முகப்பு

இஸ்லாம்

செய்திகள்

தகவல்

கட்டுரைகள்

சேவைகள்

தொடர்பு கொள்க!

முகப்பு

முன்னுரை

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், கல்வியில் சாதனை படைத்த சகோதரிகளை நமது தளத்தில் அறிமுகப் படுத்தியபோது அவர்களது நிழற்படங்களுடன் அறிமுகப் படுத்தினோம். அதற்கு முன்னரும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்ட சகோதரியரைப் பற்றியும் விளையாட்டு வீராங்கனைகளைப் பற்றியும் நிழற்படத்துடன் செய்திகள் வெளியிட்டு இருக்கிறோம்.

அவற்றுள் செவிப்புலனும் பேச்சுத்திறனும் அற்ற சகோதரி ஃபாத்திமா பானு, காதுகேளாதோர் பள்ளியில் பயின்று, இந்த (2010ஆம்) ஆண்டின் ப்ளஸ்2 தேர்வில் முதலிடத்தில் வெற்றி பெற்ற செய்தியை அவரது நிழற்படத்துடன் பதிந்தபோது நமது வாசகர்கள் சிலர், "முஸ்லிம் பெண்களின் நிழற்படத்தைத் முகத்திரையின்றிப் பதித்தது தவறு" என்றும் "முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆடவருக்கு எதிரில் முகத்திரை அணிந்தே தோன்ற வேண்டும்" என்றும் தமது கருத்துகளைப் பின்னூட்டத்தில் பதிந்திருந்தனர்.

வேறு சில சகோதரர்கள், "முஸ்லிம் பெண்கள் முகத்திரை அணியவேண்டும் என்பது மார்க்கத்தில் கட்டாயம் இல்லை" என்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தனர். முதலாவது கருத்து சரியா? இரண்டாவது கருத்து சரியா? அன்றி இரண்டுமே சரியா? என்பது பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு நம் வாசகர்களின் பின்னூட்டங்கள் காரணமாயின. வாய்ப்பளித்த நம் வாசகர்களுக்கு நன்றி!

திரை(ஹிஜாப்) தொடர்பான இறைமறை வசனங்கள், அண்ணலார் (ஸல்) அவர்களின் போதனைகள், நபித் தோழர்கள்/தோழியர் பின்பற்றிய நடைமுறைகள் அனைத்தையும் இயன்றளவு ஆய்ந்து, திரை(ஹிஜாப்) பற்றிய முழுமையான ஓர் ஆக்கத்தை இங்கு சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

குறிச்சொற்கள்:

திரை(ஹிஜாப்-Hijab), முகத்திரை(நிகாப்-Niqab), புர்கா-Burqa, பருவமடைந்த பெண்கள், புனித உறவுடையோர்(மஹ்ரம்-Mahram), ஹிஜ்ரீ 5ஆம் ஆண்டு, அல்-அஹ்ஸாப்-Al Ahzab (33ஆவது) அத்தியாயம், அந்நூர்-Al Noor (24ஆவது) அத்தியாயம்.

oOo

[1] இறைமறை வசனங்கள் - நபிமொழிச் சான்றுகள்

[சான்று 1:1] இறைவசனம்

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ ...

"(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் (இயல்பாக) வெளியே தெரிபவற்றைத்தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். மேலும், தமது முக்காடுகளை(நீட்டி)த் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்து)க் கொள்ளட்டும் ..." (அல்குர்ஆன் 24:31)

இந்த இறைவசனத்தின் மூலத்தில் ஆளப்பட்டுள்ள கும்ரு ( خُمْرُ ) எனும் அரபுச்சொல், கிமார் ( خِماَرٌ ) எனும் சொல்லின் பன்மையாகும். அதற்கு, தலையை மறைக்கும் துணி (ஸ்கர்ஃப்/மஃப்ளர்) என்பது பொருளாம்.

சான்று [1:2] ஹதீஸ் :

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ قَتَادَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه أبو داود

"மாதவிடாய் (வரத்தகுந்த, பருமடைந்த) பெண்ணின் தொழுகையை,  முக்காடு(கிமார்) இன்றித் தொழுதால் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - அபூதாவூது(5460).

கிமார் எனும் சொல்லை, முகத்தை மறைக்கும் திரை(ஹிஜாப்) எனச் சிலர் தவறாகப் பொருள் கொள்கின்றனர். அவ்வாறு பொருள் கொண்டால் மேற்காணும் ஹதீஸுக்கு, "பெண்கள் தொழும்போது முகத்தை மூடிக் கொள்ளவேண்டும்" எனும் மிகத் தவறான முடிவு பெறப்படும்.

மேற்காணும் (24:31) இறைவசனத்தின் மூலம் பருவமடைந்த பெண்கள், இல்லத்தைவிட்டு வெளியே சென்று அந்நிய ஆண்களிடையே தோன்றும்போது தங்கள் உடல் முழுதும் மறைக்கும் இயல்பான மேலாடை, கீழாடையோடு, தலையையும் மார்பையும் கூடுதலாக மூடிக் கொண்டிருக்க வேண்டும் எனும் கட்டளை பெறப்படுகின்றது. முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என்ற கட்டளை இவ்வசனத்தில் இல்லை.

மேலும், நபித்தோழர்கள்/தோழியர் தாங்களாக ஒரு செயலைச் செய்வதற்கும் இறைவசனத்தை/நபிமொழியைச் செயற்படுத்துவதற்கும் மிகப்பெரும் வேறுபாடு உள்ளது.

மேற்காணும் (24:31)இறைவசனம் அருளப்பெற்றவுடன் நபித்தோழியர் அதைச் செயற்படுத்திய விதத்தைப் பார்ப்போம்.

சான்று [1:3] ஹதீஸ் :

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا كَانَتْ تَقُولُ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ أَخَذْنَ أُزْرَهُنَّ فَشَقَّقْنَهَا مِنْ قِبَلِ الْحَوَاشِي فَاخْتَمَرْنَ بِهَا رواه البخاري

"தமது முக்காடுகளைத் தம் மார்பின்மேல் போட்டு(மறைத்து)க் கொள்ளட்டும் ..." எனும் இறைவசனம் அருளப்பெற்றதும், பெண்கள் தங்கள் கீழ்அங்கிகளின் ஓரத்தைக் கிழித்து அதனை (மார்பை மறைக்கும் கனமான) துப்பாட்டா ஆக்கிக் கொண்டார்கள்" அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரஹ்) - புகாரீ 4759.

சான்று [1:4] இறைவசனம் :

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ

"நபியே! உம் மனைவியர்க்கும் உம் புதல்வியர்க்கும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அவர்கள்தம் முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகாமலிருப்பதற்கும் இஃது ஏற்றதாகும் ..." (அல்குர்ஆன் 33:59).

திரை(ஹிஜாப்) பற்றிய பேசுபொருளில் மேற்காணும் இறைவசனம் குறிப்பிடத் தக்கதாகும். இந்த வசனத்தில் "முக்காடுகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு" கட்டளை இருக்கிறதே அன்றி, முகத்தை மூடிக் கொள்ளுமாறு கட்டளை இல்லை.

பெண்கள்தம் தலையில் போடப்படும் முக்காடு, அரைகுறையாக இல்லாமல் தலையை மறைத்து முழுமையாகவும் அதைவிடக் கொஞ்சம் கூடுதலாகவும் இருக்க வேண்டும் என்பதை, முக்காட்டைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று இந்த இறைவசனம் கூறுகிறது. வேறு சொற்களால் கூறவேண்டுமெனில், முக்காட்டைத் தாழ்த்திக் கொள்வது முகத்துக்கான திரை(ஹிஜாப்) என்று இந்த இறைவசனம் விளக்கம் கூறுகிறது.

மேலும், "பெண்கள் அறியப்படவேண்டும்" என்றும் அவ்வாறு அறியப்படுவதால் "அவர்கள் தொல்லைக்கு உள்ளாக மாட்டர்கள்" என்றும் அறுதியிடும் இந்த வசனம், முஸ்லிம் பெண்களுக்கு ஏற்படும் இன்றைய சமகாலச் சங்கடங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கும் அவர்களுக்கு வழிவகைகளைச் சொல்லித் தருகிறது.

சான்று [1:5] இறைவசனம் :

قُل لِّلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ...

"(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்பைக் காத்துக் கொள்ளுமாறும் கூறுவீராக! ..." (அல்குர்ஆன் 24:30) 'திரை(ஹிஜாப்) என்பது முகத்தை மூடிக்கொள்வது' எனப் பொருள் கொண்டால், மேற்காணும் (24:30) இறைவசனம் பொருளற்றுப் போய்விடும். முழுக்க மறைத்த முகத்தை, ஆண்கள்தம் பார்வையை உயர்த்திப் பார்ப்பதும், பார்வையைத் தாழ்த்திப் பார்க்கமலிருப்பதும் சமமே.

முகம் திறந்திருக்கும் அந்நியப் பெண்களை, உற்று உற்றுப் பார்க்காமல் இயல்பாகப் பார்க்கும் பார்வைக்கு ஆண்களுக்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது.

சான்று [1:6] ஹதீஸ் :

يا علي لا تتبع النظرة النظرة، فإنما لك الأولى، وليس لك الأخرى

"அலீயே! (அந்நியப் பெண்களை) உற்று உற்றுப் பார்க்காதீர். உமக்கு (இயல்பான) முதல் (வகை) பார்வை அனுமதிக்கப் பட்டது; பிற (வகை) பார்வைக்கு அனுமதியில்லை" என்று (தம் மருமகனார்) அலீ (ரலி) அவர்களுக்குப் பெருமானார் (ஸல்) அறிவுரை கூறினார்கள். - அஹ்மது(5/353), திர்மிதீ(2777), அபூதாவூது(2149).

ஆண்களை ஈர்க்கும் அழகை/வசீகரத்தை, அல்லாஹ் பெண்களின் முகத்தில் வைத்திருக்கிறான். அதைத் தன் வேதத்திலும் எடுத்துக் காட்டி உணர்த்துகிறான்:

சான்று [1:7] இறைவசனம் :

لَا يَحِلُّ لَكَ النِّسَاء مِن بَعْدُ وَلَا أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ ...

"(நபியே!) பிற பெண்களின் அழகு உம்மை எத்துணை ஈர்த்தாலும் உம் மனைவியர்க்குப் பகரமாக அவர்களை மாற்றிக் கொள்வதற்கு உமக்கு அனுமதி இல்லை ..." (அல்குர்ஆன் 33:52).

இந்த வசனத்தில் "பெண்களின் அழகு, ஆண்களை ஈர்க்கும்" என்று படைப்பாளனான அல்லாஹ் திட்டவட்டமாகக் கூறுகிறான். ஒரு பெண், பேரழகியாகவே இருந்தாலும் அவள் தன் முகத்தை மறைத்துக் கொண்டால் எவரையும் ஈர்க்க முடியாது. முழுக்க மறைத்துக் கொண்டால் அழகியும் விகாரியும் குமரியும் கிழவியும் ஒன்றுபோல்தான்.

சான்று [1:8] ஹதீஸ் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), வழியில் செல்லும் ஒரு பெண்ணை (ஒருபோது) பார்த்தார்கள். உடனே, தம் துணைவியான ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்று தம் தேவையை நிறைவு செய்தார்கள். பின்னர் தம் தோழர்களிடம் வந்து, "(கவர்ச்சி காட்டும்) ஒரு பெண் முன்னோக்கி வரும்போதும் கடந்து செல்லும்போதும் ஷைத்தானின் கோலத்தில் வந்து செல்கிறாள் ... உங்களில் ஒருவர் (அந்நியப்) பெண்ணொருத்தியை (வழியில்) பார்த்து, அவளால் ஈர்க்கப்பட்டால், அவர் உடனே தம் துணைவியிடம் சென்று (தம் தேவையை) நிறைவு செய்து கொள்ளட்டும் ..." என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி) - முஸ்லிம்(1403).

இதே ஹதீஸ் முஸ்னது அஹ்மதில்

من طريق حرب بن أبي العالية عن أبي الزبير عن جابر بن عبد الله الأنصاري : أن رسول الله صلى الله عليه وسلم رأى امرأة فأعجبته

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டார்கள்" என்று கூடுதல் தகவலோடு (3/310) பதிவாகியுள்ளது. ஆனால், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டார்கள் என்பது மறுக்கத் தக்கதாகும். ஏனெனில் அது, அறிவிப்பாளர் ஹர்பு பின் அபில் ஆலியாவின் இடைச்செருகல். 'நான் ஈர்க்கப்பட்டேன்' என்று அல்லாஹ்வின் தூதர் சொல்லாமல் அறிவிப்பாளர் ஹர்புக்குத் தெரிந்தது எப்படி?" என்ற தர்க்கரீதியான வினாவை இமாம் நவவீ (ரஹ்) முன்வைக்கிறார்கள் (அல்மஜ்மூஉ).

இருப்பினும், வழியில் சென்ற ஒரு கவர்ச்சியான பெண்ணை நபி (ஸல்) கண்டார்கள் என்பதில் இருகருத்தில்லை. மதீனாவின் ஆட்சித் தலைவராக இருந்த அண்ணல் நபி (ஸல்) அந்தப் பெண்ணைப் பார்த்து, "முகத்தை மூடிக் கொண்டு போ" என்று அதட்டவில்லை;  அறிவுறுத்தவில்லை என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

மேலும், பெருமானார் (ஸல்) தம் இளைய தோழர்களுக்குக் கூறினார்கள்:

சான்று [1:9] ஹதீஸ் :

وفي الصحيحين وغيرهما عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم  يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحصن للفرج ، ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء  قال في القاموس : والباءة والباء النكاح . وفي لفظ " عليكم بالباء " وذكر الحديث .

