| பழகு மொழி் (பகுதி-11) |
|
|
| தொடர்கள் - மொழியியல் |
| திங்கள், 12 அக்டோபர் 2009 19:06 |
|
இப்போது எழுத்தியலை நாம் பயின்று கொண்டிருப்பதால் எழுத்துப் போலிகளை அறிந்து கொள்வோம். ஒரு சொல்லில் உள்ள ஓர் எழுத்தை மாற்றி எழுதினாலும் பொருள் வேறுபடாமல் அமைந்தால் அவ்வெழுத்து, போலி எனப்படும். போல வருவது போலி என்றானது. இயல்பான சில எழுத்துகளுக்குப் பகரமாகப் போலி எழுத்துகள் இடம் பெறுவது வழக்கில் உள்ளது என்பதையும் அவ்வாறு எழுதுதல் குற்றமில்லை என்பதையும் தெரிந்து கொள்வதற்குப் போலிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். (1):11 எழுத்துப் போலிகள் எழுத்துப் போலிகள் மூவகைப் படும்.
(1):11:1 முதற்போலி ஒரு சொல்லின் இயல்பான முதலெழுத்துக்குப் பகரமாய், வேறு எழுத்துகள் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது முதற்போலி எனப்படும். (1):11:1:1 'ஐ'காராத்துக்குப் பகரமாய், 'அய்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் : ஐயா=அய்யா; ஐயன்மீர்=அய்யன்மீர் (1):11:1:2 'ஒள'காரத்துக்குப் பகரமாய், 'அவ்' எனும் இரு எழுத்துகள் போலிகளாக எழுதப் படும். காட்டுகள் : ஒளவையார் = அவ்வையார்; ஒளடதம் = அவ்டதம் (1):11:1:3 'ந'கரத்துக்கு 'ஞ'கரம் போலியாக எழுதப் படும். காட்டுகள் : நயம்பட = ஞயம்பட; நாயிறு=ஞாயிறு
(1):11:2 இடைப்போலி ஒரு சொல்லுக்கு இடையில் இயல்பான எழுத்தை விடுத்து வேறு எழுத்தைப் போட்டு எழுதுவது இடைப்போலி எனப்படும். 'அ'கரத்துக்கு 'ஐ'காரம் போலியாக எழுதப் படும். காட்டுகள் : அரயன் = அரையன்; பழமை = பழைமை; இளமை = இளைமை
(1):11:3 கடைப்போலி ஒரு சொல்லின் கடைசியில் உள்ள இயல்பான எழுத்துக்குப் பகரமாய் வேறோர் எழுத்து இடம் பெறுவது கடைப்போலி எனப்படும். (1):11:3:1 மகர ஒற்றுக்கு னகர ஒற்று, போலியாக வரும். காட்டுகள் : அறம்=அறன்; திறம்=திறன் (அறன் அறிந்து வெஃகா அறிவுடையோர்ச் சேரும் திறன் அறிந்து ஆங்கே திரு - குறள்) நயம்=நயன் (நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று - குறள்) குலம்=குலன் (இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலன் உடையான் கண்ணே உள - குறள்) நலம் = நலன்; கலம்=கலன்; நிலம்=நிலன் (1):11:3:2 லகர ஒற்றுக்கு ரகர ஒற்று, போலியாக வரும். காட்டுகள் : குடல்=குடர்; சுவல்=சுவர்; பந்தல்=பந்தர்; சாம்பல்=சாம்பர் (1):11:3:3 லகர ஒற்றுக்கு ளகர ஒற்றும் போலியாக வரும். காட்டுகள் : மதில்=மதிள்; செதில்=செதிள்.
எழுத்தியல் இத்துடன் நிறைவடைகிறது.
சொல்லியல் தொடரும், இன்ஷா அல்லாஹ். <முன்னுரை | பகுதி-1 | பகுதி-2 | பகுதி-3 | பகுதி-4 | பகுதி-5 | பகுதி-6 | பகுதி-7 | பகுதி-8 | பகுதி-9 | பகுதி-10> கருத்துக்கள் (1)
![]() கருத்து எழுதுக :
|
|
M . Muhammad :
"யா அல்லாஹ்! நம் முஸ்லிம் சமுதாயத்துக... |
|
Basheer :
Assalamu alaikum,
Alhamdulillah, Allahumma salli alaa muhammadin..
Nobody can give you freedom. Nob... |
|
முபாரக் அலி :
இதில் ஆச்சரியப் படுவதற்கு அல்லதுஅதி... |
|
Lareena Abdul Haq :
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹ்..... |
|
mohamed ali :
What is the use of going on in argument and nobody can be converted by argument but can be done by ... |
|
fakrudeen ali anwar-Jeddah :
Dear Salma, your great deed is most valuable for all islamic world..keep it up ur standard colors..A... |
|
mohamed ali :
Assalamuallikum,
Islam is for and unity and for the way of life. But it is pity that we fight for th... |
|
Sofya begam :
இஸ்லாத்தின் பார்வையில் "மது அருந்துத... |
|
Basheer :
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்ல... |
|
j.aneess fathema :
அஸ்ஸலாமு அலைக்கும்
mathu arunthuvadu pattri sollungal |
|
j.aneess fathema :
தொழும்போது குர்ஆனைத் திறந்து பார்ப்... |
|
M S K :
// ஒற்றை வசனத்தின் அச்சுறுத்தலில் இடி... |