| ஓர் ஆலிம் ( I.A.S ) ஐ. ஏ. எஸ் ஆகிறார். |
|
|
| செய்திகள் - இந்தியச் செய்திகள் |
| ஞாயிறு, 20 ஜூலை 2008 04:34 |
|
{mosimage}மதரஸாக்களில் அளிக்கப்படும் உயர்ந்த கல்வித்தரம் குறித்து பலரது விழிப்புருவங்கள் வில்லாய் மாறியுள்ள இன்றைய சூழ்நிலையில், உ.பி.யில் உள்ள புகழ் பெற்ற தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸா மாணவர் வஸீமுர் ரஹ்மான் நாட்டின் உயர்நிலைத் தேர்வான I.A.S.தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். புது தில்லியில் உள்ள பாஹர் கன்ச்சில் R.S.S. அமைப்பினரால் நடத்தப்படும் I.A.S பயிற்சிப் பள்ளியில் மௌலானா ஒருவர் பயிற்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது இன்னும் வியப்பைத் தருகிறது. மொத்தம் வெற்றி பெற்ற 734 பேரில் இவர் 404வது இடத்தைப் பெற்றுள்ளார். வரலாறு மற்றும் பாரசீகத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு உருது மொழியில் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். கடந்த மூன்று முறை தேர்வு எழுதி தோல்வியைத் தழுவிய இவர் நான்காவது முறையாக கடினமாக முயன்று இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார். மதரஸாவில் படித்த மாணவர் ஒருவர் I.A.S தேர்வில் வெற்றி பெற்று இருப்பது நாட்டிலேயே முதன் முறையாகும். மௌலானா வஸீமுர் ரஹ்மான் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சார்ந்தவர். தேவ்பந்தில் திருக்குர்ஆன், ஹதீஸ் மற்றும் ஷரீஅத் சட்டப் பாடங்களைக் கொண்ட மூன்றாண்டு வகுப்பு படித்துள்ளார். தேவ்பந்த் மதரஸாவின் சான்றிதழ், பட்டப் படிப்புக்குச் சமம். பின்னர் அலிகரில் உள்ள ஜாமியா ஹம்தர்தில் சேர்ந்து யுனானி மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை பட்டத்தையும், அதே பிரிவில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பாட புத்தகங்களைப் பல இடங்களில் அலைந்து திரிந்து பெற்று, பகலில் முதுகலை வகுப்புக்குச் சென்று கொண்டே இரவிலும் அதிகாலையிலும் படித்துள்ளார் வஸீம். "மதரஸா மாணவர்கள் பொதுவாக சிவில் சர்வீஸ் தேர்வுகளில் கலந்து கொள்வதில்லை. நாம் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என சிந்தித்தேன். எனது ஆசிரியர்களுடனும் நண்பர்களுடனும் கலந்து ஆலோசித்து இதில் பங்கேற்றேன். மதரஸாவில் பயின்றதால் எனக்குத் தன்னம்பிக்கையும் ஊக்கமும் பிறந்தது" என்கிறார் மகிழ்சியோடு, மௌலானா வஸீமுர் ரஹ்மான் I.A.S. நன்றி : சமரசம். கருத்துக்கள் (11)
![]() எழுதியவர்: Abu Waseema - Kuwait , July 20, 2008 10:41 மாஷா அல்லாஹ். இவர் பெற்ற இன்பம் நம் சமுதாயம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன். எழுதியவர்: farook abdullah , July 20, 2008 11:24 ALLAHU VEN KERUBAIYAL KUDEYA VERAIVEL NAM SAMUDHAYAM MELUM MELUM SATHANAI PUREYA INSHALLAH ALLAHU ARUL PUREVAAN AMEEN AMEEN YA RABEL AALAMEEN எழுதியவர்: M.S.K , July 20, 2008 14:25 Assalaamu Alaikkum Congratulations to U .... Alhamdulillaah Allahu Akbar. May Allah bless us with more such people for inspiring Muslim UMMAH to march forward.. நல் வாழ்த்துக்கள்... அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹுக்கே..... அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ் மேலும் இவரைப் போல் பலர் (கல்வியில்) முன் மாதிரியாக