"இளைஞர்களே! உங்களில் திருமணச் செலவுகளுக்குச் சக்தி பெற்றவர் திருமணம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், திருமணம் செய்வது பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். திருமணம் செய்து கொள்ளச் சக்தி பெறாதவர் நோன்பிருந்து கொள்ளட்டும். அது இச்சையைக் கட்டுப்படுத்தும்" அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) - புகாரீ 1905.

பிறிதொருமுறை கூறினார்கள்:

சான்று [1:10] ஹதீஸ் :

" الصِّيَامُ جُنَّةٌ ..."

"நோன்பு என்பது கேடயமாகும் ..." அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) - புகாரீ 1894.

oOo

[2] நம்பிக்கையாளர்களின் அன்னையர்களது நடைமுறை

இனி, அல்லாஹ்வின் தூதரின் மனைவியர் தொடர்பான ஹிஜாபைப் பற்றிய ஹதீஸ்களைப் பார்ப்போம். அதற்கு முன்னர், அஹ்ஸாப் (33) அத்தியாயத்தின் மூன்று இறைவசனங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது.

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ ...

"இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள்தம் உயிரைவிட (நம்) நபி மேலானவர். அவரின் துணைவியர் அவர்களுக்கு அன்னையர் ..." (அல்குர்ஆன் 33:6).

... وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَن تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَن تَنكِحُوا أَزْوَاجَهُ مِن بَعْدِهِ أَبَدًا ...

"(இறைநம்பிக்கையாளர்களே!) ... அவர்களிடம் நீங்கள் (எதையேனும்) கேட்பதாயின் திரைக்கு இப்பாலிருந்தே கேளுங்கள். அது, உங்களுடையை உள்ளங்களையும் அவர்களது உள்ளங்களையும் மிகத்தூய்மையாக்கி வைக்க ஏற்றதாகும். அல்லாஹ்வின் தூதரை நீங்கள் சங்கடத்துக்குள்ளாக்குவது உங்களுக்குத் தகுமானதன்று. அவரின் மனைவியரை அவருக்குப் பின்னர் ஒருக்காலும் நீங்கள் மணமுடித்தலாகாது ... (அல்குர்ஆன் 33:53).

يَا نِسَاء النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاء إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ

"நபியின் மனைவியரே! நீங்கள் (சாதாரண குடும்பத்துப்) பிற பெண்களைப் போன்றோர் அல்லர் (தூதரின் மனைவியர் என்ற தனிச்சிறப்புத் தகுதி பெற்றோர்). எனவே, நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி வாழ்வோராயின், (அந்நியருடன் பேசும்) பேச்சில் குழைவு காட்டாதீர்! ..." (அல்குர்ஆன் 33:32).

அன்னை ஸவ்தா பின்த் ஸம்ஆ ( ‏سودة بنت زمعة  ரலி)

சான்று [2:1] ஹதீஸ் :

حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا أَبِي عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يَقُولُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ احْجُبْ نِسَاءَكَ قَالَتْ فَلَمْ يَفْعَلْ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْرُجْنَ لَيْلًا إِلَى لَيْلٍ قِبَلَ الْمَنَاصِعِ فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ  وَكَانَتْ امْرَأَةً طَوِيلَةً فَرَآهَا عُمَرُ بْنُ الْخَطَّابِ وَهُوَ فِي الْمَجْلِسِ فَقَالَ عَرَفْتُكِ يَا سَوْدَةُ حِرْصًا عَلَى أَنْ يُنْزَلَ الْحِجَابُ قَالَتْ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ آيَةَ الْحِجَابِ

உமர் இப்னு கத்தாப் (ரலி), இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம், 'தங்கள் துணைவியரை ஹிஜாப் அணியச் சொல்லுங்கள்(அதுவே அவர்களுக்குப் பாதுகாப்பு)' என்று கூறி வந்தார்கள். ஆனால்,  நபி (ஸல்) (அவ்வாறு) செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் துணைவியரான நாங்கள் ஒவ்வோர் இரவிலும் (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள திறந்த வெளியான) 'அல்மனாஸிஉ' எனுமிடத்திற்குச் செல்வது வழக்கம்.

(ஒருபோது நபியவர்களின் துணைவியார்) ஸவ்தா பின்த் ஸம்ஆ ( ‏سودة بنت زمعة  ரலி) (அங்குச் செல்ல) வெளியேறினார். அவர் உயரமான பெண்ணாயிருந்தார். அப்போது ஓர் அவையில் அமர்ந்திருந்த உமர் (ரலி), ஸவ்தாவை இனங்கண்டு கொண்டு, "ஸவ்தாவே! தங்களை அடையாளம் கண்டுகொண்டோம்" என்று கூறினார்கள். ஹிஜாப் சட்டம் அருளப்பெற வேண்டுமென்ற ஆர்வத்தில் அவ்வாறு கூறினார்கள். அல்லாஹ் ஹிஜாப் பற்றிய (33:53) வசனத்தை(ப் பிறகு) அருளினான். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ 6240.

மேற்காணும் ஹதீஸில் உமர் (ரலி),  அன்னையருக்கான ஹிஜாபைப் பற்றிப் பலமுறை வலியுறுத்தியும் அண்ணல் நபி (ஸல்) அதைப் பொருட்படுத்தவில்லை என்று விளங்குகிறது.

பிறிதொரு ஹதீஸ் மூலம் அல்லாஹ், தன் தூதரின் கருத்தையே உறுதிப்படுத்துகிறான்:

சான்று [2:2] ஹதீஸ் :

ஹிஜாப் சட்டம் அருளப்பெற்ற பின்னர், ஸவ்தா பின்த் ஸம்ஆ ( ‏سودة بنت زمعة  ரலி) ஒருபோது, தம் தேவைக்காக வேண்டி,  வெளியே சென்றார். அவர், (உயரமான) கனத்த உடல்வாகுடைய பெண்மணியாக இருந்தார். அவரை அறிந்தவர்களுக்கு அவர் யார் என்று (அடையாளம்) தெரியாமலிருக்காது. அவரை அப்போது, உமர் இப்னு கத்தாப் (ரலி) பார்த்துவிட்டு, "ஸவ்தாவே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாமலில்லை. நீங்கள் (அடையாளம் தெரிகிற வகையில்) எப்படி வெளியே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!" என்று குறை கூறினார்கள்.

ஸவ்தா (ரலி) உடனே அங்கிருந்து திரும்பிவிட்டார். இறைத்தூதர் (ஸல்) அப்போது என் வீட்டில் இரவு உணவு உண்டுகொண்டிருந்தார்கள். அவர்களின் கரத்தில் எலும்புத்துண்டு ஒன்று இருந்தபோது ஸவ்தா (ரலி) என் வீட்டினுள் வந்து, "இறைத்தூதர் அவர்களே! நான் என் தேவை ஒன்றிற்காக வெளியே சென்றேன். உமர் (ரலி) என்னிடம் இன்னின்னவாறெல்லாம் கூறினார்" என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு 'வஹீ' (வேத வெளிப்பாடு) அறிவித்தான். வஹீ்நிலை அவர்களைவிட்டு நீக்கப்பட்டபோது எலும்புத் துண்டு அவர்களின் கரத்தில் அப்படியே இருந்தது; அதை அவர்கள் (கீழே) வைத்துவிடவில்லை. பிறகு, நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ 4795.

இப்போதும் தம் மனைவியை, "முகத்தை மூடிக் கொண்டு வெளியே செல்"லுமாறு அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கட்டளை வரவில்லை.

ஆனால், ஒரு சிறுவன் விஷயத்தில் "ஹிஜாபைப் பேணிக் கொள்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்னை ஸவ்தா (ரலி) அன்ஹாவுக்குக் காரணத்தோடு கட்டளையிட்டார்கள்.

சான்று [2:3] ஹதீஸ் :

ஓர் அடிமைப்பெண் இருவேறு காலகட்டங்களில் இரு ஆண்களின் ஆளுகையின்கீழ் இருந்திருக்கிறார். அவ்விருவருள் ஒருவர் உத்பா இப்னு அபீவக்காஸ். இவர், புகழ்பெற்ற நபித்தோழர் ஸஅத் இப்னு அபீவக்காஸின் அண்ணனாவார். இரண்டாமவர் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களின் தந்தையான ஸம்ஆ ( ‏ زمعة) என்பவர்.

"ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனொருவன் மக்காவில் வளர்கிறான். அவன் எனக்குப் பிறந்தவன். எனவே, நீ மக்காவுக்குச் சென்றால் அவனைக் கைப்பற்றிக் கொண்டு வந்துவிடு" என்று உத்பா இபுனு அபீவக்காஸ், தம் தம்பியான ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கியிருந்தார்.

அவ்வாறே மக்கத்து வெற்றியின்போது, ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அந்தப் பையனைக் கைப்பற்றிக்கொள்ள முனைந்தபோது, "இவன், என் தந்தையின் ஆளுகையில் அந்த அடிமைப்பெண் இருந்தபோது பிறந்த என் தம்பியாவான்" என்று ஸம்ஆவின் மகன் அப்து (ரலி) எதிர்ப்புத் தெரிவித்தார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழக்குக் கொண்டுவரப்பட்டது.

அந்தப் பையனின் முகத்தில் உத்பாவின் சாயல் நிரம்பி இருப்பதை நபி (ஸல்) கண்டார்கள். இருப்பினும், 'ஓர் அடிமைப்பெண் எந்த ஆணுடைய ஆளுகையின்கீழ் இருக்கும்போது குழந்தை பெற்றெடுக்கிறாளோ அந்த ஆணுக்கே அக்குழந்தை உரியது' என்ற நியதியின்படி, "அப்தே! இவன் உனக்கு உரியவன்தான்" எனத் தீர்ப்பளித்தார்கள்.

பின்னர் தம் மனைவியிடம், "ஸம்ஆவின் மகள் ஸவ்தாவே! இந்தப் பையனிடம் நீ ஹிஜாபைப் பேணிக்கொள்" என்று கூறினார்கள். அதிலிருந்து அன்னை ஸவ்தா (ரலி) அந்தப் பையனைப் பார்த்ததேயில்லை. - புகாரீ 2218, 2421, 2533, 2745, 4303, 6749, 6765, 6817, 7182.

இந்த ஹதீஸில் நாம் கவனிக்கத் தக்க நான்கு அம்சங்கள் உள்ளன:

 1. மேற்காணும் தீர்ப்பின்போது அந்தப் பையன் ஹிஜாப் பேணக்கூடிய தேவையில்லாத ஒரு சிறுவன் ( غلام ).

 2. தீர்ப்பின்படி, அச்சிறுவன் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களின் தம்பி்.

 3. "இவனிடம் ஹிஜாபைப் பேணிக்கொள் ஸம்ஆவின் மகளே!" என்று உறவையும் சுட்டி நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியான ஸவ்தா (ரலி) அவர்களுக்குக் கட்டளை இடுகிறார்கள்.

 4. அந்தக் கட்டளைக்குப் பின்னர் - அச்சிறுவன் வளர்ந்து பெரியவனான பிறகும் - அன்னை ஸவ்தா (ரலி) அவர்கள் அவனைக் கடைசிவரையிலும் பார்க்கவேயில்லை.

وَأَمَّا قَوْلُهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ ) فَأَمَرَهَا بِهِ نَدْبًا وَاحْتِيَاطًا ، لِأَنَّهُ فِي ظَاهِرِ الشَّرْعِ أَخُوهَا لِأَنَّهُ أُلْحِقَ بِأَبِيهَا ، لَكِنْ لَمَّا رَأَى الشَّبَهَ الْبَيِّنَ بِعُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ خَشِيَ أَنْ يَكُونَ مِنْ مَائِهِ فَيَكُونَ أَجْنَبِيًّا مِنْهَا فَأَمَرَهَا بِالِاحْتِجَابِ مِنْهُ احْتِيَاطًا (صحيح مسلم بشرح النووي - كِتَاب الرِّضَاعِ - الولد للفراش وللعاهر الحجر).

"இவை அத்தனையும் அச்சிறுவன் உத்பாவின் மகனாக இருக்கக்கூடிய வாய்ப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தாம்" என்று இமாம் முஸ்லிம் (ரஹ்) விளக்குகின்றார்கள் (அல்மஜ்மூஉ). அன்னை ஸவ்தா (ரலி) அவர்களோடு தொடர்புடைய ஹிஜாபின் நிலை இதுதான்.

அன்னை ஸஃபிய்யா (ரலி)

சான்று [2:4] ஹதீஸ் :

கைபர் போரின்போது அடிமைப் படுத்தப்பட்ட அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களை நபி (ஸல்) விடுதலை செய்து மணமுடித்துக் கொண்டபோது, "ஸஃபிய்யா (ரலி), அண்ணலாரின் பிற மனைவியரைப் போன்ற ஒரு மனைவியா? அன்றி, அடிமைப் பெண்ணா?" என்பது பற்றி நபித்தோழர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.

இறுதியாக, "ஸஃபிய்யாவுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப்(திரை) இட்டால், அவர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரில் ஒருவர். இல்லையெனில் அவர் அடிமைப் பெண்களில் ஒருவர்'' என்று முடிவுக்கு வந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாகன(மான ஒட்டக)த்தில் புறப்பட்டபோது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி)விட்டார்கள். அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) - புகாரீ 4213.

