| ஈகைப் பெருநாள் செய்தி! |
|
|
| இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள் | |||||||||
| செவ்வாய், 30 செப்டம்பர் 2008 01:06 | |||||||||
|
எப்பொழுதும் போல் இதோ இம்முறையும் ஒரு ரமளான் வந்தச் சுவடு தெரியாமல் அதிவேகத்தில் முஸ்லிம்களைக் கடந்து சென்றிருக்கின்றது. இன்று இருப்பவர்கள் இதனைப் போன்ற மற்றதொரு ரமளானைச் சந்திப்பரா? என்பதை அறியார். உள்ளமும் சூழலும் எத்தனை உபதேசங்களைத் தந்திருந்தாலும் அதனைச் சட்டை செய்யாமல் திரிந்தவர்களைக் கூட ரமளான் என்ற இப்புனித மாதம், ஒரு மாதம் முழுமையும் கட்டிப்போட்டு ஆன்மீகப் பயிற்சியளித்திருக்கின்றது. மரணத்தை எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியவர்களான புத்திசாலிகள், இப்பெறற்கரிய பயிற்சியின் மூலம் கிடைத்த மனக்கட்டுப்பாட்டை மீதம் வரும் தனது வாழ்நாளிலும் முழுமையாகப் பேணுவர்.
ஒவ்வொரு ரமளானின் வருகையிலும் அதன் விடைபெறலுக்கு முன்னரும் எண்ணற்ற அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று, இந்தப் புனித மாதம் முழுமையாக ஷைத்தானைக் கட்டிப்போடுவதில் மும்முரம் காட்டும் முஸ்லிம்களில் அநேகர், ரமளானின் விடைபெறலோடு தாம் பேணியக் கட்டுப்பாடுகளுக்கும் விடை கூறி விடுகின்றனர்; தாம் பெற்றப் பயிற்சியைக் காற்றில் பறக்கவிட்டு விடுகின்றனர்.
மற்றும் சிலர், இயற்கையான வாழ்க்கைக்கு ஒன்றிய வழிமுறைகளைத் தரும் இஸ்லாம் தந்த இப்புனித மாதத்தினை வெறும் சடங்காகப் பேணி, அது விட்டுச் செல்லும் யதார்த்த நினைவுகளையும் பாடங்களையும் உயிரோட்டமில்லாத ஆன்மீக வழிபாடுகளில் தொலைத்து விடுகின்றனர்.
விடைபெறும் ஒவ்வொரு ரமளானும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, இரு அதிமுக்கியச் செய்திகளை விட்டுச் செல்கின்றது.
எந்த ரமளானில் வெற்றிக்கான வழிகாட்டி திருகுர்ஆனை இறக்கி வைத்தானோ அதே ரமளானில் அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு எண்ணிப்பார்க்க இயலா வெற்றியையும் இறைவன் பரிசாக அளித்து, அதன் பக்கம் நம்பிக்கையுடன் விரைந்து வர அறிவிப்பு செய்கின்றான்.
இதனைத் தத்துவார்த்தரீதியில் கூட உணர்ந்துக் கொள்ளாத முஸ்லிம்கள், ரமளான் வந்தது; அமல்கள் போட்டி போட்டு செய்தோம். ரமளான் சென்றது; மற்றொரு ரமளானுக்காகக் காத்துள்ளோம் என, எதிர்பார்க்க இயலா எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து, கிடைக்க வேண்டிய வெற்றிகளைக் குழிதோண்டி புதைக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
எனவே தான் ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் ரமளான் வந்து விடுகிறது. ஆனால், அதன் பலனான பத்ர் மட்டும் முஸ்லிம்களுக்கு வருவதே இல்லை.
புத்திசாலி, பட்டதை வைத்து சுதாரித்துக் கொள்வான். இதுவரை பட்டதை வைத்து முஸ்லிம்களும் சுதாரித்துக் கொள்வர்.
சுதாரித்துக் கொண்ட முஸ்லிம்களுக்கு 1430 ஆம் ஆண்டு ரமளான், பத்ரின் வெற்றியைப் பரிசளிக்கட்டும். அதற்கான முன்னேற்பாடுகளில் - திருமறை போதிக்கும் வழியில், தூதர் தம் வழியில் கவனம் செலுத்த இதோ கைவிட்டும் செல்லும் ரமளானாவது முஸ்லிம்களுக்குத் தூண்டுதல் அளிக்கட்டும்!
சுபிட்சமான, அமைதியான வாழ்வு என்பது திருமறையின் போதனைபடி வாழ்வதில் மட்டுமே அமைந்துள்ளது.
