந்தவை என்பேன் நான்..
Quote | Report to administrator
நூருத்தீன்.
0 #3 நூருத்தீன். 2013-04-09 02:36
இறையச்சம் இயல்பாகிப்போனால ், தனிமையிலும் தனித்திருப்பது இயலாத ஒன்றே.

நல்ல கவிதை. வாழ்த்துகள் சபீர்.
Quote | Report to administrator
ஜமாலுதீன் N.
0 #4 ஜமாலுதீன் N. 2013-04-09 02:46
நேரடியாகச் சட்டையைப்பிடித் துக் கேட்டதுபோல் நச்சென்ற வரிகள்.
Quote | Report to administrator
ZAKIR HUSSAIN
+1 #5 ZAKIR HUSSAIN 2013-04-09 05:29
மனிதனின் ஆக்கங்கள் மனிதனை நெறிப்படுத்த வேண்டும். உன் ஆழ்ந்த சிந்தனை அழகு தமிழில் 'பிரம்படி" கொடுத்திருக்கிற து.
Quote | Report to administrator
Ebrahim Ansari
0 #6 Ebrahim Ansari 2013-04-09 07:34
//கற்றைக் கற்றையாய்
காசுபணம் கிறக்கும்
ஏழைக்குப் பகிர்வதில்
எழுமின்பம் சுகித்தீரா?//

மொத்தக் கவிதையிலும் மனிதாபிமானத்தின ் நிழல் படிந்திருக்கிறத
ருசித்த வரிகள். பாராட்டுக்கள்.
Quote | Report to administrator
ABUHAAMID
0 #7 ABUHAAMID 2013-04-09 11:08
REALLY ITS A "SUYA PARISOOTHANAI".
EVERY ONE OF US SHOULD THINK OF THESE BEAUTIFUL LINES.
THANKS JO!
Quote | Report to administrator
JAFARULLAH
+1 #8 JAFARULLAH 2013-04-09 12:16
//சுயநலக் கிருமிகள்
தொற்றுவது இயல்பு
பொதுநல தடுப்பூசியால்
புத்துணர்வு பெற்றீரா?//


ஆறுதல் வரிகள்
Quote | Report to administrator
JALAL
0 #9 JALAL 2013-04-09 12:27
படைத்தவன் மேல்
பயமுள்ள எவர்க்கும்
தனிமை என்றொரு
இருப்பே இல்லை!

Exactly.
Superb Sabeer.
Quote | Report to administrator
Alaudeen.S.
0 #10 Alaudeen.S. 2013-04-09 13:32
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

////நினைவிருக்கட்டும்!

படைத்தவன் மேல்
பயமுள்ள எவர்க்கும்
தனிமை என்றொரு
இருப்பே இல்லை! ////
*********************************
இதுதான் உண்மை!
அழகிய கவிதை!
வாழ்த்துக்கள்! சபீர்!
Quote | Report to administrator
Abu Easa
0 #11 Abu Easa 2013-04-09 14:26
மா ஷா அல்லாஹ்!

சிந்தனையும், ஆக்கமும் அருமை!
Quote | Report to administrator
அதிரை என்.ஷஃபாத்
0 #12 அதிரை என்.ஷஃபாத் 2013-04-10 15:45
கவிதையால், பரிசோதனை என்னும் பெயரில் துன்பம் நீக்கும் பெரிய ஆபரேஷன் செய்து இருக்கின்றீர்கள ். எழுத்தும் கருத்தும் அருமை.
Quote | Report to administrator
riyaz
0 #13 riyaz 2013-04-12 10:29
சலம், கருத்திட்டவர்கள ் சொல்லுங்களேன் கவிதை என்றால் என்ன?
Quote | Report to administrator
Sabeer abuShahruk
+1 #14 Sabeer abuShahruk 2013-04-12 14:43
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இந்தப் பதிவை வாசித்துக் கருத்திட்ட அனைத்துச் சகோதரர்களுக்கும ் நன்றி.

வாசித்தது மட்டுமல்லாது, சோதனைப் படிவத்தில் உள்ளவற்றைத் தங்களின் இருப்போடு ஒப்பிட்டுக்கொண் டீர்களானால் சகலமும் ஈடேற்றமே.

சகோ ரியாஸ் அவர்களின் கேள்வி பதிவுக்குத் தொடர்பில்லாதது எனினும், பதிவின் மொழி வடிவத்தோடு தொடர்பிருப்பதால ் கீழே பதில்:


எது கவிதை…?

மெல்ல விடிவதை
நல்ல மொழிதனில்
செல்ல வரிகளால்
சொல்ல முடிவதே…கவிதை!

உனக்குள் உருவாகும்
உள்ளத்து உணர்வுகளை
உள்ளது உள்ளபடி
உளராமல் உரைத்தால்…கவிதை!

பாலையில் யாவர்க்கும்
காலையும் மாலையும்
பாலை வார்க்கும்
வேலை பார்க்கும்…கவிதை!