மேற்காணும் ஹதீஸ், வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் பெண்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் சிவிகையைச் சுற்றிக் கட்டப்படும் திரையைப் பற்றி பேசுகிறது.

சான்று [2:5] ஹதீஸ் :

"அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காக இருக்கையமைத்து இடம்கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) அவர்களுக்கும் மக்களுக்குமிடையே திரையிட்டு நபி (ஸல்) இழுத்து (மூடி)விட்டார்கள்" என்று புகாரீ ஹதீஸ் 5085 விளக்குகிறது. அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்கள் முகத்தை மூடிக்கொண்டு பயணித்ததாக ஹதீஸ்களில் குறிப்பேதும் இல்லை.

சான்று [2:6] ஹதீஸ் :

நானும் அபூதல்ஹா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (கைபரிலிருந்து மதீனாவை) நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்கள் தம்முடனிருந்த ஸஃபிய்யா (ரலி) அவர்களைத் தம் (ஒட்டக) வாகனத்தில், பின்னால் அமர்த்தியிருந்தார்கள். (சிறிது தூரம் கடந்து) பாதையில் ஓரிடத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தபோது நபியவர்களின் ஒட்டகம் இடறி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே வீழ்த்தப்பட்டனர்.

உடனே அபூதல்ஹா (ரலி) தம் ஒட்டகத்திலிருந்து தாவிக் குதித்து இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் நபியே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு (காயம்) ஏதும் ஏற்பட்டதா?' என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், நீ இந்தப் பெண்ணை(ஸஃபிய்யாவை)க் கவனி!' என்று கூறினார்கள்.

அபூதல்ஹா (ரலி) அவர்தம் துணியைத் தம் முகத்தில் போட்டு(மூடி)க் கொண்டு அன்னை ஸஃபிய்யா (ரலி) இருந்த திசையை நோக்கி நடந்து சென்று, அவர்களின் மீது அத்துணியைப் போட்டார். அன்னை ஸஃபிய்யா (ரலி) எழுந்துகொண்டார்கள். பிறகு நபி (ஸல்), அன்னை ஸஃபிய்யா (ரலி) ஆகிய இருவருக்காகவும் அவர்களின் சிவிகையை அபூதல்ஹா (ரலி) கட்டி(ச்சீராக்கி)னார். - அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) - புகாரீ 5968.

மேற்காணும் ஹதீஸிலும் அன்னை ஸஃபிய்யா (ரலி) முகத்தை மூடிக் கொண்டு பயணித்ததாகக் குறிப்பேதுமில்லை. அந்தச் சூழலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஏதும் சொல்லாமலேயே, அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களை நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக நபித்தோழர் அபூதல்ஹா (ரலி) தம் முகத்தில் துணியைப் போட்டுக் கொண்டு போனார்கள் என்பது இறைவசனம் 33:53 கூறும் சரியான ஹிஜாபை, மிகச் சரியாக நினைவு படுத்துகிறது. இங்கும் பெண்களுக்கான முகத்திரை பற்றிப் பேசப்படவில்லை.

சான்று [2:7] ஹதீஸ் :

இந்த நிகழ்வின்போது உதவிக்கு விரைந்தோடி வந்த அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்களிடம், "அவர் உம் அன்னைதாம்" என்று அன்னை ஸஃபிய்யா (ரலி) அவர்களை உரிமையோடு சுட்டி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதும் அப்போது அனஸ் (ரலி) பதின்ம வயதுச் சிறுவர் என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

அன்னை ஆயிஷா (ரலி)

இறைமறையின் 24ஆவது (அந்நூர்) அத்தியாயத்தின் வசனங்களுள் 11-16 வசனங்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறுகளை முறியடிக்க அல்லாஹ்வால் அருளப்பெற்றவையாகும். "நான் தூயவள் என்பதை அல்லாஹ், தன் தூதரின் கனவில் கொண்டுவருவான் என்று எதிர்பார்த்தேனேயன்றி எனக்காகத் தன் வேதத்தில் இடம்கொடுத்து என்னைக் குற்றமற்றவள் என்று அல்லாஹ் நிரூபிப்பான் என்று நான் சற்றும் எதிர்பாக்கவேயில்லை" என்று அன்னை நன்றிநெகிழ்வுடன் கூறினார் என்றாலும் இடைப்பட்ட காலத்தில் அவர் அனுபவித்த மனவேதனைகளை எழுத்தில் வடிக்கவியலாது.

சான்று [2:8] ஹதீஸ் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணம்) புறப்பட விரும்பினால் தம் துணைவியரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது என முடிவு செய்ய) சீட்டுக் குலுக்கிப் போடுவது வழக்கம். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக்கொண்டு செல்வார்கள்.

அவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு போரின்போது எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் என்னுடைய (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன்.

இது ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் (அப்பயணத்தின்போது திரையிடப்பட்ட) என்னுடைய ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்படுவேன்; அதில் நான் அமர்ந்திருக்கும் நிலையிலேயே (கீழே) இறக்கி வைக்கப்படுவேன்.

நபி (ஸல்) அந்தப் போர் முடிந்து (வெற்றியுடன்) திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கியபோது இரவு வேளையில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவித்தார்கள்.

அவர்கள் தங்கும்படி அறிவிப்புச் செய்தபோது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் தேவையை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து (தனியாகச்) சென்றேன். என் (இயற்கைத்) தேவையை முடித்துக்கொண்டபின் படைமுகாமை நோக்கித் திரும்பி வந்தேன்.

அப்போது என் கழுத்தை நான் தொட்டுப் பார்த்தபோது, (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) 'ழஃபாரி' நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டது(தெரியவந்தது). எனவே, நான் (ஒதுங்கிய இடத்திற்குத் திரும்பிச் சென்று) என்னுடைய மாலையைத் தேடலானேன். அதைத் துழாவித் தேடிக்கொண்டிருந்தது, (நான் விரைந்து திரும்பிச் சென்று படையினருடன் சேர்ந்துவிடாமல்) என்னைத் தடுத்துவிட்டது.

எனக்காகச் சிவிகையை ஒட்டகத்தில் கட்டும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக்கொண்டு அதைத் தூக்கிச் சென்று, நான் பயணம் செய்து வந்த ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டார்கள்.

அந்தக் காலகட்டத்தில் பெண்கள் மெலிந்தவர்களாக இருந்தனர். உடல் கனக்குமளவுக்கு அவர்களுக்குச் சதைபோட்டிருக்கவில்லை. (அப்போதையை) பெண் சிறிதளவு உணவையே உண்பாள். எனவே, அந்தச் சிவிகையைத் தூக்கியவர்கள், அது கனமில்லாமல் இருந்ததை உணரவில்லை. மேலும், நான் அப்போது வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன்.

எனவே, அவர்கள் ஒட்டகத்தைக் கிளப்பி (அதில் நானிருப்பதாக நினைத்துக்கொண்டு) நடக்கலாயினர். படை கடந்து சென்ற பிறகு (காணாமல்போன) என்னுடைய கழுத்துமாலை கிடைத்தது. நான் அவர்கள் முகாமிட்டிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்றுவிட்டிருந்தனர்) அங்கு (அவர்களில்) அழைப்பவரும் இருக்கவில்லை; பதிலளிப்பவரும் இருக்கவில்லை. என் சிவிகை இறக்கப்பட்ட இடத்தை நாடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதை அறிந்து படையினர் நிச்சயம் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று கருதினேன். நான் இறக்கப்பட்ட அந்த இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மேலிட்டு, தூங்கி விட்டேன்.

படை சென்றதற்குப் பின்னால் (படையினர் முகாமிட்ட இடத்தில் தவறவிட்டுச் சென்ற பொருள்களைச் சேகரித்துச் செல்வதற்காக) ஸஃப்வான் இப்னு முஅத்தல் அஸ்ஸுலமி அத்தக்வானீ என்பவர் இரவின் பிற்பகுதியில் புறப்பட்டு, நான் இருந்த இடத்திற்கு அருகில் அதிகாலையில் வந்து சேர்ந்தார்.

அவர் (அங்குத்) தூங்கிக்கொண்டிருந்த ஓர் உருவத்தை(என்னை)ப் பார்த்துவிட்டு, என்னை நோக்கி வந்திருக்கிறார். என்னைப் பார்த்ததும் அவர் அடையாளமும் கண்டுகொண்டார். ஹிஜாபுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருக்கிறார்.

அவர் என்னை அறிந்துகொண்டு, "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" (நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம்) என்று  கூறிய அவரது (உரத்த) குரல் கேட்டு நான் கண்விழித்தேன். உடனே (உறக்கத்தில் விலகியிருந்த) என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன்.

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவர் "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்" என்று கூறியதைத் தவிர வேறெதையும் அவரிடமிருந்து நான் செவியேற்கவுமில்லை. பிறகு அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்வதற்கு ஏதுவாக) அதன் முன்னங்கால்களை(த்தம் காலால்) மிதித்துக் கொள்ள, நான் அதில் ஏறிக்கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடந்து வரலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள் ..." - அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ: 4750 ; 2661 ; 4141.

மேற்காணும் ஹதீஸிலும் பெண்கள் வெளியில் செல்லும்போது எப்போதும் முகத்திரை அணிந்து கொண்டிருக்க வேண்டும் எனும் கருத்தைப் பெறமுடியவில்லை. பெண்கள் பயணிக்கும் வாகன (ஒட்டக) முதுகின்மீது வைக்கப்படும் சிவிகைக்கே திரையிடப்படும்; பெண்களின் முகத்துக்கன்று. மேலும் அந்நியரைக் கண்டதும், "என்னுடைய மேலங்கியால் முகத்தை மறைத்துக் கொண்டேன்" என்று அன்னை ஆயிஷா (ரலி) கூறுவதிலிருந்து முகத்தை மூடுவதற்கான 'நிகாப்' எனும் முகத்திரையைப் பயணத்தில் அவர் அணிந்து கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.

சான்று [2:9] ஹதீஸ் :

நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான அல்காசிம் பின் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தோம். அல்காசிம் கொச்சைப் பேச்சுக்காரராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி), "இந்த என் சகோதரரின் மகனைப் போன்று நீ தெளிவாகப் பேசுவதில்லையே ஏன்? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்து கொண்டேன்", "இவரை, இவருடைய தாய் வளர்த்திருக்கிறார்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட அல்காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்கள் மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்குமுன் உணவுத் தட்டு கொண்டு வரப்பட்டபோது அல்காசிம் எழுந்து விட்டார். ஆயிஷா (ரலி) "எங்கே (போகிறாய்)?" என்று கேட்க, அல்காசிம் "நான் தொழப்போகிறேன்" என்றார். ஆயிஷா (ரலி) "உட்கார்!" என்றார்கள். அல்காசிம், "நான் தொழப்போகிறேன்" என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) "அவசரக்காரனே! உட்கார். 'உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர், மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியேற்று இருக்கிறேன்" என்றார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக இப்னு அபீஅத்தீக் (ரஹ்) - முஸ்லிம் 869.

மேற்காணும் நிகழ்வு, அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் வெகுகாலம் கழித்து நடந்ததாகும். இதில், தம் வீட்டுக்கு வருகை தந்த அந்நியர் இருவரைத் தம்மோடு அமர்ந்து உணவு உண்ணுமாறு அன்னை ஆயிஷா (ரலி) வற்புறுத்துகிறார்கள். பெற்ற மகனை ஒரு தாய் அதட்டுவதுபோல் அதட்டுகிறார்கள்.

அன்னை ஸைனப் பின்த் ஜஹ்ஷ் ( زينب بنت جحش ரலி) - ஹிஜாப் இறைவசனத்தின் பின்னணியில்

அன்னை ஸைனப் (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அத்தையான உமைமா பின்த் அப்துல் முத்தலிப் (ரலி) அவர்களின் மகளாவார். அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குப் பெற்றோர் இட்ட பெயர் பர்ரா ( بَرَّةَ நன்மையானவள்) என்பதாகும். அன்னையின் பெயரை 'ஸைனப்' என்று நபி (ஸல்) மாற்றினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு ஸைனப் (ரலி) 20 ஆண்டுகள் இளையவர்.

அன்னை கதீஜா (ரலி) அவர்களால் நபி (ஸல்) அவர்களுக்குத் திருமணப் பரிசாக அன்பளிக்கப்பட்ட ஸைத் இப்னு ஹாரிஸா (ரலி) எனும் அடிமையை உடனே விடுதலை செய்து, தம் சொந்த மகனைப்போல அண்ணலார் (ஸல்) வளர்த்து வந்தார்கள். அவர் வாலிப வயதை அடைந்ததும் தம் அத்தை மகளான ஸைனப் (ரலி) அவர்களை ஸைத் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) மணமுடித்து வைத்தார்கள்.

தொடக்கத்திலிருந்தே குரைஷிக்குலப் பெண்ணான ஸைனப் (ரலி) அவர்களின் மேட்டிமைக்கும் முன்னாள் அடிமையான ஸைத் (ரலி) அவர்களின் தாழ்வுணர்ச்சிக்கும் ஒத்துப் போகவில்லை.

விவகாரம் முற்றிப்போய், ஸைத் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "ஸைனபிடமிருந்து நான் பிரிந்துவிடவே விரும்புகிறேன்" என உறுதியாகக் கூறியபோது, நபி (ஸல்) அவர்களுக்குப் புரிந்துவிட்டது. இதற்குமேல் சரிப்பட்டு வராது என்று தெரிந்துவிட்டது. என்றாலும் மக்களின் எள்ளலுக்கு அஞ்சியவர்களாக, "அவ்வாறு செய்யாதே!" என நபி (ஸல்) அவர்கள் ஸைத் (ரலி) அவர்களைத் தடுத்தார்கள். ஆனால், அல்லாஹ்வின் ஏற்பாடு அதற்கு எதிராக - வேறுவிதமாக - இருந்தது:

وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِّنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا ...