அது ஆன்மீக வணக்கங்கள் புரிவதாக இருந்தாலும் சரி; அக்கிரமங்களுக்கு எதிராக தியாகம் புரிந்து போராட்டத்தை வாழ்வாக அமைத்துக் கொள்வதாக இருந்தாலும் சரி!
திருமறை இறக்கம் மற்றும் பத்ரின் வெற்றி நினைவுகளை அசை போட்டு, உற்சாகத்துடன் கொண்டாடும் இப்புனித ஈகைப் பெருநாளில், நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் கலைந்து மக்களிடையே சுபிட்சமும் அமைதியும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்!
சத்தியமார்க்கம்.காம் வாசக நெஞ்சங்களுக்கும் ஏனைய அனைத்துச் சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
கருத்துக்கள் (14)
![]()
வாழ்த்துக்களுடன் வகையான அறி(ற)வுரையும் தந்துள்ளமை நன்றாக உள்ளது.
நோன்பு ஒரு பயிற்சியெனில் அதை நாள்தோறும் செய்ய இயலாததால் ஆண்டுதோறும் செய்கின்றனர். மறந்ததை மீண்டும் நினைவுறுத்தவே அடுத்த ஆண்டு மீண்டும் நோன்பு!
இப்படி மண்ணறை செல்லும்வரை பயிற்சி தொடரும். பலன் மரணத்துக்குப் பின்...
1
September 30, 2008 03:49
//விடைபெறும் ஒவ்வொரு ரமளானும் ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை, இரு அதிமுக்கியச் செய்திகளை விட்டுச் செல்கின்றது.//
மற்றொரு முறை ரமளான் நமக்கு நினவூட்டிச் சென்றிருக்கும் இந்த அதி முக்கியச் செய்திகளை நம் வாழ்வில் பேணி, இறைவன் வாக்களித்திருக்கும் வெற்றிக்கு அருகதையுடையவர்களாக நம்மை ஆக்கிக் கொள்வோமாக!
சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
2
September 30, 2008 04:01
//சுதாரித்துக் கொண்ட முஸ்லிம்களுக்கு 1430 ஆம் ஆண்டு ரமளான், பத்ரின் வெற்றியைப் பரிசளிக்கட்டும்.//
இன்ஷா அல்லாஹ்!
சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துகள்!
அன்புடன்
அப்துல் ரஹ்மான்.
3
September 30, 2008 04:47
வெறுமனே பெருநாள் வாழத்து என்றில்லாமல்
//சுபிட்சமான, அமைதியான வாழ்வு என்பது திருமறையின் போதனைபடி வாழ்வதில் மட்டுமே அமைந்துள்ளது.
அது ஆன்மீக வணக்கங்கள் புரிவதாக இருந்தாலும் சரி; அக்கிரமங்களுக்கு எதிராக தியாகம் புரிந்து போராட்டத்தை வாழ்வாக அமைத்துக் கொள்வதாக இருந்தாலும் சரி!//
என்னும் அருமையான வாசகங்களுடன் ஒரு வித்தியாசமான பெருநாள் வாழ்த்தை 'சத்தியமார்க்கம்' தன் வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளது பாரட்டத்தக்கது
4
September 30, 2008 05:15
//பத்ரின் வெற்றி நினைவுகளை அசை போட்டு, உற்சாகத்துடன் கொண்டாடும் இப்புனித ஈதுல் பெருநாளில், நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் கலைந்து மக்களிடையே சுபிட்சமும் அமைதியும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்!//
யா அல்லாஹ் உலகமணைத்திலும் உள்ள முஸ்லிம்களுக்கெதிரான அசாதாரன சூழ்நிலையைவிட்டும் பாதுகப்பாயாக. ஆமீன்.
5
September 30, 2008 07:56
பயனுள்ள பெருநாள் செய்தி.
சொல்லியிருக்கும் விதம் அருமை!
பாராட்டுகள்!
6
September 30, 2008 10:21
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இணையதள நிர்வாகிகளுக்கும், வாசக பெருமக்களுக்கும் மற்றும் முழு முஸ்லிம்சமுதாய மக்கள் அனைவர்களுக்கும் உள்ளம் கனிந்த ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்
உலகில் சாந்தியும் சமாதானமும் மேலோங்க வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக. ஆமீன்
7
September 30, 2008 12:41
சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்!
முஸ்லிம்களுக்கு எதிரான சூழல் உலகெங்கிலும் விரைவில் மாற இறைவனை இறைஞ்சுவோம்.
அருமையான பெருநாள் செய்தி தந்த சத்தியமார்க்கம் டாட் காம் தளத்தினருக்குப் பாராட்டுகள்!