திகழ்ந்து முஸ்லிம் உம்மத் முன்னேர அருள் புரிய வேண்டும். M.S.K எழுதியவர்: Akbar Basha SAIF zone Sharjah , July 20, 2008 17:13 Alhamdulillahi Rabbil AAlameen menmelum Allah Arul Puriwanaga எழுதியவர்: மஸ்தூக்கா , July 20, 2008 21:15 ஓர் ஆலிம் IAS ஆகியிருப்பது உண்மையிலேயே பெருமைப்படத்தக்க விஷயம் தான். தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலான அரபிக் கல்லூரிகளில் ஆலிம் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்கள் உலகக் கல்வியில் போதுமான ஞானம் பெற்றவர்களாக இல்லை என்பது வருந்தத்தக்க செயதியாகும். அரபிக் கல்லூரியில் சேர்வதற்கான கல்வித் தகுதி குறைந்த பட்சம் SSLC என நிர்ணயம் செய்தால் இன்னும் தரமான ஆலிம்கள் பட்டம் பெற்று வெளிவருவார்கள். விதிவிலக்காக உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக்ல்லூரி, வேலூர் பாக்கியாத் அரபிக்கல்லூரி. சென்னை ஜமாலியா அரபிக்ல்லூரி உத்தமபபாளையம் கருத்த ராவுத்தர் அரபிக்கல்லூரி போன்றவைகள் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழக பட்டப்படிப்பைத் தொடர வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதன் காரணமாக ஆலிம் பட்டமும் பல்கலைக் கழக பட்டமும் ஒருங்கே பெறும் மாணவாகள் உருவாகின்றனர். தமிழகத்தின் மற்ற அரபிக் கல்லூரிகளும் இது விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் ஆலிம்கள் டாகடர்களாகவும் இஞ்சினியர்களாகவும் அதிகாரிகளாகவும் எதிர்காலத்தில் உருவாவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஐஏஎஸ் ஹஜ்ரத் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணம். எழுதியவர்: சத்தியமார்க்கம்.காம் , July 21, 2008 07:21 ஆங்கிலத்தில் பின்னூட்டமிடும் சகோதரர்களுக்கு, ஒவ்வொரு கட்டுரைக்கும் கீழே 'கருத்துக்கள்' என்ற தலைப்பின் கீழ் 'தமிழில் தட்டச்ச ...' தேர்ந்தெடுத்து, தமிழில் நீங்கள் பின்னூட்டமிடலாம். அல்லது, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் தேதிக்குக் கீழ் உள்ள, 'உதவி -> தமிழில் தட்டச்ச...' தேர்ந்தெடுத்துத் தமிழிலேயே பின்னூட்டமிடலாம். அல்லது, கீழ்க்காணும் சுட்டியைப் பயன்படுத்தியும் தமிழில் தட்டச்சலாம்: http://www.satyamargam.com/index.php?option=com_wrapper&Itemid=161 நன்றி! எழுதியவர்: fouzia farook , July 21, 2008 09:05 மாஷா அல்லாஹ். இவர் பெற்ற இன்பம் நம் சமுதாயம் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன் அரபிக் கல்லூரியில் சேர்வதற்கான கல்வித் தகுதி குறைந்த பட்சம் SSLC என நிர்ணயம் செய்தால் இன்னும் தரமான ஆலிம்கள் பட்டம் பெற்று வெளிவருவார்கள். எழுதியவர்: fouzia farook , July 21, 2008 12:32 உண்மையிலேயே பெருமைப்படத்தக்க விஷயம் தான் ஓர் ஆலிம் IAS ஆகியிருப்பது முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணம் மதரஸாவில் படித்த மாணவர் ஒருவர் I.A.S தேர்வில் வெற்றி பெற்று இருப்பது நாட்டிலேயே முதன் முறையாகும் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹுக்கே எழுதியவர்: MOULAVI.S. ABDUR RAHIM NADWI M.A., M.LIT., R.B.P., , July 22, 2008 05:47 I realy proud of my great alim brother.but this ALIM IAS must be a muslim IAS officer , i want to see the activity of our rool models 'khalibhas' கருத்து எழுதுக :
|