(நபியே!) அல்லாஹ் அருள்புரிந்து, நீங்களும் அருள்புரிந்தவரிடத்தில், "அல்லாஹ்வுக்கு அஞ்சி, நீர் உம் மனைவியை (மணவிலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்" என்று நீங்கள் சொன்னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்கு அஞ்சி, நீங்கள் உங்கள் உள்ளத்துக்குள் ஒளித்து வைத்திருந்தீர்கள்.  ஆனால் அல்லாஹ்தான் நீங்கள் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன். ஆகவே, ஸைது அவளை மணவிலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம் ..." அல்குர்ஆன் (33:37).

பிற்றைய காலத்தில், "பிற பெண்களுக்கெல்லாம் அவர்தம் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து இந்த பூமியில் வைத்துத் திருமணம் செய்து கொடுத்தனர். தன் தூதரை எனக்குக் கணவராகத் தேர்ந்தெடுத்து, ஏழுவான்களுக்கு மேலிருந்து அல்லாஹ் என் திருமணத்தை நடத்தி வைத்தான்" எனப் பெருமை பொங்கக் கூறுபவராக அன்னை ஸைனப் (ரலி) திகழ்ந்தார் - புகாரீ 7420.

இந்தத் திருமணத்தின்போதுதான் ஹதீஸ்களிலும் வரலாற்றிலும் "ஹிஜாபுடைய வசனம்" எனக் குறிக்கப்படும் (33:53) வசனம் இறக்கியருளப் பெற்றது. ஹிஜாபுடைய வசனம் எனப்படுவது முகத்திரை பற்றியதா? எனப் பார்ப்போம்.

சான்று [2:9] ஹதீஸ் :

நபி (ஸல்), ரொட்டியும் இறைச்சியும் விருந்தாக அளித்து, ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். (வலீமா விருந்து) உணவுக்காக மக்களை அழைப்பதற்கு நான் அனுப்பப்பட்டேன். ஒரு குழுவினர் வருவார்கள்; உண்பார்கள்; புறப்பட்டுவிடுவார்கள். பிறகு, மற்றொரு குழுவினர் வருவார்கள்; உண்பார்கள்; போய்விடுவார்கள்.

இனி அழைப்பதற்கு ஒருவரும் இல்லை என்பதுவரை நான் மக்களை அழைத்துவிட்டேன். பிறகு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அழைப்பதற்கு இனி ஒருவரும் இல்லை' என்றேன். அவர்கள், 'உங்களுக்கான உணவை எடுத்துச் செல்லுங்கள்!' என்றார்கள். (விருந்து முடிந்தும்) மூன்றுபேர் மட்டும் (நேரம் போவது தெரியாமல்) வீட்டில் பேசிக்கொண்டே இருந்துவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்குச் சென்று 'இல்லத்தாரே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் - உங்களின்மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்!' என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி), 'வஅலைக்குமுஸ்ஸலாம், வரஹ்மத்துல்லாஹ் - தங்களின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்! தங்களின் (புதிய) துணைவியார் எப்படி இருக்கிறார்? பாரக்கல்லாஹ்! - அல்லாஹ் தங்களுக்கு வளவாழ்வு வழங்கட்டும்!' என்று (மணவாழ்த்துக்) கூறினார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியர் அனைவரின் அறைகளையும் தேடிச்சென்று ஆயிஷா (ரலி) அவர்களுக்குச் சொன்னது போன்றே, (முகமன்) சொல்ல, அவர்களும் ஆயிஷா (ரலி) கூறியது போன்றே (பிரதி முகமனும் மணவாழ்த்தும்) கூறினார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் (புதுமணப்பெண் ஸைனப் அவர்களிடம்) திரும்பிவர, அப்போதும் வீட்டில் அந்த மூன்று பேரும் பேசிக்கொண்டிருந்தனர். நபி (ஸல்) அவர்களோ அதிக கூச்ச(சுபாவ)ம் உடையவர்களாய் இருந்தார்கள். எனவே, (விருந்தினர்களைச் சீக்கிரம் எழுந்துபோகச் சொல்லாமல், மீண்டும்) ஆயிஷா (ரலி) அவர்களின் அறைய நோக்கி நடந்தபடி புறப்பட்டார்கள். (இறுதியாக) அந்த மூவரும் வெளியேறினர். அதை நான் அவர்களுக்குத் தெரிவித்தேனா? (யார் மூலமாவது) தெரிவிக்கப்பட்டதா? என்று எனக்கு (சரியாக) நினைவில்லை. (அதை அறிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள் (ஸைனபின் இல்லத்துக்குத்) திரும்பி வந்தார்கள். அவர்கள் ஒருகாலை (அறையின்) வாசல்படியிலும் மற்றொன்றை வெளியேயும் வைத்தபோது, எனக்கும் தமக்குமிடையே திரையைத் தொங்கவிட்டார்கள். (அப்போதுதான்)

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتَ النَّبِيِّ إِلَّا أَن يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانتَشِرُوا وَلَا مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِي النَّبِيَّ فَيَسْتَحْيِي مِنكُمْ وَاللَّهُ لَا يَسْتَحْيِي مِنَ الْحَقِّ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء حِجَابٍ ...

"இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் விருந்துண்ண அழைக்கப்பட்டாலேயன்றி, நபியுடைய வீடுகளில் நுழையாதீர்கள். (அழைக்கப்பட்டாலும்) முன்னதாகச் சென்று, (சமையலாகும்) பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டு (காத்துக்) கிடக்காதீர்கள். நீங்கள் அழைக்கப்பட்டால் சென்று, விருந்துண்டு முடித்துவிட்டால் (விரைந்து) கலைந்துபோய் விடுங்கள்; (அங்கேயே) அமர்ந்து, (உங்கள்) பேச்சுகளில் மெய்மறந்து விடாதீர்கள். நிச்சயமாக அது நபிக்குச் சங்கடமளிக்கும். அதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார். ஆனால் உண்மையைக்கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. (நபியுடைய மனைவியரான) அவர்களிடம் ஏதாவது கேட்பதாயின், திரைக்கு இப்பாலிருந்தே கேளுங்கள் ..." எனும் ஹிஜாப் தொடர்பான இறைவசனம் (33:53) அருளப்பெற்றது - அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) - புகாரீ: 4791, 4792, 4793, 4794, 5166, 5466, 6238, 6239, 6271.

"ஹிஜாபுடைய சட்டத்தைக் கூறும் இறைவசனம்" எனக் குறிக்கப்படும் மேற்காணும் (33:53) வசனத்திலோ இந்த வசனத்துக்கு விளக்கமான புகாரீ ஹதீஸ் பதிவிலான மேற்காணும் 9 அறிவிப்புகளிலோ இன்னபிற ஹதீஸ்களிலோ முகத்திரை பற்றிப் பேசப்படவேயில்லை. மாறாக, வீட்டின் அறைகளுக்குப் போடப்படும் திரைச்சீலை பற்றிய விபரம்தான் கூறப்படுகிறது. இதன்மூலம் ஹிஜாப் என்பது இந்த இடத்தைப் பொருத்த மட்டில், இல்லத்தில் பயன்படும் திரைதானேயன்றி முகத்தை மறைக்கும் துணியல்ல என்று தெள்ளென விளங்குகிறது.

oOo

[3] நபித்தோழர்கள்/தோழியர

சான்று [3:1] ஹதீஸ்

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ لَا قَالَ فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّ فِي أَعْيُنِ الْأَنْصَارِ شَيْئًا

நான் நபி (ஸல்) அவர்களோடு (அவையில்) இருந்த(ஒரு)போது அவர்களிடம் ஒருவர் வந்து, தாம் அன்சாரிப் பெண்களுள் ஒருவரை மணமுடிக்கப் போவதாகத் தெரிவித்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டீரா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் "இல்லை" என்றார். "அவ்வாறாயின், நீர் சென்று அவளைப் பார்த்துக்கொள்வீராக! ஏனெனில், அன்சாரி(ப்பெண்)களின் கண்களில் (குறை) ஒன்றுண்டு'' என்று சொன்னார்கள் - அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) - முஸ்லிம் 2783.

அன்ஸாரிப் பெண்களில் பெரும்பாலோருக்குக் கண்கள் சற்றே சிறுத்தும் விழிகளில் நீலநிறம் கலந்துமிருக்கும். முகத்தைத் திரையிடாமல் திறந்திருந்தால் மட்டுமே அந்தக் குறையை அறியமுடியும். மேலும், முகத்திரை(நிகாப்) அணிந்து முழுக்க மூடியுள்ள பெண்களின் கண்களைப் பார்க்க முடியாது.

சான்று [3:2] ஹதீஸ் :

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِيُّ حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ح وَحَدَّثَنَاه قُتَيْبَةُ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ عَنْ أَبِيهِ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ أَهَبُ لَكَ نَفْسِي فَنَظَرَ إِلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَعَّدَ النَّظَرَ فِيهَا وَصَوَّبَهُ ثُمَّ طَأْطَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ فَلَمَّا رَأَتْ الْمَرْأَةُ أَنَّهُ لَمْ يَقْضِ فِيهَا شَيْئًا جَلَسَتْ فَقَامَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنْ لَمْ يَكُنْ لَكَ بِهَا حَاجَةٌ فَزَوِّجْنِيهَا ...

ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு என்னையே அளிக்க வந்துள்ளேன்'' என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்)ப்பெண்ணை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டுப் பார்வையைத் தாழ்த்தியபின் தமது தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் விஷயத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அந்தப் பெண்மணி (அந்த அவையில்) அமர்ந்துகொண்டார்.

அப்போது நபித்தோழர்களில் ஒருவர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இப்பெண் தேவையில்லையென்றால், இவரை எனக்கு மணமுடித்துவையுங்கள்'' என்றார் ... அறிவிப்பாளர்: ஸஹ்லிப்னு ஸஅத் அஸ்ஸாயிதீ (ரலி) - முஸ்லிம் 2785.

அந்த அவையில் இருந்த நபித்தோழர்கள் உட்பட அனைவரும் பார்க்கும் வண்ணம் முகத்திரை இன்றியே அப்பெண் அங்கு வந்திருக்கிறார் என்பதை, அவரைப் பார்த்து விரும்பிய நபித்தோழரின் சொற்களிலிருந்து அறிய முடிகிறது. திறந்த முகத்துடன் அவைக்கு வந்த அப்பெண்ணை நிமிர்ந்து பார்த்த நபி (ஸல்), "முகத்தை மூடிக்கொள்" என்று கட்டளையிடவில்லை.

பின்னர், அப்பெண்ணை விரும்பிய நபித்தோழருக்கு அவர் மனனமிட்டிருந்த குர்ஆன் வசனங்களை மஹராக்கி, நபி (ஸல்) அவர்கள் மணம் செய்து கொடுத்தார்கள்.

சான்று [3:3] ஹதீஸ் :

وعن عمار بن ياسر رضي الله عنهما: أن رجلاً مرت به امرأة فأحدق بصره إليها. فمر بجدار، فمرس وجهه، فأتى رسول الله -صلى الله عليه وسلم-، ووجهه يسيل دمًا. فقال: يا رسول الله إني فعلت كذا وكذا. فقال رسول الله -صلى الله عليه وسلم-: "إذا أراد الله بعبد خيرًا عجل عقوبة ذنبه في الدنيا، وإذا أراد به غير ذلك أمهل عليه بذنوبه، حتى يوافي بها يوم القيامة، كأنه عَيْر

ஒருவர், ஒரு பெண்ணைக் கடந்து செல்லும்போது (அவளது அழகால் ஈர்க்கப்பட்டு) அவள்மீது வைத்த பார்வையை எடுக்காமல் நடந்து சென்றதில் ஒரு சுவரில்போய் முட்டிக் கொண்டார். அவரது முகம் முழுக்க இரத்தமானது. அந்த இரத்தக் கோலத்தோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தான் நடந்து கொண்டதைப் பற்றி விவரித்தார். அதற்கு, "அல்லாஹ் தன் அடியாருக்கு நலன் நாடினால் அவருடைய பாவத்துக்கு இவ்வுலகிலேயே விரைவாக அவரைத் தண்டித்து விடுகிறான். அவ்வாறின்றி மறுமை விசாரணைவரையில் அப்பாவத்துக்குத் தவணை அளிக்க விரும்பினால் அவரைக் கழுதையைப்போல் (பாவப்பொதி) சுமக்க வைத்து விடுகிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸர் (ரலி) - அஸ்ஸவாயித் 10/192.

அந்த அழகி, முகத்திரை அணியாமல் பொதுவிடத்துக்கு வந்திருந்தால் மட்டுமே இந்நிகழ்வு சாத்தியமாகும்.