9
September 30, 2008 14:49
பெருநாள் வாழ்த்துக்களை வெறுமனே சடங்கிற்காக சொல்லி விட்டுப் போகாமல் அழுத்தமான சிந்தனையைத் தூண்டும்படியான வரிகள்.
உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.
10
September 30, 2008 17:52
அப்படியே ! ஆகட்டுமாக. கூடுமானவரை திருக்குர்ஆனுக்கு ஒத்து வாழ்வோமாக. கருத்து வேறுபாடுகளை தவிர்த்து அனைத்து முஸ்லிம்களும் ஒன்று கூட முயற்சி செய்ய பாருங்கள். நாம் விலைகொடுத்து வாங்கும் நமக்கு எதிராக நடக்கும் வஞ்சகம்,ஈனச்செயல்கள்,குற்றப்பரம்பரை,தீவிரவாத மார்க்கம், போன்றவற்றுக்கெல்லாம் காரணகர்த்தாவாகிய பிரிவினைகளை தவிர்ப்போம். அவதூறுகளை தகர்த்தெறிவோம்.பொருந்திக்கொண்டு இதன் மூலம் அல்லாஹ் எங்களுக்கு வெற்றியை வழங்குவாயாக.
அனைத்து முஸ்லீம் சகோதர- சகோதரிகளுக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
மா சலாம்.
அப்துல் அசீஸ்.
11
September 30, 2008 21:59
Assalaamu Alaikkum
//எந்த ரமளானில் வெற்றிக்கான வழிகாட்டி திருகுர்ஆனை இறக்கி வைத்தானோ அதே ரமளானில் அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு எண்ணிப்பார்க்க இயலா வெற்றியையும் இறைவன் பரிசாக அளித்து, அதன் பக்கம் நம்பிக்கையுடன் விரைந்து வர அறிவிப்பு செய்கின்றான்.//
பெருநாள் வாழ்த்துக்களை வெறுமனே சடங்கிற்காக சொல்லி விட்டுப் போகாமல் அழுத்தமான சிந்தனையைத் தூண்டும்படியான வரிகள்.
ALHAMDULILLAH WA JAZAAKALLAHU KHAIRAN,,,,,,,To ALL...
12
October 01, 2008 06:10
சமுதாயத்திற்கு வெறும் பெருநாள் வாழ்த்து மட்டுமல்லாது ஆழ சிந்திக்க தூண்டும் செய்தியை தந்தமைக்கு மிக்க நன்றிகள்
13
October 02, 2008 20:32
ரமலான் சென்று விட்டது;
அமலால் வென்று விட்டோமா?
பகலெலாம் பசித்து இருந்தோம்;
அகமெலாம் 'இறையச்சத்தால்' கசிந்து இருந்தோமா?
உண்ணா நோன்பினால் உடலை வருத்தினோம்;
புண்ணான புறம் பேச்சுக்காக உள்ளம் வருந்தினோமா?
மாதம் முழுவதும் மாமறையை ஓதினோமே...
ஆயுள் முழுவதும் அதன் வழிகாட்டுதலை சாதிப்போமா?
-'கவியன்பன்'கலாம், அதிராம்பட்டினம்.
14
October 04, 2008 16:31
கருத்து எழுதுக :
|
|
சஃபி :
அன்பான ஷாலினி,
உங்களுக்கு அண்மையிலு... |
|
Bharat :
இந்தியாவை துண்டாட, காஷ்மீரத்தை பிரிக... |
|
அ.அப்துல் ஹமீத் :
வெற்றீ பெற்ற்வர்களுக்கு வாழ்த்துக்... |
|
Satyamargam.com :
Dear Shalini,
Thanks for visiting and your valuable comment.
May Almighty in His Infinite Mercy and... |
|
Shalini :
Hai, I am Shalini. I am hindu. But i know all the details about allah.
I want to convert muslim. in ... |
|
vijay :
kudia sekaramaa varuvainga..........
..................by your friend
..........................vija... |
|
ANEES FATHIMA :
அஸ்ஸலாமு அலைக்கும் எல்லா பெண்ணும் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல குறிப்புக்கள் |
|
sarfdin :
அருள் முருகன் சகோதரா
முஸ்லிம்களில் ப... |
|
Naseema :
அறிவுப்போட்டிகளை பல தளங்கள் வெளியிட... |
|
ummu afsy :
salaamz,ALLHA has given eough freedom for woman,so may all muslims and non-muslim must support all m... |
|
MOHAMED RAFI :
RAFI,
THIS VERY INFROMATIVE |
|
A.JAHIR HUSSAIN.Sharjah UAE { ATHALAIYUR } :
அஸ்ஸலாமு அலைக்கும்...
புனித மிகு ரமலா... |