சூரிய கிரணங்கள்
மேவிய தருணங்கள்
கூரிய வார்த்தைகளால்
கூறிய வருணனை…. கவிதை!

நுனுக்க உணர்வுகளையும்
மினுக்கக் கனவுகளையும்
துணுக்குத் தோரணங்களையும்
திணித்துவைத்த அனு...கவிதை!

கலைத்துப் போட்ட
பொம்மைகள்
குப்பை யென்றால்
அடுக்கி வைத்த கண்காட்சி...கவிதை!

உதறிய பூக்களும்
சிதறிய இதழ்களும்  
கூலமென்றால்
கோர்த்தெடுத்த மாலையே…கவிதை!

அத்தனை பிள்ளைகளின்மேல்
அன்பிருந்தாலும்
செல்லப் பிள்ளையே….கவிதை!
 
கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.

கவிதை…
காட்டாறு எனினும்
வரம்புகளுக்குள் ஓடுமொரு முரண்பாடு.

கவிதை…
கதையோ கட்டுரையோவல்ல
வரி வரியாய் வாசிக்க,
வரிகளுக்கிடையே வாசிக்கப்படும் வசியம்.

கவிதையில் மட்டுமே…
வார்த்தைகளுக்கு வாய் முளைக்கும்
வாசிப்பவருக்கு வாய் பிளக்கும்

கவிதையில் மட்டுமே
காகிதங்கள் கருவுறும்
காரியங்கள் உருப்பெறும்
 
வானவில்லை மொழி பெயர்த்தால் கவிதை!
வாசமுல்லை வழி வாய்த்தால் கவிதை!
கானகத்துக் குயில் பாட்டும்
காமமற்ற காதலும்தான் கவிதை!

தேசிய கீதமும் கவிதை
நேசிக்கும் பாஷையும் கவிதை
சாரள வெளிச்சமும் கவிதை
சூரியப் பிரவாகமும் கவிதை

மின்மினி வெளிச்சமும் கவிதை
மின்னாத இருளும் கவிதை
சொல்லிய வார்த்தைகளும் கவிதை
சொல்லாத வெற்றிடமும் கவிதை

வட்டத்துக்குள் அடங்க
ஆரமல்ல கவிதை
மாதத்துக்குள் முடிய
வாரமல்ல கவிதை
 
வாசிக்கத் திணற
கவிதை பாரமுமில்லை
வார்த்தைகளுக்குள் அடங்க
கவிதைக்கு நேரமுமில்லை.

எது கவிதை?
கரம் கொண்டு விதைத்தால் 
மரம்
கருவிதை விதைத்தால் 
கவிதை!!!
Quote | Report to administrator
ஷேக்ஹா
+1 #15 ஷேக்ஹா 2013-04-13 07:14
முத்துமாலையாய் ஜொலிக்கிறது உங்கள் கவிதை.. வாழ்த்துக்கள். சில சமயம் எழுதும் போது நீங்க நினைக்காத அர்த்தம் வாசிக்கும் போது சிலரை குத்தும்.. உதாரணமாக..

//கவிதையில் மட்டுமே
காகிதங்கள் கருவுறும்
காரியங்கள் உருப்பெறும்// - ஒரு முஸ்லிமாக இதை ஏற்பதில் சிக்கலை உணர்கிறேன்..
Quote | Report to administrator
Sabeer abuShahruk
+2 #16 Sabeer abuShahruk 2013-04-13 15:48
அன்பிற்குரிய ஷேக்ஹா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

தங்களின் நுனுக்கமான திருத்தம் ஆழ்ந்த வாசிப்பின் அடையாளம் என்றறிந்து மகிழ்கிறேன்.

நான் ஒப்பீட்டில் நினைத்தது கதை, கட்டுரை, நாடகம், உரையாடல் போன்ற வடிவங்களை மட்டுமே.  ஆனால், தாங்கள் சுட்டியப் பிறகு விடுபட்டதை உணர்ந்து கொண்டேன்.

" மட்டுமே" என்னும் வார்த்தையை மூலத்தில் நீக்கிக் கொள்கிறேன். திருத்தத்தை நன்றியோடு ஏற்கிறேன்.
Quote | Report to administrator
KHALEEL AHMED
0 #17 KHALEEL AHMED 2013-04-30 17:54
VERY NICE TO READ.KEEP IT UP MY BROTHER..ALLAH BLESS U ALWAYS.
Quote | Report to administrator
Shekha
0 #18 Shekha 2013-05-06 21:33
no bro sabeer. i am not a very good reader. namme maarkathuku porunthumaa enru thadumaara seyhire vasanangkalai ennaal ilahuvaahe kadanthuvida mudivathillai. friendship sms kalil koode nammavarhal sarva saathaaranamaah a ALLAH porunthaatha vaarthaihalai forward pannuraange..Sa dddddd. BAARAKALLAHU LAKa.
Quote | Report to administrator

Add comment

இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.


Security code
Refresh

சமீப கருத்துக்கள்