சான்று [3:4] ஹதீஸ் :

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ الْمِصْرِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْهَادِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏يَا ‏ ‏مَعْشَرَ ‏ ‏النِّسَاءِ تَصَدَّقْنَ وَأَكْثِرْنَ ‏ ‏الِاسْتِغْفَارَ فَإِنِّي رَأَيْتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقَالَتْ امْرَأَةٌ مِنْهُنَّ ‏ ‏جَزْلَةٌ ‏ ‏وَمَا لَنَا يَا رَسُولَ اللَّهِ أَكْثَرَ أَهْلِ النَّارِ قَالَ تُكْثِرْنَ اللَّعْنَ ‏ ‏وَتَكْفُرْنَ ‏ ‏الْعَشِيرَ ‏ ‏وَمَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَغْلَبَ لِذِي ‏ ‏لُبٍّ ‏ ‏مِنْكُنَّ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ وَمَا نُقْصَانُ الْعَقْلِ وَالدِّينِ قَالَ أَمَّا نُقْصَانُ الْعَقْلِ فَشَهَادَةُ امْرَأَتَيْنِ تَعْدِلُ شَهَادَةَ رَجُلٍ فَهَذَا نُقْصَانُ الْعَقْلِ وَتَمْكُثُ اللَّيَالِي مَا تُصَلِّي وَتُفْطِرُ فِي رَمَضَانَ فَهَذَا نُقْصَانُ الدِّينِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள் உரையாற்றும்போது), "பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் (அதிகம்) செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை (விண்ணேற்றத்தின்போது) நான் கண்டேன்" என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, “நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கான காரணம் என்ன? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்து கொள்கிறீர்கள்; அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும் அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக் கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் பார்த்ததில்லை" என்று பதிலளித்தார்கள்.

அப்பெண்மணி, "அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகர் என்பது (பெண்களின்) அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாட்கள் அவள் தொழுவதில்லை; ரமளானில் (மாதவிடாய் ஏற்பட்டால்) நோன்பு நோற்பதுமில்லை. இது (பெண்களின்) மார்க்கத்திலுள்ள குறைபாடு" என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) - முஸ்லிம் 114.

நபி (ஸல்) அறிவுரை கூறியது ஒரு பெருநாளின் தொழுகைக்குப் பின்னர் என்று மேற்கண்ட ஹதீஸைப் போன்ற ஸஹீஹ் முஸ்லிமின் கீழ்க்காணும் இன்னொரு அறிவிப்புத் தெளிவாக்குகிறது:

صحيح مسلم بشرح النووي - فقامت امرأة من سطة النساء سفعاء الخدين فقالت لم يا رسول الله قال لأنكن تكثرن الشكاة وتكفرن العشير قال فجعلن يتصدقن من حليهن يلقين في ثوب بلال من أقرطتهن وخواتمهن

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي سُلَيْمَانَ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ شَهِدْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ يَوْمَ الْعِيدِ فَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ بِغَيْرِ أَذَانٍ وَلَا إِقَامَةٍ ثُمَّ قَامَ مُتَوَكِّئًا عَلَى بِلَالٍ فَأَمَرَ بِتَقْوَى اللَّهِ وَحَثَّ عَلَى طَاعَتِهِ وَوَعَظَ النَّاسَ وَذَكَّرَهُمْ ثُمَّ مَضَى حَتَّى أَتَى النِّسَاءَ فَوَعَظَهُنَّ وَذَكَّرَهُنَّ فَقَالَ تَصَدَّقْنَ فَإِنَّ أَكْثَرَكُنَّ حَطَبُ جَهَنَّمَ فَقَامَتْ امْرَأَةٌ مِنْ سِطَةِ النِّسَاءِ سَفْعَاءُ الْخَدَّيْنِ فَقَالَتْ لِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّكُنَّ تُكْثِرْنَ الشَّكَاةَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ قَالَ فَجَعَلْنَ يَتَصَدَّقْنَ مِنْ حُلِيِّهِنَّ يُلْقِينَ فِي ثَوْبِ بِلَالٍ مِنْ أَقْرِطَتِهِنَّ وَخَوَاتِمِهِنَّ

அத்துடன், "அல்லாஹ்வின் தூதரிடம் கேள்வி கேட்ட பெண், உப்பிய-கருத்த கன்னங்களை உடையவராக இருந்தார்" என்று அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) குறிப்பிட்டுள்ள மேற்காணும் ஹதீஸ் தரும் கூடுதல் தகவலின் அடிப்படையில், பெருநாள் தொழுகைக்குப் பொது இடத்துக்கு வந்த அந்த நபித்தோழி, முகத்தை மறைத்துக் கொண்டு வரவில்லை என்று விளங்க முடிகிறது. முகத்தை மூடியிருந்தால் கன்னங்களைக் கண்டு, அதன் நிறத்தைப் பிறருக்கு எடுத்துக்கூற முடியாது. அப்பெண்மணிக்கு விளக்கமளித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரை முகத்தை மூடிக்கொள்ளுமாறு கட்டளையிடவில்லை.

சான்று [3:5] ஹதீஸ் :

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னும் பின்னும் எதையும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால் (ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி (ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் (கழட்டிப்) போடலானார்கள். அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) - புகாரீ 964.

இந்த ஹதீஸ், அந்நியரான பிலால் (ரலி) தம் ஆடையை ஏந்திக் கொள்ள, நபித்தோழியர் தம் ஆபரணங்களைக் கழட்டிப் போட்டனர் என்று புகாரீயில் பதிவாகியுள்ளது.

சான்று [3:6] ஹதீஸ் :

"... நான் நபி(ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா?" என நான் கேட்டதற்கு, "அவளுடைய தோழி தன்னுடைய உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்" என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : உம்மு அதிய்யா (ரலி) - புகாரீ 324.

இந்த ஹதீஸின் கேள்வி-பதில் இரண்டும் வெளியில் செல்லும்போது 'மேலங்கி'யைப் பற்றியே பேசுகிறது.  'முகத்திரை'யைப் பற்றிக் கேள்வியிலும் பதிலிலும் எவ்விதக் குறிப்பும் இல்லையாதலால், பெண்கள் வெளியில் செல்லும்போது கூடுதலாக மேலங்கிதான் தேவையே அன்றி முகத்திரையன்று என்பதை விளக்குகிறது.

சான்று [3:7] ஹதீஸ் :

حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا فُلَيْحٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الصُّبْحَ بِغَلَسٍ فَيَنْصَرِفْنَ نِسَاءُ الْمُؤْمِنِينَ لَا يُعْرَفْنَ مِنْ الْغَلَسِ أَوْ لَا يَعْرِفُ بَعْضُهُنَّ بَعْضًا

நபி (ஸல்) அவர்கள் ஸுபுஹுத் தொழுகையை இருட்டில் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் (அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் இல்லம்) திரும்புவார்கள். இருட்டின் காரணத்தால் அவர்கள் (யாரென) அறியப்பட மாட்டார்கள். அவர்கள் ஒருவரையொருவர் அறிய மாட்டார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) - புகாரீ 872.

மேற்காணும் ஹதீஸில், இருளின் காரணத்தால் நபித்தோழியரை அறிய முடியாது எனக் குறிப்பிட்டிருப்பதால், பகலாக இருந்தால் அறிந்து கொள்ள முடியும் என விளங்க முடிகிறது.

இந்த ஹதீஸை,

وَقَالَ الْبَاجِيُّ : هَذَا يَدُلُّ عَلَى أَنَّهُنَّ كُنَّ سَافِرَاتٍ إِذْ لَوْ كُنَّ مُتَنَقِّبَاتٍ لَمَنَعَ تَغْطِيَةُ الْوَجْهِ مِنْ مَعْرِفَتِهِنَّ لَا الْغَلَسُ

"பள்ளிக்கு வந்து போகும் பெண்கள் முகத்திரை (நிகாப்) அணிந்து கொண்டிருக்கவில்லை என்பதற்குச் சான்றாகக் கொள்ளலாம்" என அல்பாஜி (ரஹ்) கூறுவதாக, புகாரீயின் விரிவுரையில் இமாம் அஸ்கலானீ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

சான்று [3:8] ஹதீஸ் :

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ الْحُدَّانِيُّ عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ عَنْ أَبِي الْجَوْزَاءِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَتْ امْرَأَةٌ تُصَلِّي خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَسْنَاءَ مِنْ أَحْسَنِ النَّاسِ فَكَانَ بَعْضُ الْقَوْمِ يَتَقَدَّمُ حَتَّى يَكُونَ فِي الصَّفِّ الْأَوَّلِ لِئَلَّا يَرَاهَا وَيَسْتَأْخِرُ بَعْضُهُمْ حَتَّى يَكُونَ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ فَإِذَا رَكَعَ نَظَرَ مِنْ تَحْتِ إِبْطَيْهِ

அல்லாஹ்வின் தூதரின் (ஒரு) தொழுகையின் (கடைசி) வரிசையில் பெண்களுள் பேரழகுப்பெண் ஒருத்தி தொழுதாள். முன்வரிசைகளில் இருந்த ஆண்களில் சிலர் அவளைப் பார்க்கும் ஆவலில் கடைசி வரிசைக்கு வந்தனர். ருகூஉக்குச் செல்லும்போது தம்மிரு முழங்கால்களின் இடையினூடாக அவளைப் பார்த்தனர்... அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி) - திர்மிதீ 3122.

சான்று [3:9] ஹதீஸ் :

وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَحَرْمَلَةُ بْنُ يَحْيَى وَتَقَارَبَا فِي اللَّفْظِ قَالَ حَرْمَلَةُ حَدَّثَنَا وَقَالَ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ حَدَّثَنِي يُونُسُ بْنُ يَزِيدَ عَنْ ابْنِ شِهَابٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ أَبَاهُ كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ يَأْمُرُهُ أَنْ يَدْخُلَ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ فَيَسْأَلَهَا عَنْ حَدِيثِهَا وَعَمَّا قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ اسْتَفْتَتْهُ فَكَتَبَ عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ يُخْبِرُهُ أَنَّ سُبَيْعَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ وَهُوَ فِي بَنِي عَامِرِ بْنِ لُؤَيٍّ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ وَهِيَ حَامِلٌ فَلَمْ تَنْشَبْ أَنْ وَضَعَتْ حَمْلَهَا بَعْدَ وَفَاتِهِ فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا تَجَمَّلَتْ لِلْخُطَّابِ فَدَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ فَقَالَ لَهَا مَا لِي أَرَاكِ مُتَجَمِّلَةً لَعَلَّكِ تَرْجِينَ النِّكَاحَ إِنَّكِ وَاللَّهِ مَا أَنْتِ بِنَاكِحٍ حَتَّى تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرٌ قَالَتْ سُبَيْعَةُ فَلَمَّا قَالَ لِي ذَلِكَ جَمَعْتُ عَلَيَّ ثِيَابِي حِينَ أَمْسَيْتُ فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ عَنْ ذَلِكَ فَأَفْتَانِي بِأَنِّي قَدْ حَلَلْتُ حِينَ وَضَعْتُ حَمْلِي وَأَمَرَنِي بِالتَّزَوُّجِ إِنْ بَدَا لِي قَالَ ابْنُ شِهَابٍ فَلَا أَرَى بَأْسًا أَنْ تَتَزَوَّجَ حِينَ وَضَعَتْ وَإِنْ كَانَتْ فِي دَمِهَا غَيْرَ أَنْ لَا يَقْرَبُهَا زَوْجُهَا حَتَّى تَطْهُرَ

"என் தந்தையான அப்துல்லாஹ் பின் உத்பா, உமர் பின் அப்தில்லாஹ் பின் அர்கம் அஸ்ஸுஹ்ரீ அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், அல் அஸ்லமிய்யாவின் மகள் ஸுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்டது பற்றியும் அதற்கு நபி (ஸல்) அளித்த தீர்ப்பு என்ன என்பது பற்றியும் (விபரம்) கேட்டு எழுதுமாறு பணித்திருந்தார்கள். (அதன்படி, ஸுபைஆ அவர்களிடம் சென்று) உமர் பின் அப்தில்லாஹ் (கேட்டறிந்து, என் தந்தை) அப்துல்லாஹ் பின் உத்பா அவர்களுக்கு(ப் பின்வருமாறு பதில்) செய்தி அனுப்பினார்கள்" என்று உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்கள் :

அல்ஹாரிஸின் மகள் ஸுபைஆ (ரலி), பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தைச் சேர்ந்தவரும் பத்ருப் போராளியுமான ஸஅத் பின் கவ்லா (ரலி) அவர்களை மணம் புரிந்திருந்தார்.

விடைபெறும் ஹஜ்ஜின்போது ஸஅத் (ரலி) இறந்து விட்டார்கள். அப்போது ஸுபைஆ (ரலி) நிறைமாத சூலியாயிருந்தார். ஸஅத் (ரலி) இறந்து (இரண்டொரு இரவு) குறுகிய காலத்துக்குள் ஸுபைஆ (ரலி) பிரசவித்து விட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப்போக்கிலிருந்து ஸுபைஆ (ரலி) தூய்மையான பின்னர், பெண்பேச வருபவர்களுக்காகத் தன்னை அலங்கரித்துக் கொண்டார்.

அப்போது, பனூ அப்தித் தார் குலத்தவரான அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக் (ரலி), ஸுபைஆ (ரலி) அவர்களிடம் வந்து, ''திருமணம் புரியும் ஆசையில் பெண்பேச வருபவர்களுக்காக உங்களை நீங்கள் அலங்கரித்திருப்பதை நான் காண்கின்றேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (கணவன் இறந்த ஒரு பெண் அவனது இறப்புக்குப்பின் காத்திருக்க வேண்டிய 'இத்தா' காலமாகிய) நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று கூறினார்கள்.

ஸுபைஆ (ரலி) கூறுகிறார்கள்:

இதை அபுஸ்ஸனாபில் என்னிடம் சொன்னதையடுத்து நான் மாலைநேரத்தில் (வெளியில் செல்லும்போது அணியும்) எனது உடையை உடுத்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களிடத்தில் இது பற்றிக் கேட்டேன். அதற்கு, "நீ பிரசவித்து விட்டபோதே (மணம் புரிந்து கொள்ள) அனுமதிக்கப்பட்டவளாக ஆகிவிட்டாய். நீ விரும்பினால் (மறு)மணம் செய்துகொள்" என்று நபி (ஸல்) அவர்கள் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள் - புகாரீ 3991.

ஸுபைஆ (ரலி) கண்ணுக்கு சுர்மா இட்டிருந்ததாகவும் கையில் மருதாணி பூசியிருந்ததாகவும் அதை அந்நியரான அபுஸ்ஸனாபில் பார்த்துவிட்டு நபியவர்களிடம் வந்து கூறியதாவும் அஹ்மதில் இடம்பெற்றுள்ள  26166, 26167 எண்ணிட்ட ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன. "நான்கு மாதம் பத்து நாட்கள் முடியும் வரையில் நீங்கள் (மறு)மணம் புரிந்து கொள்ள முடியாது'' என்று அறிவுறுத்துவதிலிருந்து அபுஸ்ஸனாபில் (ரலி), ஸுபைஆ (ரலி) அவர்களைத் திருமணம் பேசும் நோக்கில் அங்குச் செல்லவில்லை என்பதை அறிய முடிகிறது. கண்ணுக்கு சுர்மா இட்டு, கைகளில் மருதாணி இட்டு, அதை அந்நியரான அபுஸ்ஸனாபில் (ரலி) பார்க்கும் வகையில் தோற்றமளித்த ஸுபைஆ (ரலி) அவர்களைப் பற்றி அவர் விவரித்துக் கூறிய பின்னரும் நபி (ஸல்), விதவை ஸுபைஆ (ரலி) அவர்களைக் கண்டிக்கவில்லை என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

எனவே ஒரு முஸ்லிம் பெண் தனது முகத்தையும் தனது முன் கையையும் வெளிப்படுத்திக் கொள்ள இந்த ஹதீஸ் தெளிவான ஆதாரமாக அமைந்துள்ளது. மேலும் இந்நிகழ்வு, ஹிஜாபுடைய வசனம் அருளப்பெற்று ஐந்தாண்டுக்குப் பின்னர், ஹஜ்ஜத்துல் விதாவுக்கும் பின்னர் நடந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

oOo

எனில்,

அல்லாஹ்வின் தூதருடைய காலத்துப் பெண்கள் யாருமே முகத்திரை(நிகாப்) அணிந்து முகத்தை மூடிக் கொண்டிருந்த ஹதீஸே இல்லையா எனும் கேள்வி எழும்.

[4] நபித்தோழியரின் முகத்திரை(நிகாப்)

சான்று [4:1] ஹதீஸ் :

மக்கத்து வெற்றியை அடுத்து, நபி (ஸல்), ஆண்களிடம் பைஅத் பெற்ற பின்பு பெண்களிடம் பைஅத் வாங்கினார்கள். அப்போது நபி (ஸல்) ஸஃபாவின் மீது அமர்ந்திருந்தார்கள். அதற்குக் கீழே உமர் (ரலி)  அமர்ந்திருந்தார்கள். நபி (ஸல்) ஒவ்வொரு விஷயமாகக் கூற, அதனை உமர் (ரலி) அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்நேரத்தில் அபூஸுஃப்யானின் மனைவியான ஹிந்த் பின்த் உத்பா, நபியவர்களிடம் வந்தார். உஹுதுப் போரில் வீரமரணம் எய்திய ஹம்ஸா (ரலி) உடைய உடலைச் சின்னாபின்னமாக்கிய தனது செயலுக்கு நபி (ஸல்) என்ன செய்வார்களோ என்று அஞ்சியதால் தன்னை முழுதும் மறைத்துக் கொண்டு வந்தார் ஹிந்த். நபி (ஸல்) "நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டீர்கள் என்று எனக்கு வாக்குத் தரவேண்டும்" என்று கூற, உமர் (ரலி) பெண்களுக்கு அதை எடுத்துரைத்தார்கள். அடுத்து, "நீங்கள் திருடக் கூடாது" என்றார்கள். அதற்கு, "அபூஸுஃப்யான் ஒரு கஞ்சன். நான் அவருடைய பொருளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா?" என ஹிந்த் வினவினார். "நீ எதனை எடுத்துக் கொண்டாயோ அது உனக்கு ஆகுமானதே" என்று அபூஸுஃப்யான் (இடைமறித்துக்) கூறினார்.

நபி (ஸல்) அவ்விருவரின் உரையாடலைக் கேட்டுப் புன்னகை புரிந்தவர்களாக, "நிச்சமாக, நீ ஹிந்த்தானே?" என்று கேட்டார்கள். அதற்கவர், "ஆம்! நான் ஹிந்த்தான். சென்றுபோன என்னுடைய பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வும் தங்களைப் பொறுத்தருள்வான்!" என்று கூறினார். - ரஹீக்.

புகாரீயின் (5364) அறிவிப்பில், "உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!" என்று நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள் என்ற குறிப்பு உள்ளது.

நபி (ஸல்) மீதிருந்த அச்சத்தின் காரணமாக ஹிந்த், தம்மை முழுதும் மூடிக் கொண்டு அவைக்கு வந்தார் என்ற செய்தி, காரணத்துடன் பதிவாகியுள்ளது. அச்சம் தீர்ந்த நிலையில் ஹிந்த் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என்ற ஒரு செய்தியும் பதிவாகியுள்ளது.

சான்று [4:2] ஹதீஸ் :

குரைஷியரின் தலைவனான அபூஜஹல் இஸ்லாத்தின் தலையாய எதிரியாகத் திகழ்ந்தவன். பத்ருப் போரில் அவன் கொல்லப்பட்ட பின்னர் அவனுடைய மகனான இக்ரிமா குரைஷியருக்குத் தலைமை ஏற்கத் தக்கவராகக் கருதப்பட்டார். அகழிப் போரில் அலீ (ரலி) அவர்கள் காட்டிய வீரதீரத்துக்கு முன்னால் நிற்கமுடியாமல் இக்ரிமா அஞ்சி ஓடிப்போனார்.

( وَقَدِمَ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - عَامَ الْفَتْحِ ) لِمَكَّةَ ( فَلَمَّا رَآهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَثَبَ ) بِمُثَلَّثَةٍ فَمُوَحَّدَةٍ ، قَامَ بِسُرْعَةٍ ( فَرَحًا ) بِهِ ، بِفَتْحِ الرَّاءِ وَكَسْرِهَا ( وَمَا عَلَيْهِ رِدَاءٌ ) لِاسْتِعْجَالِهِ بِالْقِيَامِ حِينَ رَآهُ ( حَتَّى بَايَعَهُ ) وَفِي التِّرْمِذِيِّ مِنْ حَدِيثِهِ : " قَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَوْمَ جِئْتُهُ : مَرْحَبًا مَرْحَبًا بِالرَّاكِبِ الْمُهَاجِرِ " . وَعِنْدَ الْبَيْهَقِيِّ عَنِ الزُّهْرِيِّ : " فَوَقَفَ بَيْنَ يَدَيْهِ وَمَعَهُ زَوْجَتُهُ مُنْتَقِبَة ...

மக்கத்து வெற்றியின்போது, நபி (ஸல்), தம்மைத் தண்டிப்பார்கள் என்று அஞ்சி, மக்காவை விட்டே ஓடிப்போய் யமனில் ஒளிந்து கொண்டார் இக்ரிமா. மக்கத்து வெற்றியின்போது நபி (ஸல்) அவர்களின் 'பொது மன்னிப்பு' அறிவிப்பைக் கேள்விப்பட்டு, முஸ்லிமாகிவிட்ட இக்ரிமாவின் மனைவியான உம்மு ஹகீம் (ரலி), தம் கணவரை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துக் கொண்டு வந்தபோது முகத்திரை(நிகாப்) அணிந்து கொண்டு வந்தார் என்ற செய்தி, இபுனு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) வழியாக பைஹகீயில் பதிவாகி உள்ளது.

இதுபோக, கூடுதல் நாணத்தின் காரணமாகவும் பெண்கள் முகத்தை மூடிக் கொண்டு வெளியில் வந்த ஹதீஸும் அதற்கு நபித்தோழர்களின் விமர்சனமும் உண்டு:

ரோமர்கள் மதீனாவின்மீது படையெடுக்கும் முயற்சியில் இருப்பதாக நபி (ஸல்) கேள்விப்பட்டார்கள். அவ்வேளை கைபரில் யூதர்களின் அட்டகாசங்கள் அதிகரித்திருந்தன. அவர்களை அடக்குவதற்காக நபி (ஸல்), முஸ்லிம் படைவீரர்களுடன் கைபருக்குப் புறப்பட்டுச் சென்று கைபரை வெற்றி கொண்டார்கள். கைபரை நபி (ஸல்) வெற்றி கொண்டுவிட்ட செய்தியறிந்து ரோமர்கள் தம் மதீனப் படையெடுப்பைக் கைவிட்டனர் என்று வரலாறு கூறுகிறது.

சான்று [4:3] ஹதீஸ் :

عون المعبود شرح سنن أبي داود - كِتَاب الْجِهَادِ - ابنك له أجر شهيدين قالت ولم ذاك يا رسول الله قال لأنه قتله أهل الكتاب

بَاب فَضْلِ قِتَالِ الرُّومِ عَلَى غَيْرِهِمْ مِنْ الْأُمَمِ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلَّامٍ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ عَنْ فَرَجِ بْنِ فَضَالَةَ عَنْ عَبْدِ الْخَبِيرِ بْنِ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَالُ لَهَا أُمُّ خَلَّادٍ وَهِيَ مُنْتَقِبَةٌ تَسْأَلُ عَنْ ابْنِهَا وَهُوَ مَقْتُولٌ فَقَالَ لَهَا بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِئْتِ تَسْأَلِينَ عَنْ ابْنِكِ وَأَنْتِ مُنْتَقِبَةٌ فَقَالَتْ إِنْ أُرْزَأَ ابْنِي فَلَنْ أُرْزَأَ حَيَائِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنُكِ لَهُ أَجْرُ شَهِيدَيْنِ قَالَتْ وَلِمَ ذَاكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِأَنَّهُ قَتَلَهُ أَهْلُ الْكِتَابِ

கைபர் போரில் கொல்லப்பட்ட ஒரு முஸ்லிம் வீரரின் தாயான உம்மு கல்லாத் (ரலி) என்பவர், தம் மகனின் நிலையை அறிந்து கொள்ள முகத்திரை(நிகாப்) அணிந்து கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவைக்கு வந்தார். நபித்தோழர்களுள் சிலர், "மகனின் நிலையை அறிந்து கொள்வதற்கு வந்திருக்கும் நீ, முகத்தை மறைத்துக் கொண்டு வந்திருக்கிறாயே!" என்று கேட்டனர். அதற்கு, "என் மகனைப் பற்றிய சோகம் போதாதென்று எனது வெட்கத்தை விடும் சோகத்தையும் நான் அடைவதற்கில்லை" என்று அந்தத் தாய் கூறினார். (அவரை அடையாளம் தெரிந்து கொண்டு) "உன் மகன் இரு அறப்போராளிகளின் நன்மையை அடைந்து விட்டார்" என்று நபி (ஸல்) கூறினார்கள். "அது எப்படி?" என்று அந்தத் தாய் வினவ, "வேதம் வழங்கப்பட்டவர்களால் அவர் கொல்லப்பட்டதால்" என்று நபி (ஸல்) விடை பகர்ந்தார்கள். அறிவிப்பாளர் : தாபித் இபுனு கைஸ் (ரலி) - அபூதாவூத் 2482.

கைபர் போர் ஹிஜ்ரீ 7இல் நடைபெற்றது. அதாவது ஹிஜாபுடைய வசனம் அருளப்பெற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்.

ஹிஜாபுடைய வசனத்தின் மூலமாக 'பெண்கள் முகத்தை மூடிக்கொண்டுதான் வெளியில் வரவேண்டும்' என்பது சட்டமாக்கப்பட்டிருந்தால் நபித்தோழர்கள், "முகத்தை ஏன் மூடிக்கொண்டு வந்திருக்கிறாய்?" என்ற ஒரு கேள்வியைக் கேட்டிருக்கவே முடியாது. அப்படியே கேட்டாலும் நபித்தோழர்களுடைய கேள்விக்கு உம்மு கல்லாத் (ரலி) அவர்களின் பதில் "ஹிஜாபுடைய வசனமான அல்லாஹ்வின் வேதச்சட்டப்படி நான் முகத்திரை அணிந்து வந்திருக்கிறேன்" என்பதாக இருந்திருக்கும். ஆனால், உம்மு கல்லாத் (ரலி) அவர்களின் பதில் அவருடைய சொந்த விருப்பத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

இதுபோன்ற இன்னபிற நபித்தோழியர் பற்றிய அறிவிப்புகள் சில உள. அவை அனைத்தும் அவர்தம் சொந்த விருப்பங்களைத் தெரிவிக்கின்றனவேயன்றி, குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் அமைந்த சட்டத்தைச் சுட்டி நிற்கவில்லை.

ஹிஜாபுடைய வசனம் அருளப்பட்டு ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஹஜ்ஜத்துல் விதா நடைபெற்றது. அந்த ஹஜ்ஜின்போது நடந்த நிகழ்வை இங்குக் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும்:

சான்று [4:4] ஹதீஸ் :

"இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் அணிந்திருக்கும்போது எந்த ஆடைகளை நாங்கள் அணிய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடுகிறீர்கள்?' என்று ஒருவர் எழுந்து கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சட்டைகளையும் கால்சட்டைகளையும் தலைப்பாகைகளையும் தொப்பிகளையும் அணியாதீர்கள்! ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கரண்டைக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்! குங்குமப் பூச்சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள்! இஹ்ராம் அணிந்த பெண், முகத்திரை அணியக் கூடாது; அவள் கையுறைகளையும் அணியக் கூடாது!" என்று பதிலளித்தார்கள்.  அறிவிப்பாளர் - இப்னு உமர் - புகாரீ 1838

இந்த ஹதீஸில், நாம் ஆழ்ந்து சிந்தித்துப் பெறத்தக்க சட்டம் ஒன்றுள்ளது. இயல்பு வாழ்வில் அனுமதிக்கப்பட்ட சில நடைமுறைகளும் உடைகளும் இஹ்ராமின்போது தடை செய்யப்படும். காட்டாக, தைக்கப்பட்ட உடைகள், தலைப்பாகை, தொப்பி ஆகியன ஆண்களுக்கு இஹ்ராமின்போது தடை செய்யப் பட்டவையாகும். அதற்கு எதிராக, இயல்பு வாழ்வில் ஹராமாக்கப்பட்ட எதுவும் இஹ்ராமின்போது ஹலால் ஆகிவிடாது. இயல்பு வாழ்க்கையில்  அனுமதிக்கப்பட்டவைதாம் இஹ்ராமிலும் அனுமதிக்கப்படும். இயல்பு வாழ்வில் பெண்கள் தம் முகத்தையும் கைகளையும் வெளிக்காட்டுவது தடுக்கப்பட்டது எனில் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமின்போது ஹலாலாக்க மாட்டார்கள். "இஹ்ராமின்போது பெண்கள் முகத்திரை அணியக்கூடாது; கையுறைகள் அணியக்கூடாது" எனும் அல்லாஹ்வின் தூதரின் கட்டளையிலிருந்து பெண்களின் முகமும் கைகளும் கட்டாயம் மறைக்கப்பட வேண்டியவை அல்ல; இயல்பு வாழ்வில் அவை அனுமதிக்கப் பட்டவைதாம் என்ற தெளிவு நமக்குக் கிடைக்கிறது.

oOo

முடிவுரை

ஹிஜாப் என்பது உடலையோ முகத்தையோ மறைத்துக் கொள்ளும் உடை/துணி மட்டுமன்று. ஹிஜாப் ஆடை என்பது பெண்களின் ஒட்டுமொத்த ஒழுக்கத்துக்கான பகுதிகளுள் ஒன்று.

பார்க்கும் பார்வைக்கு ஹிஜாப் இருக்கிறது:

"(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களுக்கு அவர்கள்தம் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் கூறுவீராக! ..."(24:31).

பேசும் பேச்சுக்கு ஹிஜாப் இருக்கிறது:

"... எனவே, நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி வாழ்வோராயின், (அந்நியருடன் பேசும்) பேச்சில் குழைவு காட்டாதீர்! ..." (33:32).

நடந்து செல்லும் நடைக்கும் ஹிஜாப் இருக்கிறது:

"... தங்களின் மறைவான அலங்காரங்கள் அறியப்படுவதற்காகத் தங்கள் கால்களை(த் தரையில்) தட்டி(க்காட்டி) நடந்து செல்லக்கூடாது ..." (24:31).

'ஹிஜாப்' என்ற பெயரில் முழுக்க உடையணிந்தும் எல்லாம் வெளியில் தெரியப் பொதுவில் வைத்து பவனிவரும் நவநாகரிக நங்கையரை நாம் இன்று நேரில் காண்கிறோம். நபி (ஸல்) அன்றே கூறினார்கள்:

صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

"நரகவாசிகளுள் இருபிரிவினரை நான் பார்த்ததில்லை. மாட்டுவாலைப் போன்ற சாட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு மனிதர்களை அடிப்பவர்கள் (முதல் வகையினர்). ஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்கள் (இரண்டாம் வகையினர்) அவர்கள் தம் பக்கம் (ஆண்களை) ஈர்க்குமாறு தோள்களைச் சாய்த்து(த் தளுக்கிக் குலுக்கி) நடந்து செல்வர். அசைந்தாடும் ஒட்டகத்திமில் போன்ற தலை(முடி)யைக் கொண்ட அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணம் இத்துணை இத்துணை பயண தூரத்தில் கமழ்ந்து கொண்டிருக்கும். ஆனால், அதன் வாடையைக்கூட அவர்கள் நுகரமாட்டார்கள்" - அறிவிப்பாளர் அபூஹுரைரா, முஸ்லிம் 3972(4316) தலைப்பு : (َنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ) "ஆடையணிந்தும் நிர்வாணமான, தோள்களைச் சாய்த்து(த் தளுக்கிக் குலுக்கி) நடக்கும் பெண்கள்".

முழுக்க ஆடை அணிந்திருந்தாலும்

 • உடல் தெரியும் மெல்லிய ஆடைகள் ஹிஜாப் ஆகாது.

 • இறுக்கமாக அணிந்து, திரட்சி காட்டுவது ஹிஜாப் ஆகாது.

 • ஆபாசமான வடிவமைப்பு ஆடைகள் ஹிஜாப் ஆகா.

 • அரைகுறையாகத் தலைமூடுதல் ஹிஜாப் ஆகாது.

 • காதைத் திறந்து தலைமூடுதல் ஹிஜாப் ஆகாது.

 • சில ஊர்களில் புழக்கத்தில் உள்ள 'அரைத் துப்பட்டிகள்' ஹிஜாபைச் சேர்ந்தவையல்ல.

அந்நிய ஆண்களின்முன் தோன்றும்போது பெண்கள்தம் நடை, உடை, பாவனை ஆகிய அனைத்திலும் நல்லொழுக்கத்தை வெளிப்படுத்துதலே நிறைவான கண்ணிய ஹிஜாப் ஆகும்.

முஸ்லிம் சமுதாயப் பெண்கள் எப்போதும் முகத்தைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று நிறுவுவதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதை இங்கு அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எல்லா நாட்டினருக்கும் எந்தக் காலத்தவருக்கும் இயைந்த சட்டங்களைத் தன்னுள்ளே கொண்டிலங்கும் இஸ்லாம், இந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தெளிவான தீர்வு வைத்திருக்கிறதா? எனும் வினாவோடு, சமகால முஸ்லிகளின் பழக்க-வழக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, இஸ்லாத்தின் வேர்களைத் தேடும் முயற்சியே இக்கட்டுரை.

அவற்றுள் தலையாய வேர்:

"...  அவர்கள் (கண்ணியத்திற்கு உரியவர்களாக) அறியப்படுவதற்கும் (பிறரின்) தொல்லைக்கு உள்ளாகாமல் இருப்பதற்கும் இஃது ஏற்றதாகும் ..." (அல்குர்ஆன் 33:59).

யாரென்று அறியப்பட முடியாத, முகம் உட்பட முழுதும் மறைத்துக் கொள்ளும் 'புர்கா' உடையை ஓர் ஆண் அணிந்து கொண்டால்,  'பெண்களுக்கு மட்டும்' இயக்கப்படும் பேருந்துகளிலோ ரயில்பெட்டிகளிலோ பயணிக்கலாம். மாட்டிக் கொள்ளும்வரை பெண்களோடு கலந்து குறும்புகள் செய்யலாம்.

மொத்த சமுதாயத்தையும் சீரழிக்க வந்துள்ள சின்னத்திரை சீரியல்களைப் பார்த்து, 'ஓடிப்போகும்' கலாச்சாரம் தற்போது தமிழகத்தில் பெருகி வருவதை யாரும் மறுக்க முடியாது. முகத்தை முழுமையாக மறைக்கும் நிகாப் அணிந்து கொண்டால், எந்தப் பெண்ணும் எந்த ஆணுடனும் எங்கு வேண்டுமானாலும் நடந்தும் போகலாம்; ஓடியும் போகலாம்.

நீதிமன்றத்துக்கு அபராதம் கட்டுவதற்காக வருகின்ற வாடிக்கை விபச்சாரிகள், கண்ணியம் என்பதாக நாம் கருதும் முகத்தை மூடும் புர்காவை அணிந்து கொண்டு வந்து போகின்றனர்.

உண்மையோ பொய்யோ, இராக்கில் தற்கொலைப் படையினரான ஆண்கள், பெண்கள் பயன்படுத்தும் முகம் மறைக்கும் புர்காவைப் பயன்படுத்திக் கொண்டு, குண்டு வெடிக்கச் செய்வதாகச் செய்திகளில் படிக்கிறோம்.

இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்துக்காக, சங்கீதா என்ற சகோதரி "100 கிலோ வெடிகுண்டுடன் நடமாடும் தீவிரவாதி ஆயிஷா" என்று நான்காண்டுகளுக்கு முன்னர் சித்தரிக்கப் பட்டதையும் அவரைத் தேடுதவதாகக் கூறிக்கொண்டு, "எல்லாத்தையும் தெறந்து காட்டு" என்று நம் முதல்வரின் காவல்துறை, பர்தா அணிந்து கொண்டு வெளியில் வந்த முஸ்லிம் பெண்களை மிரட்டி இழிவு செய்ததையும் நாம் இன்னும் மறந்துவிடவில்லை.

நம் முதல்வரின் மாவட்டமான திருவாரூருக்குள் அடங்குகின்ற, 'முஸ்லிம் ஊர்கள்' என்றே அறியப்படுகின்ற மூன்று ஊர்களுள் ஒன்றில் 6-12 வகுப்புகள்வரை பெண்கள் மட்டும் பயிலும் ஓர் உயர்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியின் நிர்வாகம், "தலையில் முக்காடு போட்டுக் கொண்டு மாணவிகள் பள்ளிக்கு வரக்கூடாது" என்று அண்மையில் கண்டிப்பான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. ஏனெனில், பயிலும் மாணவிகளுள் முக்காலே மூணுவீசம் நம் பெண்பிள்ளைகள் என்றாலும் நிர்வாகம் பிறமதத்தவர் கையில். கல்வி இயக்குநரும் மாவட்ட ஆட்சித் தலைவரும் அவர்களின் கையில்.

பல அமைப்புகளின் இடைவிடாத போராட்டத்துக்குப் பின்னர் - குறிப்பாக, மக்கள் செல்வாக்குப் பெருகி வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீட்டுக்குப் பின்னர் - வெகு அண்மையில் நம் பெண்பிள்ளைகள் 'முக்காடு' போட்டுக் கொண்டு பள்ளிக்குச் செல்வதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

கல்வி கற்றுக் கொள்வதற்காக நம் பெண்கள் படும்பாடு நம் தமிழகத்தோடு நின்றுவிடவில்லை. ஒருகாலத்தில் உலகம் முழுவதற்குமான கிலாஃபத்தாக - இஸ்லாமியப் பேரரசாக விளங்கி, பின்னர் (1920இல்) அந்நிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடியான முஸ்தஃபா கெமாலால் 'மதசார்பற்றதாக' மாற்றப்பட்ட துருக்கியில், பல்கலைக் கழகத்தில் பயில வேண்டுமெனில், "பெண்கள் தம்தலையில் முக்காடு போடக்கூடாது" என்ற 'ஸெக்யூலர்' சட்டம் இன்றைய தேதிவரை நடப்பில் உள்ளது (allowing headscarves at universities by taking into consideration religious belief grounded a public law regulation on religious principles and therefore contradicted the principle of secularism). ஒரு பெண் கல்வி பயிலுவதற்கு அவள் தலையில் இடும் முக்காடு எவ்வாறு தடைக்கல்லாக இருக்கிறது? இது முட்டாள் சட்டமன்றோ? என் நம்பிக்கையோடு வாழும் வாழ்க்கையே எனக்கு உகந்தது (I don't feel I have to comply with what the state says. This is my faith - and I want to live by my faith) எனும் மாணவிகளின் எதிப்புக்குரல் இப்போது அங்கு வலுவடைந்து வருகிறது.

நம் சமுதாயம் - அதிலும் பெண் சமுதாயம் கல்வியில் எவ்வளவு பின்தங்கிக் கிடக்கின்றது? நம் பெண்மக்களுக்கு இன்னும் என்னென்ன வழிகளில் கல்வியூட்டலாம் என்று கவலையும் சிந்தனையும் கொண்டு, அதற்கான வழிமுறைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அறப்போர்களில் பங்கு பெற்ற அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் இனத்தை "அறைக்குள் பூட்டி வைத்தே கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும்" என்பதுபோல் ஒரு சகோதரர் தெரிவித்திருந்த கருத்து உண்மையில் வருத்தத்தைத் தந்தது!

oOo

இதுவரை நாம் படித்த குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், வரலாற்று/சமகால நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து இரண்டு முடிவுகளை நம்மால் பெற முடிகிறது:

 1. பருவமெய்திய முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆடவர்முன் தோன்றும்போது முகத்தை மறைத்துக் கொள்வது இஸ்லாத்தில் கட்டாயமில்லை.

 2. தானாக விரும்பி முகம் முழுவதையுமோ கண்கள் தவிர்த்தோ திரையிட்டுக் கொள்வது பெண்களின் தனிப்பட்ட விருப்பம், உரிமை, சுதந்திரம்.

முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

Comments   
ஷாஃபி
+1 #1 ஷாஃபி 2010-10-22 04:04
மாஷா அல்லாஹ், பெண்களின் ஹிஜாப் பற்றிய தரமானதொரு அலசல் தாய்த் தமிழில். வேற்று மொழிகளில் கூட இப்படியொன்று உள்ளதா எனத் தெரியவில்லை.
Quote | Report to administrator
mohamed mazhar
0 #2 mohamed mazhar 2010-10-22 14:15
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஒருவருக்கு பர்ளான நோன்போ அல்லது நேர்ச்சையான நோன்போ இருந்தால் எவ்வளவு கால எல்லைக்குள் பிடிக்க வேண்டும். கால எல்லையை தான்டி பிடித்தால் என்ன குற்ற பரிகாரம் செய்ய வேண்டும்.
Quote | Report to administrator
குலாம்
0 #3 குலாம் 2010-10-22 16:10
அஸ்ஸலாமு அலைக்கும்,

வல்ல ரஹ்மான் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும ் அதிக நேரத்தையும் மேலும் சாந்தியையும் சமாதானத்தையும் அருள்புரிவானாக.

அற்புதமான, மிகத்தெளிவான ஆய்வு. இதேபோல் பிரச்சினைக்குரி ய ஜக்காத்திற்கும் ஒரு தெளிவான ஆய்வை பதிய கேட்டுக்கொள்கிறேன்.

குலாம்
Quote | Report to administrator
முஇ
+1 #4 முஇ 2010-10-22 19:56
முதல்பார்வையை இயல்புக்கு மாற்றமாக நீட்டிப்பதால் விளையும் இம்மை/மறுமை தண்டனையைத் தெள்ளென விளக்கும் நபிமொழி.

وعن عمار بن ياسر رضي الله عنهما: أن رجلاً مرت به امرأة فأحدق بصره إليها. فمر بجدار، فمرس وجهه، فأتى رسول الله -صلى الله عليه وسلم-، ووجهه يسيل دمًا. فقال: يا رسول الله إني فعلت كذا وكذا. فقال رسول الله -صلى الله عليه وسلم-: "إذا أراد الله بعبد خيرًا عجل عقوبة ذنبه في الدنيا، وإذا أراد به غير ذلك أمهل عليه بذنوبه، حتى يوافي بها يوم القيامة، كأنه عَيْر

ஒருவர், ஒரு பெண்ணைக் கடந்து செல்லும்போது (அவளது அழகால் ஈர்க்கப்பட்டு) அவள்மீது வைத்த பார்வையை எடுக்காமல் நடந்து சென்றதில் ஒரு சுவரில்போய் முட்டிக் கொண்டார். அவரது முகம் முழுக்க இரத்தமானது. அந்த இரத்தக் கோலத்தோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தான் நடந்து கொண்டதைப் பற்றி விவரித்தார். அதற்கு, "அல்லாஹ் தன் அடியாருக்கு நலன் நாடினால் அவருடைய பாவத்துக்கு இவ்வுலகிலேயே விரைவாக அவரைத் தண்டித்து விடுகிறான். அவ்வாறின்றி மறுமை விசாரணைவரையில் அப்பாவத்துக்குத ் தவணை அளிக்க விரும்பினால் அவரைக் கழுதையைப்போல் (பாவப்பொதி) சுமக்க வைத்து விடுகிறான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் : அம்மார் பின் யாஸர் (ரலி) - அஸ்ஸவாயித் 10/192.

"...(இயல்பான) முதல் (வகை) பார்வை அனுமதிக்கப் பட்டது;..."அஹ்ம து(5/353), திர்மிதீ(2777), அபூதாவூது(2149)
Quote | Report to administrator
மு முஹம்மத்
+1 #5 மு முஹம்மத் 2010-10-23 01:02
அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

"// ...(இயல்பான) முதல் (வகை) பார்வை அனுமதிக்கப் பட்டது;..."அஹ்ம து(5/353), திர்மிதீ(2777), அபூதாவூது(2149) //

இயல்பான என்பதை விட தாங்கள் முன்னொரு ஆக்கதில் கொடுத்துள்ள எதேச்சையாக / தற்செயலாக / எதிர்பாராது போன்றது பொறுத்தமான வாசகமாக உள்ளது பார்க்க …

''நான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், ஏதேச்சையாக (அன்னியப் பெண் மீது) பார்வை விழுவதைப் பற்றிக் கேட்டேன். அப்போது எனது பார்வையை (உடனடியாகத்) திருப்பிக்கொள் ள வேண்டுமென அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்க ள்" என்று ஜரீர் பின் அப்துல்லாஹ்(ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள ். (முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத்)
"அலியே! எதிர்பாராது அன்னியப் பெண்ணைப் பார்க்க நேரிட்டால் மீண்டும் பார்க்காதே!. ஏனெனில் முதல் பார்வை உனக்கு (அனுமதிக்கப்பட் டு) உள்ளது. இரண்டாம் பார்வை (அனுமதிக்கப்பட் டது) இல்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள ். (திர்மதீ, அபூதாவூத்)
www.satyamargam.com/.../
Quote | Report to administrator
முஹம்மத் ஆஷிக்
+1 #6 முஹம்மத் ஆஷிக் 2010-10-23 01:49
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாத்துல்லாஹி வ பரக்காதுஹ்.

அன்புள்ள சத்தியமார்க்கம் டாட் காம்,

மிகச்சிறப்பான ஆராய்ச்சி. மிகத்தரமான கட்டுரை. மிக நுட்பமான வாதங்கள். மிகத்தெளிவான வார்த்தைகள். மிக நேர்மையான அணுகுமுறை. முத்தாய்ப்பான முடிவுரை.

ஜசாக்கல்லாஹ் க்ஹைர்.

மா ஸலாம்.
pinnoottavaathi.blogspot.com
Quote | Report to administrator
சஃபி
+1 #7 சஃபி 2010-10-23 12:55
பெண்கள் முகத்தை மறைத்துக் கொள்ளும் பழக்கம் துருக்கியிலிருந ்து தில்லிக்கு வந்தது என்று பாரதி கூறுகிறார்:
Quote:
தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் ...
அந்தத் துருக்கியில் பல்கலைக்கழகத்து மாணவியர் தலைக்குத் துணி போடத் தடை என்பது வேதனைக்குரியது!
Quote | Report to administrator
Basheer
+1 #8 Basheer 2010-10-23 14:25
அஸ்ஸ‌லாமு அலைக்கும்,
அல்ஹ‌ம்துலில்லாஹ்.. அல்லாஹும்ம‌ ஸ‌ல்லி அலா முஹ‌ம்ம‌தின்..

மிக‌ அருமையான‌ நீள‌மான‌ ஆழ‌மான‌ க‌ட்டுரை.
இத‌ற்காக‌ உழைத்த‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி.

ஜ‌ஸாக்க‌ல்லாஹு கைர‌ன்!
Quote | Report to administrator
Fouzul Hassan
0 #9 Fouzul Hassan 2010-10-23 16:38
if any women covering their face them self then what is the rule?
Quote | Report to administrator
முஇ
+1 #10 முஇ 2010-10-23 20:58
Dear Fouzul Hassan, Please read again below, especially point # 2 you will find the answer.

முடிவுரை
முஸ்லிம் சமுதாயப் பெண்கள் எப்போதும் முகத்தைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று நிறுவுவதற்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை என்பதை இங்கு அழுத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுவரை நாம் படித்த குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், வரலாற்று/சமகால நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந் து இரண்டு முடிவுகளை நம்மால் பெற முடிகிறது:

1.பருவமெய்திய முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆடவர்முன் தோன்றும்போது முகத்தை மறைத்துக் கொள்வது இஸ்லாத்தில் கட்டாயமில்லை.

2. தானாக விரும்பி முகம் முழுவதையுமோ கண்கள் தவிர்த்தோ திரையிட்டுக் கொள்வது பெண்களின் தனிப்பட்ட விருப்பம், உரிமை, சுதந்திரம்.
Quote | Report to administrator
முஇ
+1 #11 முஇ 2010-10-23 22:40
சகோ. சஃபி,
வழக்கத்திலி(ருந்த)க்கும் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி 'இந்துத்துவ' தமிழ் பாரதி அறிந்த அளவுக்கு முஸ்லிம்கள் அறியாதிருப்பது விந்தையே!
Quote | Report to administrator
Shafi
+1 #12 Shafi 2010-10-24 20:10
முஸ்லிம் 3972(4316) ஹதீஸில் " நரகவாசிகளுள் இரு பிரிவினரை நான் பார்த்ததில்லை" என்று சொல்லி பின் இரு பிரிவினரை வகைப் படுத்தியது?
Quote | Report to administrator
சத்தியமார்க்கம்.காம்
+1 #13 சத்தியமார்க்கம்.காம் 2010-10-25 01:17
அன்புச் சகோதரர் Shafi,

"நான் அவ்விரு வகையினரையும் பார்த்ததில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுவதில், "எனக்குப்பின் தோன்றும் சமுதாயத்தவர் பார்ப்பார்கள்" எனும் முன்னறிவிப்பு அடங்கியுள்ளது.

ஆடையணிந்தும் நிர்வாணமான பெண்கள், நாகரிக(!) நகரங்களின் சாலைகளிலும் அச்சு ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளி லும் காட்சியளிப்பதில ் நமது காலத்தில் போட்டி நிலவுகிறதே!

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதற்கு அந்த முன்னறிவிப்பு இன்னொரு சான்றுதான், ஐயமில்லை.
Quote | Report to administrator
Masoud
+1 #14 Masoud 2010-10-25 12:48
Assalamu alaikum.

I agree that "covering the face" is not compulsory. But it should be mentioned that "Covering the face" is a desirable act. Because, of the verses of the Quran,

Al-Ahzab - 33:53
O you who believe! Enter not the Prophet's houses, except when leave is given to you for a meal, (and then) not (so early as) to wait for its preparation. But when you are invited, enter, and when you have taken your meal, disperse, without sitting for a talk. Verily, such (behaviour) annoys the Prophet, and he is shy of (asking) you (to go), but Allâh is not shy of (telling you) the truth. And when you ask (his wives) for anything you want, ask them from behind a screen, that is purer for your hearts and for their hearts. And it is not (right) for you that you should annoy Allâh's Messenger, nor that you should ever marry his wives after him (his death). Verily! With Allâh that shall be an enormity. (Al-Ahzab 33:53)

We see here that the "Niqaab" is compulsory for the Prophet's wives. But in this verse there is a mention that," that is purer for your hearts and for their hearts". So, it is purer for all muslim women if they cover their faces. Also, we see in the example of the Sahabah women who used to cover their faces. They knew that it was preferable.

Masoud
Quote | Report to administrator
hameed
+1 #15 hameed 2010-10-25 17:07
Very good and Thanks for Your collect in Al-Quran Vasanam and Khathees.

Many more Thanks for SATHIYAMARKKAM.
Quote | Report to administrator
mafas
+1 #16 mafas 2010-10-27 12:32
neenka mohathuku thira podanum ankirathila niyayam ellame marachi aluthii erukirinka thira poranum ankirathuku atharam neenka kadasiya sonna ehram timila thoranthirukonu m anda valameyana valkaela modi erukonum anduthane arthem. so athu pothum mohatheum, kaiyaum mooduvethekku atharam
Quote | Report to administrator
jaleel
+1 #17 jaleel 2010-11-01 19:26
இஸ்லாத்தினுடைய சட்ட திட்டங்களைப் பொறுத்த வரைலும், எங்கெங்கு வோட்டைகள் இருக் கின்றனவோ அத்தனையும்
அடைக்கப்பட்டுவி ட்டது.வேன்றுமென ்டே செய் வதைத்தவிர,.
முகத்தை மூடிக்கொண்டால் தவறு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
Quote | Report to administrator
nazeerahamed
+1 #18 nazeerahamed 2011-05-20 12:45
this link is ok
Quote | Report to administrator
y.m.anari
+1 #19 y.m.anari 2012-02-04 06:59
ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான் ஹதீஸ் ஒளியில் விளக்கி இருக்கின்றனர். முகத்தை பெண்கள் திரை இட்டு மறைப்பது கூடுதல் பேணுதல் என்ற நிலை இஸ்லாத்தில் இல்லை என்பதை அறிய முடிகிறது. அல்லாஹ் இவர்களுக்கு ஈருலக நன்மையை கொடுப்பானாக. மக்களால் மார்க்கத்தில் நன்மை என்று தவறாக புரிந்துகொண்ட விஷயங்களுக்காக குரான் ஹதீஸ் ஒளியில் நிறைய எழுதவேண்டும்
Quote | Report to administrator
mohammad rafiq
0 #20 mohammad rafiq 2012-02-08 04:19
முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க்கத்திற்கு உட்பட்டது தான் நபி ஸல் அவர்களின் காலத்தில் பெண்கள் முகத்தை திரையிட்டு மறைத்ததை நபி ஸல் அனுமதியளித்துள் ளார் நபி ஸல் அவர்களின் அங்கீகாரம் உள்ளது. எனவே மார்க்கத்திற்கு உட்பட்டது தான் இதனை குழப்பத்தின் காரணமாக முகத்தை மறைப்பதை தவிர்க்க வேண்டுமென்றால் நபி ஸல் அவர்கள் அன்றே தடுத்திருப்பார் கள்
Quote | Report to administrator
Add comment
இது சுதந்திரமான கருத்துப் பகுதி. தங்கள் கருத்தில் பிறர் கண்ணியம் காத்திட வேண்டுகிறோம்.Question / Answer section for Non-Muslims: http://www.satyamargam.com/islam/others.html


சமீப கருத்துக்கள்

செய்திமடல் (Newsletter)

 

சத்தியமார்க்கம்.காம் தள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி!